Facebook Twitter RSS

Wednesday, July 11, 2012

Widgets

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரி நாடுதழுவிய பிரச்சாரம்


campaign for the release innocent detainees

புதுடெல்லி:எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட‌ வேண்டுமென்பதை வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ள இருக்கின்றது. கடந்த ஜூன் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உற்று நோக்கும் போது இந்தியாவில் பல சிறைச்சாலைகளில் பல முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவே இருந்து வருகின்றனர். மேலும் அவர்களது வழக்குகள் தொடர்பான் விசாரணைகள் காலம் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் முஸ்லிம்களின் சதவிகிதத்தை விட அம்மாநில சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை ஒரு கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதிருந்தும் யு.ஏ.பி.ஏ விதியை காரணம் காட்டி இன்றுவரை அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட அப்பாவி இளைஞர்கள் சிறையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சமூக ஆர்வலர்களும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதற்காக முன்வர வேண்டும்.
நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை நடத்த இருக்கின்றது. துண்டு பிரசுரங்கள் வழங்குவது மூலமாகவும், பொதுக்கூட்டங்கள் மற்றும் இன்ன பிற நிகழ்ச்சிகள் வாயிலாகவும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் இருந்து துவங்க இருக்கும் இப்பிரச்சாரம் செப்டம்பர் 15 வரை நடைபெறும். சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் அப்பாவி இளைஞர்களுக்கு தேவையான அளவு சட்ட உதவிகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும் எனவும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets