சிரியாவுக்கு சென்ற விமானத்தை அவசரமாக தரையிறக்கியது துருக்கி
சிரியா விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க துருக்கி நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது.
மேலும் மற்ற நாட்டு விமானங்களில் சிரியாவுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சிரியாவுக்கு சென்று கொண்டிருந்த அமெரிக்க சரக்கு விமானத்தை தரையிறக்குபடி துருக்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து அந்த விமானம் எர்சூரும் நகரிலுள்ள விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
அதில் சந்தேகப்படும் ஆயுதங்கள் இருந்ததா? என்ற விவரம் தெரியவில்லை.
No comments:
Post a Comment