Facebook Twitter RSS

Wednesday, November 28, 2012

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உலகெங்கிலும் வாழும் தமிழக முஸ்லிம்களிடையே புதைந்து கிடக்கும் பொக்கிஷமான எழுத்தாற்றலை வெளிக்கொண்டு வரவும், நம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை நம் சமூகத்திடம் இருந்தே பெரும் உயர் நோக்குடனும், உங்கள் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!!       ISLAMIYA PENMANI

இன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு தலைப்புகளில் தமிழக அளவில் கட்டுரைப் போட்டி நடத்தி, இஸ்லாமியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வையும் நம் மக்களில் இருந்தே பெற்று, அந்த தீர்வை நோக்கி பயணம் செய்யும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

பேப்பர் கப் உடல் நலத்திற்கு கேடு

paper-cup
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்த பின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில்பயன்படுத்தும், பேப்பர் “கப்’ களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

Tuesday, November 27, 2012

முர்ஸி ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் மோதல்: ஒருவர் பலி!


1 Dead, 40 Hurt in Egypt
கெய்ரோ:எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டாமன் ஹவ்ரில் நைல் டெல்டாவில் உள்ள இஃவான் அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தியபோது இரு பிரிவினரும் மோதிக்கொண்டனர். 15 வயதான இஸ்லாமிய ஊழியர் ஃபாத்தி முஹம்மது மரணமடைந்தார். இவர் இஃவான் இயக்கத்தைச் சார்ந்தவர் ஆவார்.
அரசியல் சாசனத்தை தயாரிக்கும் கான்ஸ்ட்யூவண்ட் அஸெம்பிளியை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே என்ற அறிக்கையை முர்ஸி வெளியிட்டதை தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது. முர்ஸிக்கு எதிரான எதிர்ப்பின் பின்னணியில் சியோனிச ஆதரவாளர்கள் இயங்குவதாக கூறப்படுகிறது.

எகிப்து:முர்ஸிக்கு எதிரான போராட்டத்திற்கு நீதிபதிகள் அழைப்பு!


Egypt's judges call for strike over Morsi decree
கெய்ரோ:கூடுதல் அதிகாரங்களை தம் வசப்படுத்தி அதிபர் முஹம்மது முர்ஸி வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டம் நடத்த எகிப்தின் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உயர்மட்ட நீதிபதிகளின் குழு அவசர கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தரவை வாபஸ் பெறும் வரை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதிபருக்கும், நீதிபதிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார் என்று சட்ட அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடுமையான விமர்சனங்களை சந்தித்த தலைமை அரசு தரப்பு வழக்குரைஞர் முகைப் மஹ்மூதை முர்ஸி பதவியை விட்டு நீக்கியது நீதிபதிகளை கோபம் அடையச் செய்துள்ளது. இவரை வெளியேற்றியது முபாரக் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைச் செய்வதற்கு வழி வகுக்கும் என்று நீதிபதிகள் சந்தேகிக்கின்றனர். முர்ஸியின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகப் போவதாக அப்துல் முகைப் மஹ்மூத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அனைத்து வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் பணியை நிறுத்தி விட்டு முர்ஸியின் உத்தரவிற்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Thursday, November 22, 2012

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)


ஆஷுரா நோன்பு
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள்நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில்நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

Monday, November 19, 2012

யெஹ்யா அய்யாஸ் - ஷஹாதத் தாக்குதலின் தந்தை - Re-Publish

by: Abu Sayyaf      யெஹ்யா அய்யாஸ். பலஸ்தீனத்தின் மேற்குக்கரை ஈன்றெடுத்த இன்னொரு போராளி. ஒரு தசாப்பத காலத்திற்கு இஸ்ரேலிய அரசையும் ஸியோனிஸ்ட்களையும் கலங்கடித்த போராளி. சமகால வரலாற்றில் வித்தியாசமான போரியல் முறைகளை அறிமுகப்படுத்திய ஓருவர். பாலஸ்தீனத்தில் மூன்று திருப்புமுனைகள் உள்ளது.
முதலாவது யாஸிர் அரபாத். இவரது வருகையும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (P.L.O. - PALASTAINE LIBERATION ORGANISATION) உருவாக்கமும். தளபதி அபூ ஜிஹாத்துடன் கூட்டிணைந்து இவரால் கட்டியெழுப்பப்பட்ட அல் பத்தாஹ் (AL - FATHAH) அமைப்பின் கரந்தடி தாக்குதல்களால் இஸ்ரேலிய அரசிற்கு ஏற்பட்ட இழப்புக்களும் அச்சங்களும் ஏராளம். உலகலாவிய அன்றைய முஸ்லிம்களின் போராட்டத்தில் (70களில்) யாஸிர் அரபாத் முக்கிய கதாநாயகன். இவரை போலவே பலஸ்தீன விடுதலை இராணுவ (P.P.L.F. - POPULAR FRONT OF LIBERATION PALASTINE)தலைவர் டாக்டர் ஜோர்ஜ் ஹபாஸ். ஏனைய சம கால கெரில்லா அணி தலைவர்களான பின் ஜிப்ரீல், நயி பெரி  மற்றும் அபூ நிதால் (JIHAD COUNCIL) போன்றோரது வரவு.

இரண்டாவது கட்டம் இன்திபாதாவும் ஹமாஸின்உருவாக்கமும். இந்த போராட்டம் பற்றி நாம் நிறையவே அறிந்துள்ளோம். சேஹ் அஹ்மத் யாஸீனின் வழிகாட்டலும்டாக்டர் ரன்தீஸி போன்றோரது தலைமைத்துவமும் பாலஸ்தீன போராட்டத்தில் இன்னொரு மைல்கல். மக்கள் போராட்டம் மட்டுமல்ல மக்கள் அரசியலின் உண்மையான பரிமாண நிகழ்வு அங்கே மெய்பிக்கப்ட்டது. இன்றும் அது தொடர்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

மூன்றாவது யெஹ்யா அய்யாஸின் வரவும் அவர் அறிமுகப்படுத்திய தற்கொலை தாக்குதல் யுக்தியும். இவரது போராட்ட முறைமைக்கு அடித்தளம் அல் இஹ்வானுல் முஸ்லிமீனது பயிற்சியின் (தர்பியத்) வடிவாய் வந்ததே.
இன்திபாதாவுடனும் ஹமாஸ் உடனும் நெருக்கமான ஒரு போராட்ட ஒழுங்கியல் என்றாலும்இவரது பாணி தனியானது. திட்டமிடலில் ஆரம்பித்து தாக்குதலை நிகழ்த்தி அதன் பெறுபேறுகளை அறியும் வரை ஒரு அலாதியான தனி மனித தாக்குதல் முறைமையினை நாம் காணலாம்.

இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமினது முக்கிய பங்குதாரர் இவர். தற்கொலைத் தாக்குதல் இதற்கு முன்பு லிபியாவில் உமர் முக்தாரினாலும், லெபனானில் அமெரிக்க மெரைன் தளத்தின் மீதஅபுல் அப்பாஸினாலும் நிகழ்த்தி காட்டப்பட்ட ஒன்றே. வெடி குண்டுடன் சென்று வெடிக்க வைப்பது மட்டும் தற்கொலைத் தாக்குதல் என்று அர்த்தப்படாது.
தாம் இறக்கப் போகிறோம் எனத் தெளிவாகத் தெரிந்த நிலையில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களும் தற்கொலைத்   தாக்குதலிற்கு ஒப்பானவையே.  
 எகிப்தில் அன்வர் சதாதை சுட்டுக்கொன்ற சகோதரர் இஸ்லாம் பூலியும் ஒரு தற்கொலை போராளியாகவே தாக்குதலை மேற்கொண்டார்.

திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கையில் வெடிப்பை (Thundaring) மேற்கொள்ளுபவர் மட்டும் தற்கொலையாளியல்ல சூட்டணியும் (Lightning) தேவையேற்பட்டால் வெடிப்பு அணியாக அதாவது தற்கொலை தாக்குதல் அணியாக மாற தயார் நிலையில் இருக்க வேண்டும். மொத்தத்தில் அனைவருமே தற்கொலை போராளிகள் தான். இது ஒரு தாக்குதல் திட்டத்தின் பிரதான நாடி.

யெஹ்யா அய்யாஸின் தற்கொலை தாக்குதல் பாணி இதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டது. தனி மனித தாக்குதல் அணியாக செயற்படும் யுக்தி இவரது.(One Man Army) சண்டையை இஸ்ரேலின் இதயத்திற்கு அதாவது டெல் அவிவிற்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.
 
யுத்தத்தின் ரணம் எவ்வளவு வழிக்கும் என்பது ஸியோனிஸ யூத நாய்களிற்கு தெரிவதில்லை. ஆனால் அய்யாஸ் அவர்களிற்கு புரிய வைத்தார். ரத்த வாசனையை ஒவ்வொரு நாளும் யூத தெருக்களில் நுகர வைத்தார். யூதர்கள் அஞ்சி நடுங்கி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் உள்ள குடியிருப்புக்களை துறந்து செல்லும் அளவிற்கு அவரது தாக்குதலின் வீச்சு எல்லை இருந்தது.

பயங்கர ஓசையுடனும் அதிர்வுடனும் வெடிக்கும் ஒரு குண்டு ஆயிரம் யூத உள்ளங்களை ஆட்டங்காண வைத்தது. இஸ்ரேலின் நிச்சயமற்ற தன்மையை ஸியோனிஸ்ட்களிற்கு உணர்த்தியது.ரத்தம் தோய்ந்த ஒவ்வொரு பலஸ்தீன தாயின் தலை மயிரிற்கும் கணக்குத் தீர்த்த பொற்காலம் அது.

மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பல நவீன யுக்திகளை கைக்கொண்டவர் அய்யாஸ். எதிரியின் இடத்திற்கே சென்று தாக்குதலை மேற்கொள்ளல் குறைந்த செலவிலான மூலப்பொருட்களை கொண்டு குண்டுகளை தயாரித்தல் யூத நாய்களிற்கெதிரான உளவியல் யுத்தத்தை நிகழ்த்தியமை என அவரின் ஆற்றல் பாலஸ்தீன் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. முழு உலகுமே மீண்டும் ஒரு முறை பலஸ்தீனை திரும்பிப் பார்க்க வைத்தது.

ஆறு நாட்கள் நடைபெற்ற அரபு யுத்தத்தைவிடவும் இஸ்ரேலிய அரசு இயந்திரத்தை அதிர வைத்த தாக்குதல் பாணி அது. இன்று ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் நிகழ்பவை அதன் பரிணாமங்களே.
 
எந்த வித இழப்பும் இன்றி ஒரு அரசையே ஆட்டங்காண வைத்த அந்த தாக்குதல் முறை இன்று வரையும் வியந்து பேசப்படும் ஒரு விடயமாகும். கெரில்லா யுத்தவியலில் ஜெனரல் கியாப் மற்றும் சன் சூ போன்றவர்களிற்கு நிகராக அய்யாஸ் உயர்ந்து நிற்கிறார்.

தனி மனித பண்பிலும், சிறந்த குணாதிசய நடவடிக்கையிலும், இறுக்கமான இராணுவ செயற்பாட்டிலும், இரகசியம் பேணுவதிலும், உறுதியான உள்ளத்திலும் என இவரது ஆளுமைகள் ஒவ்வொரு முஜாஹிதும் பார்த்து பழக வேண்டியவையாகும். இவருடைய இந்த தன்மைக்கு அடிப்படை ஹமாஸ். அதற்கு அடிப்படை இஹ்வான்களின் தரமான தர்பியத்.

அவரின் மரணம் இஸ்லாத்தின் எதிரிகளான ஸியோனிஸ்ட்களால் மிகவும் நுட்பமான முறையில், துல்லியமாக கிடைத்த உளவுத்தகவலின்  அடிப்படையில், மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கப்பட்டது. (அல்லாஹ் நாடினால் உயர்தரமான ஜன்னதுல் பிர்தவ்ஸில் ஏனைய சுஹதாக்களுடன் இருப்பார்)

அவரின் மரண ஊர்வலத்தில் திரண்ட மக்கள் கூட்டம் முழு காஸாவின் சனத்தொகையில் அரைவாசி பேர் என அன்றைய ஊடகங்கள் தெரிவித்தன. அவரின் ஜனாஸா நல்லடக்கத்தின் பின் அவர் பற்றி பேசிய பலரின் கருத்துக்களையும் பார்க்கும் போது அவரை நம் வாழ் நாளில் சந்திக்காமல் விட்டது பெரிய இழப்பு போல உணர வைக்கிறது.
*************************************************************
 -------------------------------------------------------------------------------------------------------
இஹ்வான்களின் தர்பியத் எனும் போது சுன்னாவில் தர்பியத் உண்டா எனும் ஸலபிய கேள்விகள் எழலாம். இங்கு அதுவல்ல விடயம். பயிற்ச்சி. உள்ளத்தை கட்டுப்படுத்தும் இச்சைகளை அடக்கும் மனதை அடக்கி ஆளும் சித்திரவதைகளை தாங்கிக் கொள்ளும் போரியலில் வரும் கஸ்ட துன்பங்களை அல்லாஹ்விற்காக பொருந்திக் கொள்ளும் பயிற்ச்சி. இஹ்வான்களை விட தரமான தர்பியத் முறைமை நான் அறிந்த வரையில் உலகில் யாரிடமும் இல்லை. அவ்வளவுதான். (கைபர் தளம் இஹ்வான் சார்ந்தது அல்ல)

தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று எனும் ஸலபிய கருத்தியல் கோட்பாடுகளும் சமகாலத்தில் இருக்கிறது. இந்த கட்டுரையில் அதை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாற்ற விரும்பவில்லை.

செய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(றஹ்)  அவர்களது தர்ஸில் (பாட வகுப்பில்) ஒரு முறை கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.

"ஒரு பெரிய குஃப்ரிய இராணுவம் முஸ்லிம்களை தாக்க தயார் படுத்தி வருகிறது. அவர்கள் எம்மை நெருங்கியுவுடன் எதிர் தாக்குதல் நடாத்தினால் எமது பிராந்தியங்கள் பாதுகாக்கப்படும். அவர்களும் அழிக்கப்படுவார்கள். ஆனால் எமக்கும் எதிரிக்கும் இடையில் ஒரு முஸ்லிம் கிராமம் உண்டு.  அந்த கிராம முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டுமானால் எதிரிகள் அந்த கிராமத்தை நெருங்க முன்பதாக அவர்களிடம் சென்று தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் என்ன செய்வது யா சேகுனா?" இது தான் கேள்வி.

 "நீங்கள் செல்ல வேண்டாம். அந்த முஸ்லிம் கிராமம் அழிக்கப்படட்டும். அவர்கள் உங்களிற்காக (உங்கள் பாதுகாப்பிற்காக) மரணிக்கட்டும். சிறு தொகையினர் குர்பானியாக்கப்பட்டு பெருந்தொகையினர் பாதுகாக்கப்படட்டும்". இதுவே இமாமின் பதில். இது எதை உணர்த்துகிறது?....... முடிவு உங்கள் சிந்தனைக்கு.

இமாம் இப்னு தைமிய்யா (றஹ்) ஸலபிகளிடத்தில் மிகவும் 
 பெருமதிப்பிற்கு உரிய இமாம். இமாம் இப்னு ஹன்பலின் பேரன். இவரது 
 மாணவர்களும் ஸலபிகளால் போற்றப்படுபவர்கள் ஆவார்கள். 
(இமாம்இப்னு கையூம் அல் ஜவ்ஸி,  
இமாம் ஹாபிழ் தஹாவி,  
இமாம் இப்னுகதீர் அல் இமாமுல் மக்திஸ், 
இமாம் இப்னு றாஸிக், 
இமாம் இப்னு ஹரப்,  
இமாம் இப்னு முப்தி லீகி,  
இமாம் ஷம்ஸுத்தீன் அல்காரீரி, 
இமாம் தாஜுத்தீன்,  
இமாம் ஷம்ஸுத்தீன் இஸ்பஹானி) SOURCE KHAIBARTHALAM

Saturday, November 17, 2012

பாலஸ்தீன் விவகாரம் அதில் வெட்கப்பட வேண்டிய உண்மை என்ன ?


              
 பார்க்கும் கோணத்தில் இருந்துதான் தீர்வின் தேடல்களும் இருக்கும் .பாலஸ்தீன் விவகாரம் தொடர்பில் முஸ்லீம் உம்மாவின் நிலைப்பாடுகள் இவ்வாறுதான் அமைந்துள்ளன . இஸ்லாத்தின் பொது எதிரியான யஹூதி ,நசாரா தொடபில் உணர்வு  நிலையும் ,நடவடிக்கை நிலையும் இரு வேறுபட்ட கருத்தியல்களை சமரசப்படுத்தி திருப்தி காணுவது தான் முஸ்லீம் உம்மாவின் முடிவாக இருக்குமானால் எதிரியின் மேலாதிக்கமும் அவனது அரசியல் இராஜதந்திரமும் வெற்றி பெற்றுள்ளது எனும் மோசமான செய்தியை விட இன்னொரு கருத்தை எம்மால் கூறமுடியாதுள்ளது .

புரட்சி என்றால் என்ன? என்பதை உலகிற்கு கற்றுக்கொடுத்தது எகிப்து!-யூசுஃப் அல் கர்ழாவி!


yusuf al kardawi
கெய்ரோ:புரட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உலகிற்கு எகிப்திய மக்கள் கற்றுக்கொடுத்ததாக 70 ஆண்டுகள் கழித்து எகிப்தின் புகழ் பெற்ற அல் அஸ்ஹர் மஸ்ஜிதில் ஆற்றிய வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் உலகப்பிரசித்திப் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி கூறினார்.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இளைஞர்களும், பெண்களும், வயோதிகர்களும் இணைந்து ஐக்கியத்துடன் செயல்பட்டதால் புரட்சி சாத்தியமானது என்று கர்ழாவி கூறினார். ஆனால், பால் குடிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட எனது சமூகத்தை மிகவும் மிருகத்தனமான முறையில் கொலை செய்யும் பஸ்ஸாருல் ஆஸாதின் செயல்களை வன்மையாக கண்டித்தார் கர்ழாவி.

களத்தில் QASSAM SPECIAL FORCES - திகைப்பில் தஜ்ஜாலிய இராணுவம்


by:Abu Sayyaf     Q.S.F.  (QASSAM SPECIAL FORCES) பலஸ்தீனியர்கள் அறியாத பெயர். ஆனால் நேற்றைய தினம் காஸாவின் பட்டி தொட்டி எங்கும் உச்சரிக்கப்படும் பெயரும் இதுவே. பலஸ்தீனர்களின் மண்ணை யூதர்கள் அபகரித்து அதில் “இஸ்ரேல்” என்ற ஸியோனிஸ அரசை நிறுவிய பின்னர், அவர்களின் மிருகத்தனமான அநியாயங்களை தடுக்கவும், இழந்த தாய் மண்ணை மீட்கவும், புனித ஆலயமான அல்-அக்ஷாவை கைப்பற்றவும் இன்று வரை பலஸ்தீனர்கள் போராடி வருகின்றனர். ஆனால் ஆரம்பம் முதல் இந்த நிமிடம் வரை அவர்களது சண்டைக்களங்கள் என்பது பெரிதும் கெரில்லா யுத்த களங்கள் போலவே அமைந்துள்ளன. போராளிகளும் மரபு சமரணியாக அல்லாமல் திடீர் தாக்குதல், பீஸபீல் தாக்குதல் போன்ற களங்களையே திறந்திருந்தனர் பலஸ்தீனில். 

அஸ்ஸாமில் தொடரும் கலவரம்:ராணுவம் கொடி அணிவகுப்பு! போடோ தலைவர் கைது!


assam victims
குவஹாத்தி:கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. ஐந்து கம்பெனி ராணுவப்படையினர் எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொக்ராஜரில் வியாழக்கிழமை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இரண்டு கம்பெனி ராணுவத்தினர், கொக்ராஜரிலும், மூன்று கம்பெனி ராணுவத்தினர் கோசைகானிலும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு உத்தரவை மீறிய போடோலாண்ட் மக்கள் முன்னணி (பி.பி.எஃப்) தலைவர் ஹேமனேந்திரநாத் பிரம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை இழிவுப்படுத்தும் காட்சிகள்: நீக்குவதற்கு இயக்குநர் ஒப்புதல்!


Thuppaki-team-with-muslims-
சென்னை:நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பாக அண்மையில் தீபாவளி தினத்தில் ‘துப்பாக்கி’ என்ற திரைப்படம் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டது. இப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அவதூறான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.

ஃபலஸ்தீன் விவகாரம்!-எர்துகானும், முர்ஸியும் தொலைபேசியில் பேச்சு!


erdogan and mursi
கெய்ரோ:யூத ராணுவம் காஸ்ஸாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் நிலைமைகளை மதிப்பீடு செய்யவும், தீர்வுகளைக் குறித்து ஆராயவும் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானும், எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியும் தொலை பேசியில் விவாதித்தனர்.
எர்துகான் எகிப்திற்கு வந்தால் ஃபலஸ்தீன் விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிப்போம் என்று முர்ஸி கூறினார். காஸ்ஸா தாக்குதலை இரு நாடுகளும் ஏற்கனவே கண்டித்திருந்தன.

Friday, November 16, 2012

போதையில் மிதந்த தமிழகம்! – 2 நாளில் ரூ.270 கோடி விற்பனையாம்!


போதையில் மிதந்த தமிழகம்!
சென்னை:தனிமனித வாழ்க்கையையும், குடும்பத்தையும், சமூகத்தையும் சீரழிக்கும் மதுவை மக்கள் நலன் கருதாமல் வருமானத்தை குறிவைத்து அரசே கடைகளை நடத்தி வரும் அலங்கோலம் தமிழகத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.270 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த தீபாவளியன்று ரூ.20 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபான விற்பனை நடந்துள்ளது. பண்டிகை நாட்களில் வழக்கமாக விற்பனை சூடு பிடிக்கும். தீபாவளி என்றால் உச்சத்தை தொடும்.

அஸ்ஸாமில் வன்முறைக்கு ஓய்வில்லை! -2 பேர் சுட்டுக்கொலை!


Assam violence- shot dead woman, another injured
குவஹாத்தி:அஸ்ஸாமில் கொக்ராஜர் மாவட்டத்தில் போடோலாண்ட் ஜனநாயக முன்னணியின்(என்.டி.எஃப்.பி) பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் பிரிவினர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 2 பேர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டனர். இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு கொக்ராஜரில் சந்திரசீலா ரிசர்வ் காட்டுப் பகுதியில் நுழைந்த என்.டி.எஃப்.பி கும்பல் ஐந்து வீடுகள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். இன்னொரு நபருக்கு காயம் ஏற்பட்டது. இப்பகுதியில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் ஸல்பாரி கிராமத்தில் 2-வது சம்பவம் நடந்தது. இத்தாக்குதலில் ஆசிரியர் யூனியன் தலைவர் கொல்லப்பட்டார். ஆறு வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.

ஃபைஸாபாத் கலவரம்:பின்னணியில் சங்க்பரிவாரத்தின் சூழ்ச்சி!


Faizabad violence was well-planned
லக்னோ:2 வாரங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தின் ஃபைஸாபாத்திலும் அருகில் உள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் முன்னரே சங்க்பரிவாரத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தியாகப் பெருநாளுக்கு சற்று முன்பாக நிகழ்த்தப்பட்ட கலவரம், சங்க்பரிவாரத்தின் சதித்திட்டம் என்று ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் காலிக் அஹ்மத் கானின் தலைமையிலான குழுவினர் தயாராக்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் உயர் தலைவர் படுகொலை!


Hamas's military chief Ahmed Al-Jabari
காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஹமாஸின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் பிரிகேடின் முக்கிய கமாண்டர் அஹ்மத் அல் ஜஃபரி(வயது52) இஸ்ரேலின் அநீதமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். காஸ்ஸாவில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் கொலைச் செய்யப்படும் மிக உயர் தலைவர் ஜஃபரி ஆவார்.
இஸ்ரேலின் கொலைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் ஜஃபரி. காஸ்ஸாவில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஓட்டுநருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஆறு ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

Friday, November 09, 2012

லண்டன் உலகத் தமிழர் மாநாடு ஆரம்பமானது


 
லண்டன் உலகத் தமிழர் மாநாடு ஆரம்பமானது

இலங்கைத் தீவில் நடைபெற்ற இன அழைப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரனை ஒன்று ஆரம்பிக்கபடவேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு தற்போது லண்டன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
 

மூன்று நாட்கள் தொடர்ந்து பல அமர்வுகள் மூலம் நடைபெறப்போகும் இந்த மாநாட்டை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரித்தானிய பாராளுமன்ற குழுத்தலைவர் திரு . லீஸ் கொட் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
பிரித்தானிய தமிழர் பேரவையின் அனுசரனையோடு நடைபெறும் மாநாட்டில் உலகப்பரப்பில் பரந்து வாழும் பெரும்பாலான அனைத்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்கள்.

Home About Us News Entertainment Photos Links Contact Us Free Ads எந்த நேரத்திலும் ஈரானை தாக்குவோம்: இஸ்ரேல் பிரதமர் மிரட்டல்


ஈரான் அணுகுண்டு தயாரித்து வருவதால் அந்த அணுகுண்டை தங்களுக்கு எதிராக ஈரான் பயன்படுத்தும் என்று இஸ்ரேல் கருதுகிறது. எனவே ஈரானுக்கு, இஸ்ரேல் பலமுறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆனால் அதையும் மீறி ஈரான் அணுகுண்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியதாவது:-
நான் பிரதமராக இருக்கும் வரை ஈரானை அணுகுண்டு தயாரிக்க விடமாட்டேன். இதையும் மீறி ஈரான் அணு குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே எந்த நேரத்திலும் நாங்கள் ஈரான் மீது போர் தொடுப்போம்.
பொருளாதார தடைகளையும் மீறி ஈரான் அத்து மீறி செயல்படுகிறது. இதற்கான பலனை அது சந்திக்க நேரிடும். இவ்வளவு நாளும் நாங்கள் ஈரானை தாக்காமல் இருப்பதற்கு அமெரிக்காவே காரணம். அவர்கள் தான் எங்களை தடுத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது நீடிக்குமா? இல்லையா? என்பது ஈரான் கையில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

சிரியாவுக்கு சென்ற விமானத்தை அவசரமாக தரையிறக்கியது துருக்கி

சிரியாவுக்கு சென்ற விமானத்தை அவசரமாக தரையிறக்கியது துருக்கி
சிரியா விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க துருக்கி நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது.
மேலும் மற்ற நாட்டு விமானங்களில் சிரியாவுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் சிரியாவுக்கு சென்று கொண்டிருந்த அமெரிக்க சரக்கு விமானத்தை தரையிறக்குபடி துருக்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து அந்த விமானம் எர்சூரும் நகரிலுள்ள விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
அதில் சந்தேகப்படும் ஆயுதங்கள் இருந்ததா? என்ற விவரம் தெரியவில்லை.

பாங்கிற்கு பதிலளிப்பதால் கிடைக்கும் இம்மை, மறுமைப் பலன்கள்

இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் 'அருள்மழை' உங்கள் மீது பொழிய அவசியம்'இக்கட்டுரையை' படியுங்கள், பின்பற்றுங்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்வதன் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற விரையுங்கள்.
அல்லாஹ்வைத் தொழுவதினால் இம்மை, மறுமை இருவாழ்விலும் குவியும் ஏராளமான நன்மைளை கணக்கிட்டால் நம்மால் பட்டியலிட முடியாத அளவுக்கு அவைகள் நீண்டு கொண்டே செல்லும்.
இன்று நம்மில் பலர் தொழுகை விஷயத்தில் அலட்சியப்போக்கை கையாளுவதற்கு எது காரணமென்றுத் தெரியவில்லை?
ஒன்று அதனுடைய நன்மைகளைத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்துகொண்டு அதில் நம்பிக்கை இழந்து இருக்கவேண்டும். இல்லை என்றால் பட்டியலிட முடியாத அளவுக்கு நன்மைகளை குவிக்கக்கூடிய தொழுகை விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது.

சளித் தொல்லை பாடாய்ப் படுத்துகிறதா?

ங்கள் குடும்பத்திலோ தெரிந்தவர்களுக்கோ சளித்தொல்லையா?இக்கட்டுரையைப்படித்து தீர்வுக்கு வழி காணுங்கள். நோயைக் கொடுப்பவனும் அல்லாஹ், சுகப்படுத்துபவனும் அல்லாஹ். அதே சமயம் முயற்சி செய்வது நமது கடமை.  
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!


ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது.
முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

சர்க்கரை நோயும்! களைப்பும்!

சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது நோயின் அறிகுறிகள்! பல நேரங்களில் நாம் மாத்திரையோ, ஊசியோ சரியாக எடுத்துக்கொள்ளுவோம், சர்க்கரையின் அளவும் இரத்தம், நீர் ஆகியவற்றில் சரியாக இருக்கும்.
கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கி வரமுடிகிறதா?இவர்களுடைய உணவில்{உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும்} 1500 கலோரி இருக்குமாறு உணவை அதிகரிக்க வேண்டும். சரியான ஓய்வு மற்றும் தேவையான அளவு உறக்கம் ஆகியவை முக்கியம். இவற்றுடன் அறைக்குள் கை,கால்களை மடக்கி நீட்டி இலகுவான பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும். பிறகு வராந்தாவில் மெதுவான நடைப்பயிற்சி என்று முறைப்படி, படிப்படியாகச் செய்தால் வியக்கத்தக்க முறையில் உடல் நலம் சீரடைந்து வெகுவிரைவில் களைப்பில்லாமல் நடைப்பயிற்சியில் ஈடுபட முடியும்.

Thursday, November 08, 2012

மேட்டுப்பாளையத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்: அரசு பேருந்து எரிப்பு!


Mettupalayam-in-Coimbatore
மேட்டுப்பாளையம்:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸின் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

Monday, November 05, 2012

Surat Al-Baqarah (The Cow) -2.10-2.20

The Noble Qur'an "பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள். 2:12 to top Tamil நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. 2:13 to top Tamil (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், ´மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?´ என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள்.

Thursday, November 01, 2012

அரசியல் சாசனம்:எகிப்தில் சர்ச்சை சூடுபிடிக்கிறது !




கெய்ரோ:முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சாசனை உருவாக்க குழு மிகுந்த சர்ச்சைகளை சந்திக்கிறது. காப்டிக் கிறிஸ்தவர்களும், தங்களுக்கு ஷரீஅத் சட்டமே போதும் என்று மனு அளித்துள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது. காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு விவாகரத்து என்பது அவர்களது மத சட்டத்தின்படி மிகவும் சிரமமாக இருப்பதால் அவர்கள் ஷரீஅத் சட்டத்தை நாடுவதாக காப்டிக் சபையின் அதிகாரப்பூர்வ பிரிவினர் கூறுகின்றனர்.முபாரக் ஆட்சியில் ஷரீஅத் சட்டங்கள் தாம் அரசியல் சாசனத்தின் முக்கிய அடிப்படையாக அமையவேண்டும் என்பது எழுதப்பட்டிருந்தது. ஆனால், அது ஏட்டளவில் மட்டுமே ஒரு அறிக்கையாக அமைந்தது என்று இஸ்லாமியவாதிகள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக ஷரீஅத் சட்டம் தான் தேவை என்பது அவர்களது வாதமாகும். இஸ்லாமியவாதிகளிலேயே ஸலஃபிகளுக்கும், இஃவான்களுக்கும் இடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு ஷரீஆ சட்டத்தின் வரைவிலக்கணம் வகுக்கும் அதிகாரத்தை வழங்குமாறு ஸலஃபிகள் கூறுகின்றனர்.ஒரு காலத்தில் முபாரக்கின் ஆட்சியின் கீழ் சர்வாதிகார முபாரக்கின் ஃபத்வாக்களின் கீழ் கையெழுத்திட்டு வந்த அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு அத்தகையதொரு அதிகாரத்தை வழங்குவது அபாயகரமானது என்று இஃவான்களும், இதர மதசார்பற்ற வாதிகளும் கூறுகின்றனர். ஆனால், அல் அஸ்ஹர் பல்கலைக்கழகமோ ஸலஃபி கொள்கையை எதிர்க்கிறது. நீதிமன்றங்கள் தாம் சட்டத்திற்கு வரைவிலக்கணம் வகுக்கவேண்டும் என்பது அவர்களின் வாதமாகும்.தண்டனைச் சட்டங்களே அமல்படுத்தும் சூழல் உருவாகவில்லை என்பது இஃவான்களின் கருத்து. முன்பு அரசியலில் இறங்குவதை மறுத்துவந்த ஸலஃபிகள் தற்பொழுது எகிப்து போன்ற நாடுகளில் ஆதரிக்கின்றனர். அதேவேளையில் சூடானில் உமருல் பஷீருக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

Surat Al-Baqarah (The Cow) -سورة البقرة



2:1
Sahih International
Alif, Lam, Meem.
Tamil
அலிஃப், லாம், மீ;ம்.
2:2
Sahih International
This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah -
Tamil
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
Blogger Wordpress Gadgets