குவஹாத்தி:அஸ்ஸாமில் கொக்ராஜர் மாவட்டத்தில் போடோலாண்ட் ஜனநாயக முன்னணியின்(என்.டி.எஃப்.பி) பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் பிரிவினர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 2 பேர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டனர். இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு கொக்ராஜரில் சந்திரசீலா ரிசர்வ் காட்டுப் பகுதியில் நுழைந்த என்.டி.எஃப்.பி கும்பல் ஐந்து வீடுகள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். இன்னொரு நபருக்கு காயம் ஏற்பட்டது. இப்பகுதியில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் ஸல்பாரி கிராமத்தில் 2-வது சம்பவம் நடந்தது. இத்தாக்குதலில் ஆசிரியர் யூனியன் தலைவர் கொல்லப்பட்டார். ஆறு வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.
அலி ஹுஸைன் என்ற விவசாயி கோஸ்டியகான் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து என்.டி.எஃப்.பியில் ரஞ்சன் தாய்மரி பிரிவினர் திங்கள் கிழமை முதல் தாக்குதல் நடத்தினர். இப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளரான ஆதிலுர் ரஹ்மான் நேற்று முன் தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த சனிக்கிழமை 2 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அஸ்ஸாமில் வன்முறைகள் அரங்கேறியுள்ளன.
No comments:
Post a Comment