கடந்த காஸா முற்றுகையின் போது கஸ்ஸாம் போராகளிகள் நிகழ்த்திய வீரமிகு வழிமறிப்பு சமரில் பல பாடங்களை படித்து கொண்டார்கள் ஹமாஸின் தலைவர்கள். அட்டகாசமாக டாங்கிகள், சண்டை விமானங்கள், அப்பாச்சிகள் போன்றவற்றின் வழித்துணையுடனும், பொஸ்பரலஸ் குண்டுகளின் ஆதரவுடனும் காஸாவினுள் நுழைந்த யூத இராணுவத்தை நன்றாக உள்ளிழுத்து அவர்களின் விநியோக மார்க்கங்களை தடுத்து மலைப்பாம்பாக நுழைந்த யூத சைனியத்தை பல துண்டங்களாக பிரித்து சுமார் 17 இற்கும் மேற்பட்ட களச்சண்டைகளை திறந்திருந்தார்கள் ஹமாஸ் போராளிகள். இஸ்ரேல் தனது அதி நவீன டாங்கிகளை இழந்தவாறு பின்வாங்கி சென்று ஷெல் தாக்குதல், ஆட்டிலறி தாக்குதல் போன்றவற்றில் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டது. அந்த சண்டைக்களத்திற்கு ஹிஸ்புல்லாஹ்வின் உயர்நிலை தளபதிகள் சிலர் ஹமாஸிற்காக பின்புலத்தில் நின்று இயங்கினர்.
எதிர்வரும் காலங்களில் இதையொத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை முறியடிக்க வேண்டுமென்றால் அதி நவீன ஆயுதங்களை கையாள தக்க, தகவல் பரிமாற்ற சிக்னல்களை கையாளதக்க, ஒரு விஞ்ஞான தொழிட்பத்தில் முன்னிற்கும் இராணுவ கட்டமைப்பின் அவசியம் உணரப்பட்டது. சிறு குழக்களாக சண்டையிடும் மரபுசமரணி போன்ற ஒரு கட்டமைப்பு ஹமாஸிற்கு இன்றியமையாத தேவையாக இருந்தது.
இவ்வாறான படை பிரிவை உருவாக்குமுகமாக ஈரானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் தளங்களில் ஹமாஸின் போராளிகள் ஹிஸ்புல்லாக்களின் உடையில் பயிற்ச்சியளிக்கப்பட்டனர். ஈரானின் களத்தளபதிகளின் வழிகாட்டலிலும், லெபனான் சண்டையை வழி நடாத்திய ஹிஸ்புல்லா தளபதிகளின் வழிகாட்டலிலும் இவர்கள் தங்கள் பயிற்ச்சிகளை நிறைவு செய்தனர். அனைத்து விதமான அமெரிக்க, ரஷ்ய தயாரிப்புக்களையும் கையாள கூடிய ஒரு இராணுவமாக இவர்கள் வடிவமைக்கப்பட்டனர்.
இப்போது காஸாவின் தெருக்களில் இவர்களும் காணப்படுகின்றனர். டெல் அவிவ் மீதான அல்-பஜ்ர் ஏவுகணை தாக்குதல், எப்16 சண்டை விமானம் மீதான சாம்-7 தாக்குதல் என அசத்துகின்றனர் இந்த படையினர். இது இஸ்ரேலிற்கு எதிர்பாராத அதிர்ச்சி. ஈரானின் சிறிய ரக ஆயுதங்கள் , குறுந்தூர ஏவுகணைகள், தாராளமான வெடிபொருள் பாவனை என ஹமாஸ் தன்னை ஒரு சண்டையிடும் இராணுவ அமைப்பாக இப்போது உலகிற்கு முன்னிறுத்தியுள்ளது. காஸாவில் ஹிஸ்புல்லா இராணுவ அதிகாரிகளின் நடமாட்டம் இருப்பதனை தாம் கண்டதாக ரொய்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார். காஸா சண்டைகளம் என்பது கட்டுப்படுத்த முடியாத போரின் ஒரு ஆரம்பம் போலவேயிருக்கிறது இப்போது. source khaibarthalam
No comments:
Post a Comment