லக்னோ:2 வாரங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தின் ஃபைஸாபாத்திலும் அருகில் உள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் முன்னரே சங்க்பரிவாரத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தியாகப் பெருநாளுக்கு சற்று முன்பாக நிகழ்த்தப்பட்ட கலவரம், சங்க்பரிவாரத்தின் சதித்திட்டம் என்று ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் காலிக் அஹ்மத் கானின் தலைமையிலான குழுவினர் தயாராக்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிவில் உரிமை அமைப்பான ரிஹாஇ மஞ்ச் நடத்திய விசாரணையிலும் கலவரம் சங்க்பரிவாரத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் மிர்ஸாபூரில் உள்ள மஸ்ஜிதுக்கு அருகே சட்டவிரோதமாக கோயில் கட்டும் பணி துவக்கப்பட்டது தான் பிரச்சனைக்கு காரணமாகும். ஆனால், சட்டவிரோத கோயில் கட்டும் பணியை தடுத்து நிறுத்தாமல் மஸ்ஜிதின் வாயிலை மாவட்ட நிர்வாகம் பூட்டியது. அரசு அதிகாரிகளின் இந்நடவடிக்கை முஸ்லிம்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கலவர சூழலை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள ஹிந்து-முஸ்லிம் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்த பிறகும் அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர் என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.
இதனிடையே செப்டம்பர் 21-ஆம் தேதி தியோகாளி கோயிலில் உள்ள 3 சிலைகள் மர்மமான முறையில் காணாமல் போனது. அருகில் தூங்கிக் கொண்டிருந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தாமல் சிலை காணாமல் போனதை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கியது. போராட்டத்தின் போது உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் பேசியதுடன், உணர்ச்சியைத் தூண்டும் பாடல்களையும், புகைப்படங்களையும்
விநியோகித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த உணர்ச்சியைத் தூண்டும் உரைகளுக்கு புகழ்பெற்ற யோகி ஆதித்யநாத் எம்.பி, சிலையை திருடியது முஸ்லிம்கள் என்று குற்றம் சாட்டினார்.எடுக்கவில்லை. நூற்றுக்கு மேற்பட்ட வியாபார ஸ்தாபனங்களை தீக்கிரையாக்குவதற்கு தேவையான பெட்ரோலும், மண்ணெண்ணையும் நிமிடங்களில் ஹிந்துத்துவா கும்பலுக்கு கிடைத்ததும், ஹிந்து பெண்களும், குழந்தைகளும்
பங்கேற்காததும் ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரம் துவங்கியதும் மர்மமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
யாதவின் ஆட்சிக்கு எதிரான சதித்திட்டம் தான் இக்கலவரங்கள் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. கலவரம் முன்னரே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என்று அகிலேஷ் யாதவும் குற்றம் சாட்டியிருந்தார்.
சி.பி.ஐ.(எம்.எல்)யும் குற்றம் சாட்டியுள்ளன. முஸ்லிம்களின் வியாபார ஸ்தாபனங்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டாக்டர்.நிர்மல் காத்ரி எம்.பி கூறுகிறார். கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டு ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அயோத்தி மற்றும் ஃபைஸாபாத்தில் இருந்து முஸ்லிம்களை விரட்டியத்து பழிவாங்குவோம் என்று யோகி கொக்கரித்தார். நிலைமை மோசமாவதை கண்டபிறகும் உணர்ச்சியைத் தூண்டும் முயற்சிகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அக்டோபர் 24-ஆம் தேதி துர்கா பூஜையோடு தொடர்புடைய ஊர்வலத்தின் போது கலவரம் நடந்தது. அமைதியாக துவங்கிய ஊர்வலம் ரேகப்கனியில்(ஃபைஸாபாத்) வந்தபோது துர்கா சிலையின் மீது கல் வீசியதாக வதந்தி கிளப்பப்பட்டது (இது வதந்தி என்பதை பின்னர் போலீஸ் கண்டுபிடித்தது) உடனே அங்கு வந்த ஹிந்துத்துவா கும்பல் பெட்ரோலையும், மண்ணெண்ணையையும் பயன்படுத்தி முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதேவேளையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதலை ஹிந்துத்துவா கும்பல் துவக்கியிருந்தது.
ஃபைஸாபாத் போலீஸ் சூப்பிரண்டும், கூடுதல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டும் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வரான பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக உ.பியில் 13 கலவரங்கள் நடந்துள்ளன. சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்த அகிலேஷ்
கலவரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் நடந்துள்ளது என்று முலாயம் சிங்கும், காங்கிரஸ் கட்சியும்,
சிறுபான்மை சமுதாயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தவறிழைத்ததாக கண்டுபிடிக்கப்பட்ட கூடுதல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஸ்ரீகாந்த் மிஷ்ரா, எஸ்.பி ராம்ஜி யாதவ், நகர மாஜிஸ்ட்ரேட் திலக்தரி யாதவ் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment