Facebook Twitter RSS

Wednesday, December 21, 2011

Widgets

அயோத்தியில் 2014 இல் இராமர் கோயில் எழும்பியிருக்குமாம்

மத கலவரத்தை தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா ஹிந்துக்களுக்கு எதிரானது என சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர் அசோக்சிங்கால் கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் வி.ஹெச்.பியின் தேசிய மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வருகை தந்த அசோக்சிங்கால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, கலவர தடுப்பு மசோதாவின்படி வன்முறை சம்பவங்கள் நடந்தால் ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமே வழக்கு பதிவுச்செய்யப்படும். மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் துவக்கப்படும்.2014-ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர்கோயில் எழும்பியிருக்கும். இதற்காக பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கவேண்டிய சூழல் ஏற்படும். கோயிலின் 60 சதவீத பணிகளும் முடிவடைந்துவிட்டன. முல்லைப் பெரியாறில் புதிய அணையை கட்டவேண்டும். இப்பிரச்சனையில் பிரதமர் தலையிடவேண்டும். ஹிந்துக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை மத மாற்றமாகும். இதற்காக 42 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. நாடு சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஊழலாகும். இதற்கு எதிராக போராட எவரையும் அனுமதிப்பதில்லை. சபரிமலையை தேசிய புண்ணியஸ்தலமாக அறிவிக்கவேண்டும். இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets