Facebook Twitter RSS

Wednesday, December 21, 2011

Widgets

ஈரானை தக்கினால் இஸ்ரேலை தகர்க்க ஹிஸ்புல்லா தயார்

“ஹிஸ்புல்லாவை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” “தென் லெபனானை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” “லெபனானை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” “சிரியாவை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” “ஈரானை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” இது தான் இந்த அமைப்பின் படிமுறை வளற்ச்சி. ஷியாக்களின் பலம் பொருந்திய மரபு யுத்தம் செய்யக்கூடிய போராட்ட இயக்கம். பெய்ரூட்டில் சுன்னி முஸ்லிம்களுடன் போராட களமிறங்கி, தென் லெபனானின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறி, முழு லெபனானிலும்அரசியல் இராணுவ போக்கை தீர்மானிக்கும் சக்தியாக தளமமைத்து,அயல் நாடான சிரியா, பலஸ்தீன் விவகாரங்களில் ஆதரவு தளமாக செயற்பட்டு இப்போது ஈரானிற்காக களமிறங்க காத்திருக்கிறது ஹிஸ்புல்லா. ஹிஸ்புல்லாக்களின் திறமை பற்றியோ அல்லது அவர்களது தாக்குதல் திறன் பற்றியோ ஆராய்வதல்ல இங்கே நோக்கம். இந்த அமைப்பானது ஈானின் மிக முக்கியஆயுதம். மத்திய கிழக்கிற்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்டது. இதை வடிவமைத்த விஞ்ஞானிகள் யார் தெரியுமா? கும்மில் இருக்கும் ஆயத்துல்லாக்கள். மிக கவனமாகவும், நுட்பமாகவும் வடிவமைக்கப்பட்ட அரசியல் ஆயும். பல வேளைகளில் இராணுவ ஆயுதமாகவும் தொழிற்படத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டது. டுவல் பேப்பஸ் டிசைனிங். மேட் இன் இரான். இந்த இயக்கத்தை ஒரு கட்டுக்கோப்பான மரபு மற்றும் கெரில்லா சமரணியாகவே நாம் இதுவரை கேள்விப்பட்டுள்ளோம். பார்த்துள்ளளோம். ஆனால் இந்த அமைப்பு இப்போது அல்-காயிதா போன்ற சர்வதேச வலைபின்னலை தன்னகத்தே கொண்டுள்ள அணியாக பரிணாமம் பெற்றுள்ளது. இதன் அதிமுக்கிய உறுப்பினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மன், பிரான்ஸ், ஆர்ஜன்டீனா, வெனிஸ்வெலா போன்ற பல நாடுகளிலும் இருக்கிறார்கள். இயங்குகிறார்கள். தட்டையாக முடி வெட்டி, ட்ரிம் செய்த தாடியுடன், அரபு எழுத்துக்ள் கொண்ட பச்சை துண்டினை தலையில் கட்டி நிற்கும் ஹிஸ்புல்லாக்களை தான் நாம் கண்டுள்ளோம். முடி வளர்த்த, மேற்கின் நாகரீகத்தின் இன்றை மோஸ்தரில் உடையணிந்து கபசினோக்களுடன் சட்டிங் செய்து கொண்டிருக்கும் ஹிஸ்புல்லாக்கள் இன்று நியூயோர்கிலும், லண்டன் நகர வீதிகளிலும் உலாவருகிறார்கள். தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், லெபனான், பலஸ்தீன் பாஸ்போர்ட்களுடன் மேற்கில் அரசியல்தஞ்சம் கோரியவர்களாக வாழ்கிறார்கள்.எதற்காக? ஈரானை தாக்கும் போது இதற்கான விடை கிடைக்கும். Argentine-Israel Association Bulding ஆர்ஜன்டீனாவில் தரைமட்டமாக்கப்பட்டதன் பின்னணியில்ஹிஸ்புல்லாக்களே தொழிற்பட்டனர். இதில் மட்டும் 85 இற்கும் மேற்பட்ட லத்தீன் அமெரிக்க ஸியோனிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். கனடாவில் லெபனானியர் அசோசியேசன் என்ற பெயரில் பல்லாயிரம் பேர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். 1981ல் சதாம் ஹீசைன் அதிபராக இருந்த போது இஸ்ரேலிய தாக்குதல் ஜெட்கள் ஈராக்கின் அனு உலைகளை ஒஸ்ட்ரிக் எனுமிடத்தில் தாக்கியழித்தன. அதே போல கடந்த செப்படம்பரில் சிரியாவிலும் தாக்குதலை மேற்கொண்டன. ஆனால் ஈரானில் செய்ய முடியாது. செய்தால் ஒரு சிக்கலான மத்திய கிழக்கு யுத்தத்திற்கே அது வழிகோலும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets