Facebook Twitter RSS

Thursday, February 09, 2012

Widgets

குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வி : கடும் கண்டனம்



Gujarat high court condemned to Narendra Modi Government.அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியை தழுவியதாக குஜராத் மாநில உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.மாநில அரசின் மெளனமும்,புறக்கணிப்பும் மாநிலம் முழுவதும் கலவரம் பரவ காரணமானது என ஆக்டிங் முதன்மை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி ஜெ.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன்
பெஞ்ச் சுட்டிக்காட்டியது.
கலவரத்தில் மத ஸ்தாபனங்கள் அதிகமாக அழிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 600 மத ஸ்தாபனங்களை மீண்டும் கட்டுவதற்கு நிதியை அளிக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இனப் படுகொலையின் வேளையில் தகர்க்கப்பட்ட வீடுகள் மற்றும் வியாபாரா ஸ்தாபனங்களை புதுப்பிக்க பணம் அளித்த அரசு மத ஸ்தாபனங்களின் மராமத்துப் பணிகளுக்காக நிதி அளிக்கும் பொறுப்பு உள்ளது. மத ஸ்தாபனங்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசியல் சட்டம் பிரிவு 27-இன் படி சட்ட மீறல் என அரசு வாதிட்டது.
இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத் என்ற அமைப்பு அளித்த மனுவில் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தது.
முதன் முறையாக குஜராத் இனப்படுகொலை வழக்கில் ஒரு நீதிமன்றம் மோடி அரசை நேரடியாக குற்றம் சாட்டுகிறது என இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் எம்.டி.எம்.ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets