Facebook Twitter RSS

Saturday, December 24, 2011

Widgets

உலகின் மிகமுக்கிய நவீன நகராக புனிதமக்கா நகரம் மாறிவருகின்றது.

உலகின் மிகமுக்கிய நவீன நகராக புனித மக்கா நகரம் மாறிவருகின்றது, இதன்விளைவாக புனித மக்கா நகரில் பல பாரிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக புனித மக்கா நகரின் ஆளுநர் கலாநிதி உஸமா அல்-பஆர் தெரிவித்துள்ளார்.மக்கா நகரின்புனித ஹரம் பள்ளிவாசலின் மேலதிக வேலைத்திட்டங்கள் மற்றும் அல்-ஹூஜூனிலிருந்து புனித ஹரம் பள்ளிவாசல்வரையான இரு சுரங்க நடைபாதைகள் உட்பட வேலைத்திட்டங்களின் பெரும்பகுதி நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மக்கா நகரின் ஆளுநர் தெரிவித்தார்.யாத்திரீகர்களுக்கு புனித ஹரம் ஷரீபுக்கு அருகே தங்குமிடங்களை அமைக்கும் ஜமல் உமர் வேலைத்திட்டம் சிறிது காலத்தில் முடிவடைவடையவுள்ளது.தற்போது புனித ஹரம்ஷரீபிலிருந்து தூரத்திலேயே யாத்தீரீகர்களின் தங்குமிடங்கள் காணப்படுவதுடன்,ஜமல் உமர் வேலைத்திட்டம் முடிவடைந்தால் யாத்திரீகர்களுக்கு ஹரம்ஷரீபுக்கு மிக அருகேயே தங்குமிடங்களை வழங்கமுடியுமாயிருக்கும் எனவும், மக்கா நகரினுள் புகையிர சேவையை வழங்கும் 23பில்லியன் சவூதிரியால்கள் செலவான பாரிய திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும் கலாநிதி அல்-பஆர் மேலும் தெரிவித்துள்ளார். மக்கா நகரில் இரண்டு,மூன்று மற்றும் நான்கு வட்டப்பதைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதுடன் இதற்காக 200மில்லிய சவூதிரியால்கள் செலவிடப்பட்டுள்ளன. உம் ஜூத் பகுதியில் வசிக்கும் மக்கா நகரவாசிகளுக்கு 4000வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிக்கு மொத்தமாக 800மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்பட்டுள்ளன. ஸபாவிலிருந்து மர்வாவிக்கு யாத்திரீகர்கள் வசதியாகச் செல்லும்பொருட்டு இரண்டு மாடிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்காவின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets