அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
உலகெங்கிலும் வாழும் தமிழக முஸ்லிம்களிடையே புதைந்து கிடக்கும் பொக்கிஷமான எழுத்தாற்றலை வெளிக்கொண்டு வரவும், நம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை நம் சமூகத்திடம் இருந்தே பெரும் உயர் நோக்குடனும், உங்கள் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!! ISLAMIYA PENMANI
இன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு தலைப்புகளில் தமிழக அளவில் கட்டுரைப் போட்டி நடத்தி, இஸ்லாமியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வையும் நம் மக்களில் இருந்தே பெற்று, அந்த தீர்வை நோக்கி பயணம் செய்யும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லீம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?"
இதுதான் முதல் போட்டியின் தலைப்பு!
ஏன் இந்த தலைப்பு..???
இன்று உலக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உற்று நோக்கினால், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வது யாருக்கும் கடினமான ஒரு
பணியாக இருக்காது. உலகின் இந்த அசாதாரணமான வளர்ச்சியின் ஆணி வேர் கல்வியே ஆகும்! அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்வியில் நமது தமிழக இஸ்லாமிய சமுதாயம் எந்த அளவில் இருக்கிறது என்பதை உங்களில் இருந்தே அறியும் பொருட்டே இந்த தலைப்பு.
கட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன் எங்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை புரிந்துக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கக் கூடும்.....
* இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்
* கல்வியில் நமது சமூகத்தின் இன்றைய நிலை
* ஆக்கப்பூர்வமான கல்வி என்பது என்ன?
* அதை அடைய நம்மிடையே வசதி, வாய்ப்புகள் உள்ளனவா?
* வசதி, வாய்ப்பு இல்லை எனில் எவ்வாறு அதை உருவாக்குவது?
* உருவாக்குவதற்கான சாதக, பாதகங்கள் என்ன?
இதுபோன்ற விஷயங்களை உள்ளடக்கி உங்கள் கட்டுரை வரும்படி முயற்சி செய்யுங்கள்.
* இதில் இல்லாத புதிய ஐடியாக்கள் இருந்தால் அவை பெரிதும் வரவேற்கப்படுகின்றது.
போட்டிக்கான விதிகள்:
1. கட்டுரையின் கருத்துக்கள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.
2. இந்த போட்டிக்கு வயது வரம்பு கிடையாது. யார் வேண்டுமென்றாலும் கலந்துக் கொள்ளலாம்.
3. கட்டுரைகளை ஈமெயில் வாயிலாக மட்டுமே அனுப்பவேண்டும்.
4. 6 பேர் கொண்ட நடுவர் குழு கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்.
5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதை சொல்லவும் வேண்டுமோ???
6. எந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமை நடுவர் குழுக்கு உண்டு.
7. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 15 , இந்திய நேரம் இரவு 11.59 வரை.
8. முடிவுகள் இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 25 ல் இருந்து ஜனவரி 1 இரவுக்குள் இஸ்லாமிய பெண்மணி தளத்தில் அறிவிக்கப்படும்.
9. வெற்றியாளர்கள் ஃபோன் மற்றும் ஈமெயில் மூலம் தெரியப்படுத்தப்படுவார்கள்.
10. பரிசுகள் இன்ஷா அல்லாஹ், ஜனவரி 5 க்குள் வழங்கப்படும்.
11. முதல் மூன்று பரிசு பெரும் கட்டுரைகள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படும்.
12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.
13. இங்கு வரும் கட்டுரைகள் வேறு இடங்களில் வெளி வந்ததாகவோ அல்லது வெளியீட்டுக்காக அனுப்பப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.
14. காபி, பேஸ்ட் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிசும் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தெரிய வந்தால், பரிசுத் தொகை வழங்கப்படமாட்டாது.
15. வெற்றி பெறுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்கள் விரும்பி , இஸ்லாமிய பெண்மணியின் அட்மின்களும் விரும்பும் பட்சத்தில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்மணி தளத்தில் கட்டுரைகள் எழுதிக்கொடுக்க அனுமதிக்கப்படுவார்.
பிற்சேர்க்கை : 16. இப்போட்டியில் முஸ்லீம் முஸ்லீம் அல்லாதோர் என யார் வேண்டுமென்றாலும் கலந்துக்கொள்ளலாம்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி :contest@islamiyapenmani.com
அனுப்ப வேண்டிய முறை : (இதில் வரும் விபரங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும், எனவே சகோதரிகள் பயப்பட வேண்டாம் )
உங்கள் பெயர்:
தந்தை/காப்பாளர் பெயர் :
வீட்டு முகவரி(விருப்பம் இருந்தால்):
ஃபோன் நம்பர்:
உங்கள் வயது(விருப்பம் இருந்தால்) :
ஊர் பெயர்:
அதன் பின் கட்டுரை
பரிசு விபரம்:
முதல் பரிசு: 5,000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3,000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 2,000 ரூபாய்
வேண்டுகோள்: சகோஸ்...! இது உலக அளவில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், உலகின் ஒவ்வொரு மூலை, முடுக்களில் இருந்தும் நம் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் செய்கிறோம். இது அனைவரையும் சென்றடைய உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஷேர் செய்யுங்கள். உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பங்குபெற ஊக்கப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துவதற்கான நன்மையை இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பானாக.. ஆமீன்...!

ஒரு குடும்பமாய் செயல்படுவோம்!!! புதிய மாற்றங்களை உண்டாக்குவோம்!!!!! இன்ஷா அல்லாஹ்!!!!!!!! source islamiya-penmani
No comments:
Post a Comment