Facebook Twitter RSS

Thursday, November 08, 2012

Widgets

மேட்டுப்பாளையத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்: அரசு பேருந்து எரிப்பு!


Mettupalayam-in-Coimbatore
மேட்டுப்பாளையம்:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸின் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது மர்மக் கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து இரும்புகம்பியால் தாக்கியது. இதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே ஆனந்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் மீண்டும் இரவு 9 மணியளவில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் சில பேருந்துகளின் மீதும் மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினர். இதன்பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு தீ வைத்தனர். அதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
ஆஸ்.எஸ்.எஸ் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பதற்றம் உருவாகியுள்ளது. இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் இன்று கடையடைப்பு நடத்த இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்து போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் தடுக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets