Facebook Twitter RSS

Tuesday, November 27, 2012

Widgets

முர்ஸி ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் மோதல்: ஒருவர் பலி!


1 Dead, 40 Hurt in Egypt
கெய்ரோ:எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டாமன் ஹவ்ரில் நைல் டெல்டாவில் உள்ள இஃவான் அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தியபோது இரு பிரிவினரும் மோதிக்கொண்டனர். 15 வயதான இஸ்லாமிய ஊழியர் ஃபாத்தி முஹம்மது மரணமடைந்தார். இவர் இஃவான் இயக்கத்தைச் சார்ந்தவர் ஆவார்.
அரசியல் சாசனத்தை தயாரிக்கும் கான்ஸ்ட்யூவண்ட் அஸெம்பிளியை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே என்ற அறிக்கையை முர்ஸி வெளியிட்டதை தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது. முர்ஸிக்கு எதிரான எதிர்ப்பின் பின்னணியில் சியோனிச ஆதரவாளர்கள் இயங்குவதாக கூறப்படுகிறது.



புதிய உத்தரவு தற்காலிகமானது என்று முர்ஸி விளக்கம் அளித்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பான நடவடிக்கையில் எதிர்கட்சியினருடன் ஒத்துழைப்பதாகவும், அதிகாரத்தை மையமாக்கிய நடவடிக்கை அல்ல இது என்றும், பாராளுமன்ற தேர்தலை எளிமைப்படுத்தவே இந்நடவடிக்கை எனவும் முர்ஸி கூறியுள்ளார்.
அதேவேளையில் நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சி துவங்கியுள்ளது. சட்ட அமைச்சர் அஹ்மத் மக்கி மத்தியஸ்தம் வகிக்கிறார். இன்று தேசிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக எதிர்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets