ஈரான் அணுகுண்டு தயாரித்து வருவதால் அந்த அணுகுண்டை தங்களுக்கு எதிராக ஈரான் பயன்படுத்தும் என்று இஸ்ரேல் கருதுகிறது. எனவே ஈரானுக்கு, இஸ்ரேல் பலமுறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆனால் அதையும் மீறி ஈரான் அணுகுண்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியதாவது:-
நான் பிரதமராக இருக்கும் வரை ஈரானை அணுகுண்டு தயாரிக்க விடமாட்டேன். இதையும் மீறி ஈரான் அணு குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே எந்த நேரத்திலும் நாங்கள் ஈரான் மீது போர் தொடுப்போம்.
பொருளாதார தடைகளையும் மீறி ஈரான் அத்து மீறி செயல்படுகிறது. இதற்கான பலனை அது சந்திக்க நேரிடும். இவ்வளவு நாளும் நாங்கள் ஈரானை தாக்காமல் இருப்பதற்கு அமெரிக்காவே காரணம். அவர்கள் தான் எங்களை தடுத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது நீடிக்குமா? இல்லையா? என்பது ஈரான் கையில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment