ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமேதும் இஸ்ரேலிடம் இல்லை என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை NBC செய்தி சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் இன்னமும் உறுதியான முடிவேதும் எடுக்கவில்லை. அவர்கள் என்ன செய்யவெண்டுமோ அதையே தீர்மானமாக எடுப்பார்கள் என நான் நினைக்கவில்லை. நாங்கள் பேச்சுவார்த்தையின் ஊடாகவே இதற்கு தீர்வு காண முனைகிறோம். தற்போதைக்கு ஈரான் மீதான
பொருளாதார தடைகள், அந்நாட்டிற்கு கடும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது.
தமது அணு ஆயுத திட்டத்தை கைவிடுவதாக ஈரான் அறிவிக்குமாயின் உடனடியாக அத்தீர்மானம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூடுதல் கவனம் செலுத்டும். எனினும் இப்போதைக்கு இப்பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக்கொள்ள முனைகிறோம் என்றார்.
No comments:
Post a Comment