கெய்ரோ:எகிப்தில் ராணுவ அரசால் சட்டவிரோதம் என கூறி பாராளுமன்றத்தை கலைத்த நடவடிக்கையை ரத்துச்செய்து உத்தரவிட்டுள்ளார் புதிய அதிபரான முஹம்மது முர்ஸி.
அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடக்கும் வரை பாராளுமன்ற கூட்டம் நடைபெறவேண்டியது கட்டாயம் என்பதால் பழைய பாராளுமன்றம் அமலில் இருக்கும் என முர்ஸி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
தேர்தல் நடைமுறையில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டி ஒரு மாதம் முன்பு எகிப்தின் அரசியல் சாசன உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது. தொடர்ந்து அன்று ஆட்சியில் இருந்த ராணுவ அரசு நீதிமன்ற நடவடிக்கையை அமல்படுத்தியது.
ஜூன் 30-ஆம் தேதி அதிபராக பதவியேற்றதைத் தொடர்ந்து முர்ஸி பிறப்பிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவாக பாராளுமன்ற கலைப்பை ரத்துச்செய்யும் உத்தரவு கருதப்படுகிறது. இந்த உத்தரவு ராணுவத்திற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment