Facebook Twitter RSS

Wednesday, December 21, 2011

Widgets

பலஸ்தீன் கைதிகள் 550 பேரை விடுவித்தது இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் எஞ்சிய 550 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுவித்தது. இதனையொட்டி பலஸ்தீனின் மேற்குக்கரைபகுதியில் பிரமாண்ட வரவேற்பு வைபவம் இடம்பெற்றது. இதன்போது இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கு, பலஸ்தீனர்களுக்கும் இடையில் சிறு மோதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் செய்துகொள்ளப்பட்டது. இதன் 5 ஆண்டுகள் ஹமாஸ் சிறையில் இருந்த கிலாட் விடுவிக்கப்பட்டதோடு அதற்குபகரமாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 1027 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசுவிடுவிக்க ஒப்புக்கொண்டது. இதன் முதல் கட்டமாக 477 பலஸ்தீனி யர்கள் கடந்த ஒப்டோபர் மாதம் விடுவிக் கப் பட்டனர். இந்நிலையில் எஞ்சிய 550 பலஸ்தீனர் களும் நேற்றுமுன்தினம் விடுக்கப் பட்டனர். எனினும் விடுவிக் கப்பட்ட கைதிகளில் ஒருவர்கூட ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் இல்லை. யாரையெல்லாம் விடுவிப்பது என்பதை இஸ்ரேல் அரசுதான் தீர்மானித்தது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன்படி இஸ்ரேல் சிறைச்சாலையில் மேலும் 250 பலஸ்தீனகைதிகள் எஞ்சியுள்ளனர் என இஸ்ரேல் சிறைச்சேவை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets