Sunday, December 25, 2011
இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?
எனதருமை இஸ்லாமிய சமுதாயமே! தஃவாபணியின் முக்கியம் பற்றி இந்த சமுதாயம் இனியாவது சிந்நிக்குமா? இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ந நபி (ஸல்) அவர்கள் ஒன்றுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தும் 40 ஆண்டு காலம் உண்மையாளன் என்ற பெயர் பெற்றனர். அதன் பின் மனித சமுதாயத்திற்கு ஒருவழிகாட்டியாக இறைவனால் அனுப்பப்பட்ட இனிய தூதர் ஆனார்கள்.
இந்த மனிதசமுதாயத்திற்கு அனைத்துத்துறைகளிலும் வழிகாட்டியதோடு மனித நேயத்தை கற்றுக்கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் உண்ணுவது முறையல்ல என்ற உன்னத மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்தனர். மனித நேயமிக்க இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஒரு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதை எண்ணி வேதனைப்படுகின்றேன்.
இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். இந்தியாவில் முதன் முதலில் வியாபாரமாகத்தான் இஸ்லாம் பரவியது. அவர்கள் செய்த வியாபாரத்தில் நேர்மை இருந்தது. இறையச்சம் மிக்கவர்களாக ஒழுக்க சீலர்களாகதாங்கள் செய்கின்ற அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை பெறவேண்டும் என எண்ணிச் செய்தார்கள். அதன் காரணமாக இஸ்லாம் இந்திய மண்ணில் பரவியது. இதன் பிறகு இந்திய மண்ணில் 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா? குர்ஆன், ஹதீஸ்படி ஆட்சி நடத்தினார்கள்?
அரபி மொழியில் உள்ள குர்ஆனை தமிழ் நாட்டில் தமிழிலும், மகாராஷ்டிராவில் மராத்தியிலும், இந்தியாவில் அந்தந்த மாநில மொழிக்கொப்ப இந்த குர்ஆன் அன்று மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டு, அவற்றை மக்கள் மத்தியில் எடுத்து வைத்திருந்தால், தாங்கள் இந்த நாட்டை ஆண்டபோது ஒரு இஸ்லாமிய ஆட்சிசெய்திருப்பார்களேயானால் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்ட இந்த பூமியில் ஒரு பாபரி மஸ்ஜித் இன்று இடிக்கப்படுமா? இந்த இழி நிலை ஏற்படுமா? இது இஸ்லாமிய நாடாக அல்லவா மாறி இருக்க வேண்டும்.என்ன செய்தார்கள் இந்த முஸ்லிம் மன்னர்கள்? நபி பட்டம் கிடைத்து 23 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் தியாகம், உழைப்புக் காரணமாக உலகில்இன்று மூன்றில் ஒரு பங்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. (குர்ஆன், ஹதீஸ்படி நடக்கவில்லை என்றாலும்) அப்படி அவை தோன்றின. இங்கே என்ன செய்தார்கள் இவர்கள்? கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம் அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட சமூகக் காவலர்கள் எனக் கூறிக்கொண்டு ஏகப்பட்ட பட்டம் பெற்றுள்ள இந்த கண்ணியம் மிக்கவர்கள் என்ன செய்தார்கள்? இஸ்லாத்தின் மனிதப் பண்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களா? இல்லை! மேடை கிடைத்தால் போதும் என மக்களை மூடர்களாக்கி இவர்கள் அரசியலில் அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் பிழைப்பு நடத்தினார்கள். இவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்களா? ஆண்டுக்கு ஒரு முறை நபிக்கு விழா எடுக்கும் இவர்கள் அன்றைக்காவது தஃவா பணி செய்கிறார்களா?
இல்லை! இல்லை! நாங்கள்தான் ரசூலுல்லாஹ்வின் போதனைகளைப் பின்பற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டுமுஸ்லிம் அல்லாத மக்களிடம் பணிசெய்கிறோம் எனக் கூறும் இவர்கள் தாங்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என எண்ணி தமக்கு என ஒரு சட்டத்தைப் போட்டு கொண்டு இந்த வரையறைக்குள்ளேதான் எங்கள் ஜமாஅத்தில் இணையலாம் எனக் கூறுகின்றார்கள்.
எந்த நிலையிலாவது இஸ்லாத்தை அதன் முழுவடிவத்தை செயல் படுத்தவேண்டும்என நினைத்தார்களா? அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள முஸ்லிம்களில் 46% வறுமைக் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே! முஸ்லிம்களில் எத்தனை பெரிய பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஜகாத் ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள்? இன்றும் எத்தனை முஸ்லிம்கள் வீட்டில் வேலை செய்யும் அரிஜன இன மக்கள் இருக்கின்றார்கள். ஜாதி இஸ்லாத்தில்இல்லை எனவே இந்த நிலையோடு ஏன் வாழ்கின்றீர்கள்? எனக் கேட்டு இஸ்லாத்தில் இணைந்த அரிஜன்கள் எத்தனை? அடிமைத் தொழிலை தவிர வேறு ஒன்றும் தொழில் செய்ய முடியாத ஒரு அடிமை சமுதாயத்திடமாவது இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டதா?
இனியாவது முஸ்லிம் சமுதாயம் தஃவாபணியின் (அழைப்பு) முக்கியம் பற்றி சிந்தித்து இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும். அப்படி இந்த இஸ்லாம் பரப்பப்படுமானால் எந்த பாபர் மஸ்ஜிதும் இடிக்கப்படுகின்ற சூழ்நிலையை காணமுடியாது. -
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment