Facebook Twitter RSS

Wednesday, July 11, 2012

Widgets

இன்று உலக மக்கள் தினம்!


World Population Day 2012 today

புதுடெல்லி:”அனைவருக்கும் ஆரோக்கியமான மகப்பேறு” என்ற தொனிப்பொருளுடன் இன்று உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி உலக மக்கள் தொகைதினமாக கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட ஆளுகை கவுன்சில் தீர்மானித்தது.
மக்கள் தொகைப் பெருக்கத்தினால் உருவாகும் பிரச்சனைகள், குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், அன்னையரின் ஆரோக்கியம், பால் சமத்துவம் உள்ளிட்ட காரியங்களில் கவனம் செலுத்த உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜூலை 9-ஆம் தேதி உலக மக்கள் தொகை 7,025,071,966 ஆகும்.
ஒவ்வொரு கர்ப்பத்தையும் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும், ஒவ்வொரு சிசு பிறப்பையும் பாதுகாக்கும் ஒரு உலகத்தை ஐக்கிய நாடுகள் சபை மக்கள் தொகை மற்றும் நிதியக நடவடிக்கைகள் அமைப்பு லட்சியமாக கொண்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு அனைவருக்கும் போதிய குழந்தை பிரசவத்திற்கான சேவையும், சிகிட்சை வசதிகளும் கிடைக்காததுதான் இதற்கு காரணமாகும். ஆக்கப்பூர்வமான குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்கள் இல்லாததும் பிரசவ மரண எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கர்ப்பத்தை தவிர்க்க விரும்பும் அல்லது தாமதிக்க விரும்பும் 22.2 கோடி பெண்களுக்கு ஆக்கப்பூர்வமான குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்கள் கிடைப்பதில்லை. 180 கோடி இளைய தலைமுறையினர் போதுமான சிகிட்சையோ வசதிகளோ கிடைக்காமலேயே இனப்பெருக்க பருவத்தை அடைகின்றனர்.
மக்கள் தொகை தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets