Facebook Twitter RSS

Sunday, July 01, 2012

Widgets

ருஷ்டிக்கு எதிராக கம்ப்யூட்டர் கேமை தயாரித்துள்ள ஈரான்!

Iran's new video game- Verdict on Salman Rushdie
                                                                                                                                                                            டெஹ்ரான்:இமாம் கொமைனியின் மரணத்தண்டனை ஃபத்வாவில் இருந்து சல்மான் ருஷ்டி தப்பினாலும் ஈரான் ருஷ்டியை சும்மா விட தயாரில்லை.
சாத்தானிய வசனங்கள்’ என்ற பெயரால் எழுதப்பட்ட நூலில் முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைவைனின் இறுதித்தூதரை அவமதித்த ருஷ்டிக்கு ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் இமாம் கொமைனி 23 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த ஃபத்வாவை(மார்க்க தீர்ப்பு) புதிய தலைமுறைக்கும் கம்ப்யூட்டர் கேம் மூலமாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானியன் அசோசியேசன் ஃபார் ஸ்டுடன்ஸ்(ஐ.ஐ.எ.எஸ்) ருஷ்டியைக் குறித்து கம்ப்யூட்டர் கேமை தயாரிப்பதாக தெரிவித்துள்ளது.
டெஹ்ரானில் நடைபெறும் 2-வது சர்வதேச கம்ப்யூட்டர் கேம்ஸ் கண்காட்சியில் ருஷ்டி கேம் குறித்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டது. ஆனால், கேமின் உள்ளடக்கம் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. 3 மற்றும் 4-வது தலைமுறையைச் சார்ந்த ஈரானிய இளம் தலைமுறையினருக்கு ருஷ்டி இறைத்தூதரை அவமதித்தது குறித்து அறிய கம்ப்யூட்டர் கேம் உதவிகரமாக இருக்கும் என்று நம்புவதாக ஐ.ஐ.எ.எஸ் பிரதிநிதி முஹம்மது தாகி பகீரியன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets