Wednesday, December 28, 2011
டெல்லி:பிசுபிசுத்துப் போன ஹஸாரேயின் போராட்டம்
புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவை கோரி மும்பையில் ஹஸாரே நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தலைநகரான டெல்லியில் ஹஸாரேயின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் பிசுபிசுத்துப் போனது.
டெல்லியில் நிலவும் கடுமையான குளிரும், ஹஸாரே பங்கேற்காததும் போராட்டத்தின் மவுசை குறைத்துவிட்டது. மக்களின் பங்களிப்பு மிக குறைவாகவே காணப்பட்டது.
ஹஸாரே போராட்டத்தை டெல்லியில் இருந்து மாற்றி மும்பைக்கு சென்றதும் இதுதான் காரணம் என கூறப்படுகிறது.
சரியாக 10 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே துவங்கியது. ஹஸாரே குழுவைச் சார்ந்தமுக்கிய நபரான சாந்திபூஷண் கூட அரை மணிநேரம் தாமதமாகவே போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு வருகை தந்தார். மக்களின் பங்களிப்புகுறைய மோசமான காலநிலைதான் காரணம் எனஅவர் தனது உரையில் தெரிவித்தார்.
மோசமான காலநிலையும், ஹஸாரே கலந்துகொள்ளாததும் மக்கள் வருகை குறைய காரணம் என சமூக ஆர்வலர் கோபால்ராஜு கூறினார்.
சமூக இணையதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் நடத்தப்பட்ட பிறகும் அதுவெல்லாம் ராம்லீலா மைதானத்தில் பிரதிபலிக்கவில்லை. ராம்லீலா மைதானத்தில் மட்டுமல்ல, சமூக இணையதளங்களிலும் ஹஸாரேக்கு முன்னர் கிடைத்த ஆதரவு குறைந்துள்ளது.
முன்பு ராம்லீலா மைதானத்தில் ஹஸாரே நடத்திய போராட்டத்தை நாட்டின் பெரும்பாலான செய்தி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பியபோதும் நேற்று நேரடி ஒளிபரப்பிற்கான ஒ.பி வேன்கள் விரல்விட்டு எண்ணும் வகையிலேயே வருகை தந்திருந்தன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment