Facebook Twitter RSS

Saturday, February 04, 2012

Widgets

மீண்டும் ஒலிக்குமா? அஹமது அலியின் குரல் !!"பழனி பாபா"

ஓ ர் உயிர் ஒரு நபர் 1950 நவம்பர் 14 ம் நாள் என் வி. முகமது அலி மற்றும் கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருடைய பெயர்"அஹமது அலி" என்பதாகும். மக்களால் "பழனி பாபா" என்று அழைக்கப்பட்டார் . பழனியிலிருந்து 4கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது புது ஆயக்குடி என்னும் கிராமம். இதுதான் தாய்வழி பூர்வீகம். தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பாபாவும், அவரதுசகோதர சகோதரிகளும் குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றனர். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புது ஆயக்குடியில்உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயேதொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் பாசப்பிணைப்புகளை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் பாபா. எம். ஜி. ஆர். ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னைக் கோட்டைக்குள் நுழையத் தடை என அரசானைவெளியானவுடன் தான் யார் இந்த பழனிபாபா என்று மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக பாபா அவர்கள் மூலம் எம்.ஜி.ஆரை வசைபாட மேடை அமைத்துத் தந்தது. எம். ஜி. ஆர். மறைவுக்குப்பின் ஆட்சியமர்ந்த திமுக, இந்து மேல் ஜாதி சமூகத்தினரின் வெறுப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத கலைஞர் அரசு பாபா அவர்களின் மேல் முதன்முறையாக குண்டர் சட்டத்தை பிரயோகித்து சிறைக்குள் தள்ளியது. திமுக அரசும் தனது முதுகில் குத்தியபோது பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத் தந்தது. அவரதுநடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்க வைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), கொடிய தடாசட்டம் ஆகியவைகளும் அவரை பதம் பார்த்தன. முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தது. பின்தொடர்ந்தோர் சிறிது காலம் மருகி நின்றபோதும் பழனிபாபா அவர்கள் மனம் தளரவில்லை. தனது இருதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் மணம் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார்.இஸ்லாமிய மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அல்லாஹ்வின் பாதையில் அணி திரட்டினார். இந்த காலகட்டத்தில் தான் மதவெறி சக்திகளுக்கு பழியாகிய பாபா, 1997 ஜனவரி 28ஆம் நாள் (ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் முதல்நாள்) இரவு ஒன்பதரை மணிக்கு தனது வாகனமான ஜீப்பில் அமர்ந்திருந்த பாபா அவர்களை 6 பேர் கொண்ட கொலைவெறி கும்பலால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். (இன்னாலில்லாஹி..,) பாபா அவர்களின் காலத்தில் தனது வீரவுரைகளில் ஒன்றை மட்டும் அடிக்கடி வலியுறுத்துவார், 'இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல' என்பார். மாற்று மதச் சகோதரர்களின் அமைப்புகள் துணிந்த அளவு கூட நமது சமுதாயத்தின்அமைப்புகள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் கூறிய தத்துவத்தை உள்வாங்கி இயக்கங்கள் மூலம் உண்டான பிணக்குகளை களைந்து இஸ்லாமிய சமூகத்தின் வெற்றிக்கு அல்லாஹ்வின்பாதையில் அயராது உழைப்போம் என உறுதிஏற்போம். கொள்கை மாறா மறவனே..! அரசியல் அரங்கில் அனாதைகளாக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை 'உன் வெற்றி உன் கைகளில்' என்று கூறி அறுபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றெடுக்க முடியும் என தன் சமூகத்திற்கு தெளிவுபடுத்தி, அனைத்து ஜமாஅத்துகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதற்கு ஐக்கிய ஜமாஅத் பேரவை எணும் பெயரிட்டு தனது இறுதிக் காலங்களில் சூறாவளிப்பயணம்மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். தனது எழுச்சியுரையின் மூலம் தமிழின சமூகத்திற்கே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மார்க்கத்தால் இஸ்லாமியன் இனத்தால் திராவிடன் மொழியால் தமிழன் தேசத்தால் இந்தியன் , எனும் புரட்சிமிகு சிந்தனையை இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில் விதைத்தார். தலித் இன சமூக மக்களின் விடுதலைக்குவித்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தனது வரலாற்று உரைகளின் மூலம் இஸ்லாமியர் சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர் பழனிபாபா அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அம்பேத்கார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத அரசியல் கட்சியை அடியோடு புறக்கணித்து விடு என ஒரு புதிய பாதையை அரசியல் களத்திலே வகுத்து தந்தவர். சிம்மாசனங்கள் அவரை சிறைபடுத்திய போதும் சீரான என் மார்க்கத்தை விட்டு சிறிதளவும் பிரளமாட்டேன் என்று வெற்றிக்கும் வீர மரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன் தான் பழனிபாபா. சொல்லாலும், செயலாலும், புறத்தாலும்,அகத்தாலும், தியாக உணர்வு ஒன்றையே நிலைப்படுத்தினார். இஸ்லாம் எனும் கட்டிடம் தியாகம் எனும் அஸ்திவாரத்தினால் உருப் பெற்றது என உலகுக்கு உணர்த்தினார். இஸ்லாமிய சமூகத்திற்குள் அனேக அரசியல் பிரிவுகள் இருக்கலாம் ஆனால், இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவுகளே இருக்கக்கூடாது, முடியாது என மேடைக்கு மேடை தனது சொற்பொழிவால் பிரகடணப்படுத்தினார். இன்றைய காலகட்டத்தில் பாபா அவர்கள் இருந்திருக்கக்கூடாதா..? என உணர்ச்சிமிக்க இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவே வருத்தமுறுவதை செவியுறும்போது பாபா அவர்கள் வகுத்துத்தந்த பாதையே இறுதித் தீர்வாக இருக்க முடியும் என அறியமுடிகிறது...

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets