புதுடெல்லி:டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜிதின் சிதிலங்கள் பூமிக்கடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே மெட்ரோ ரெயிலுக்காக நிலத்தை தோண்டிய வேளையில் மஸ்ஜிதின் சுவரும், சிதிலங்களும் முகலாய மன்னர் ஷாஜஹானின் காலத்தில் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜித் என கருதுவதாக தொகுதி எம்.எல்.ஏ ஷுஐப் இக்பால் தெரிவித்துள்ளார்.
1650-ஆம் ஆண்டு அக்பராபாதி பேகத்தின் பெயரால் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜிது குறித்து வரலாற்று ஆவணங்களில் பதியப்பட்டுள்ளன. புனித திருக்குர்ஆன் முதன் முதலில் உருது மொழியில் இம்மஸ்ஜிதில் வைத்துதான் மொழிப் பெயர்க்கப்பட்டது.
1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தின் போது பிரிட்டீஷார் இம்மஸ்ஜிதை இடித்து தள்ளினர் என்று இக்பால் கூறுகிறார்.
கண்டுபிடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்கள் அக்பராபாதி மஸ்ஜிதிற்கு சொந்தமானதா? என்பது விஞ்ஞானப்பூர்வமாக உறுதிச் செய்யப்படவில்லை. இதற்காக அகழ்வாராய்ச்சித் துறை நிபுணர்களை காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
அரசின் உத்தரவு கிடைத்தால் பரிசோதனை நடத்துவோம் என ஆர்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியாவின் டெல்லி சர்க்கிள் தலைவர் டி.என்.திம்ரி கூறுகிறார்.
டெல்லி மெட்ரோ ஸ்டேசனின் 3-வது கட்ட திட்டத்தின் ஒருபகுதியாக ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே பூமிக்கு அடியில் ஸ்டேசன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இடத்தில் தோண்டியபொழுது மஸ்ஜிதின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இப்பகுதியை கைவிட்டுவிட்டு மெட்ரோ ஸ்டேஷனும், வழியும் புனர் நிர்மாணித்ததாக டெல்லி மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SOURCE THOOTHUONLINE
No comments:
Post a Comment