Saturday, February 04, 2012
EN SAMOOGAME ONDRU PADU
என் சமுகமே
உனக்கெதிராக ஊடகங்கள்,
உனைப் பற்றித்தான் நாடகங்கள்
தீவிரவாதி என்று கூறத் திரைப்படங்கள்
திடீர் குண்டு வெடிப்பில் உனது வரைபடங்கள்
உனக்கேதிறாய் வானொலிகள் -அட
உன் மேல் தான் வீண் பழிகள்.
வலை போடும் வலை தளங்கள் ,
வன்முறைக்கும் நீ தான் படைக்கலங்கள்,
பார்க்கும் இடமெல்லாம் தாக்குதல்கள் ,
பாவம் நம் தோழரின் கூக்குரல்கள்,
யார்க்கும் அறியாத போர்க்குற்றங்கள்
யஹூதி நசராவின் வெறியாட்டங்கள்,
மூர்கத்தனமான முறைகேடுகள்,
முடங்கிப்போனது நம் நாடுகள்.
அடிப்பவன் ஏகாதிபதி
எதிர்ப்பவன் தீவிரவாதி
அடிப்படை வாதிகள் என்ற அடை மொழி வேறு
அடிபட்ட பின்னும் எதிர்ப்பில்லை பாரு
அரேபியா இன்று அவனது கையில்,
ஆயில் எல்லாம் அமெரிக்கன் பையில்
அணுவை வைத்து மிரட்டுகிறான்
ஆயுத பலத்தைத் திரட்டுகிறான் ,
அடிமை ஆனது நம் சமூகம்,
அடியில் கிடப்பதும் நம் சமூகம் .
ஊடகங்கள் காட்டும் நாடகங்களை
நாடுகள் பலவும் நம்புகின்றன
விருந்துக்கு அலையும் பருந்துகளாய்
வேகமாய்ப்பாயும் எருதுகளாய்
உன்னை நோக்கியே படை பட்டாளங்கள்
பெட்ரோலுக்காக நமது பெற்றோர்களும்
பிள்ளைகளும் கொல்லப்படுகிறார்கள் .
இஸ்லாம் அழிக்கபடுகிறது
இஸ்லாம் பழிக்கப்படுகிறது
விசுவாசியின் மீது
வஸ்வாஸ் திணிக்கப்படுகிறது.
நாடுகள் நம் கையில்
அதிகாரம் அமெரிக்காவில்.
நியுக்கிளியர் நம் கையில்
இருக்கக்கூடாது என்று
நியுயார்க் விரும்புகின்றது.
வியூகம் நடக்கிறது
விபரீதம் நடக்கிறது
போர் என்ற ஆபத்தில் சிக்கி
போர் ஆடுது நம் சமூகம்
யார் தொடுத்த அம்போ இன்று
பலியாகுது நம் சமூகம்
எரித்துக்கொல்வதே எதிரிகளின் திட்டம்
எதிராய் ஆகிறது அனைத்துலகச் சட்டம்
சோதனை என்ற பெயராலே
உனக்கு எத்தனை சோதனைகள். By kadayanallur hameem
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment