ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியாக சிரியாவிற்கு சென்று அங்கு நிலவும் பிரச்சனைகளை தீர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் தோல்வியை தழுவியுள்ளதாக கோஃபின் அன்னன் தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகளில் இருந்து கரையேற தான் சமர்ப்பித்த திட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டும் மீதமுள்ளதாக அன்னன் கூறுகிறார்.
“சிரியா நெருக்கடி துவங்கி 16 மாதங்கள் கழிந்துவிட்டன. மூன்று மாதங்கள் முன்பு நாங்கள் தலையிடத் துவங்கினோம். அமைதியான அரசியல் மூலமாக இதற்கு தீர்வு காண முடிந்த வரை முயற்சித்து விட்டோம். ஆனால் வெற்றிப்பெற முடியவில்லை என்பது தெளிவானது. மேலும் வெற்றிப் பெறுவோம் என்ற அறிகுறியும் இல்லை.”- என்று கோஃபி அன்னன் கூறியதாக பிரான்சு நாட்டுப் பத்திரிகை கூறுகிறது.
அதேவேளையில் சிரியாவில் மோதலில் சிக்கி உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சிரியா மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சனிக்கிழமை மட்டும் அறுபதுக்கும் மேற்பட்டோர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment