அல் ஸைதூனா பள்ளிவாசல்
Al-Zaytuna Mosque
பிராந்தியம் வட ஆபிரிக்கா
நாடு தூனிஸியா
அமைவிடம் தூனிஸ்
நிர்மாணம் ஹஜ்ரி 731
ஆட்சியாளர் ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்
பரப்பளவு ஐயாயிரம் சதுர மீட்டர்
இணை பல்கலைக்கழகம் ஸைதூனா பல்கலைக்கழகம்
சிறப்பம்சம் மினாரா 43 மீட்டர்
அல் ஸைதூனா தூனிசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலாகும் . ஸைதூன் ( ஒலிவ் ) பள்ளிவாசல் என்று பொருள்படுகிறது . தூனிஸ் நகரில் அமைந்துள் ஸைதூனா பள்ளிவாசல் வட ஆபிரிக்காவில் உள்ள பழைமை வாய்ந்த பள்ளிவாசல்களின் பட்டியிலில் ஸைதூனாவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும் . இஸ்லாமிய ஆட்சியின் தரிதமான வளர்ச்சி ஸைதூனா போன்ற உலகப் புகழ்பெற்ற பள்ளிவாசல்களை அமைக்க வழியமைத்தது . வடஆபிரிக்காவில் இரண்டாவது அமைக்கப்பட்ட பள்ளிவாவல் என்ற பெருமையும் ஸைதூனாவைச் சாரும் . இப்பள்ளிவாசல் , அமைக்கப்பட்ட காலப்பகுதி , இதனை நிர்மாணித்தவர் என்பன தொடர்பில் வரலாற்றாசிரியர்களுக்கு மத்தியில் மாறுபட்ட கருத்துக்களே நிலவுகின்றன . இப்னு கல்தூன் , அல்பக்ரி போன்ற வரலாற்றாசிரியர்கள் ஸைதூனா ஹிஜ்ரி 116( கி . பி 731) ல் அமைக்கப்பட்டது என்று கூறுகின்றனர் .
அமைப்பு
ஐயாயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட பள்ளிவாசல் ஒன்பது நுழைவாயில்களைக் கொண்டதாகும் . சிறந்த கட்டடக்கலை அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் பள்ளிவாசல் உக்பா , குர்தூபா மஸ்ஜித்களின் சாயலைக்கொண்டதாகும் . ஸைதூனா பள்ளிவாசலன் மினாரா 43 மீட்டர் அல்லது 141 அடி உயரமுடையதாகும் .
ஸைதூனா பல்கலைக்கழகம்
University Of Al-Zaytuna
இஸ்லாத்திற்கும் கல்விக்கும் இடையிலான தொடர்பு மிக நெருங்கியதாகும் . ஆத்மீ P கத்தை அடிப்படையாக வைத்த கல்வியே மத்திய காலத்தில் முஸ்லிங்கள் அறிவியலில் உச்சத்தை தொடுவதற்கு வழிவகுத்தது . பள்ளிவாசல்களைத் தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்விக்கூடங்கள் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களாக மாற்றம் கண்டன . ஸைதூனா பள்ளிவாசலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிலையம் இன்று ஸைதூனா பல்கலைக்கழகமாக விளங்குகிறது . முஸ்லிம் உலகில் ஆரம்பிக்கப்பட்ட முதலில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் ஸைதூனாவும் இடம்பிடித்துள்ளது . 12 நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றங்கள் ஸைதூனாவை மேலும் பிரபல்யமடையச் செய்ததுடன் இஸ்லாமிய அறிவின் கேந்திர நிலையமாகவும் அது மாற்றமடைந்தது .
அல்குர்ஆன் , சட்டம் , இறையியல் , இலக்கணம் , மருத்துவம் , விஞ்ஞானம் போன்ற துறைகள் இங்கு கற்பிக்கப்பட்டன . ஸைதூனா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியமாகும் . ஸைதூனா நூலகம் அக்காலத்தில் வடஆபிரிக்காவில் அமைக்கப்பட்டிருந்த ஏனைய நூலகங்களை விட பெரியதாக காணப்பட்டது . ஸைதூனாவின் இணைநுலகமாக விளங்கிய அல் - அப்தலிய்யாவில் ஒப்பற்ற , அரிய நூல்களும் , கையெழுத்துப்பிரதிகளும் காணப்படதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர் .
இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பெற்ற அறிஞர்களை உருவாக்கித்தந்த பெருமையும் ஸைதூனா பல்கலைக்கழகத்தைச்சாரும் . வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன் அவர்களும் ஸைதூனவின் பட்டதாரியாவார் . இப்னு அரபா , இமாம் மஸ்ரி போன்றவர்களும் ஸைதூனாவின் பாசறையில் வளர்ந்தவர்களாவர் இதேவேளை அமெரிக்காவில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனத்திற்கும் “ ஸைதூனா ” என்றே பெயரிடப்பட்டுள்ளது .
Sunday, December 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment