Facebook Twitter RSS

Sunday, December 11, 2011

Widgets

manjakollai review

லிபியா மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் வெற்றி பெறுமா?
காலணித்துவ நாடாக மாற்றியமைக்கும் முயற்சியில் நேட்டோ நாடுகள் தமது தாக்குதல்களை முன்னெடுப்பதாக லிபியத் தலைவர் முஅம்மர் கத்தாபி தெரிவித்துள்ளார்.
இவரின் இந்தக் கூற்றில் உள்ள நியாயங்களை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாநாயக அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு அப்பால் செயற்படும் எந்த சக்தியினதும் நடவடிக்கைகள் ; அந்த நாட்டினாலேயே கையாளப்பட வேண்டும். இதுதான் அந்த நாட்டின் இறைமைக்கு சர்வதேச நாடுகள் வழங்கும் சுதந்திரம். மற்றுமொரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தில் தலையிடுவதை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(4) உறுப்புரை கூட அனுமதிப்பதில்லை.
இவ்வாறிருக்க இறைமையுள்ள அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் கிளர்ச்சியாளர்கள் தரப்பிற்கு சர்வதேச நாடுகள் பல்வேறு வகையிலும் உதவி செய்து வருகின்றன.
பிரான்ஸ் அரசாங்கம் இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு அணுவாயுதங்கள் , ரொக்கட் ஏவு தளங்கள் , துப்பாக்கிககள் , தாங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் உட்பட பல்வேறுபட்ட ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் த நியு யோர்க் டைம்ஸ்பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படி , பெங்காசியை தளமாகக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை பெற்றிருப்பதாக தெரிவித்தது. ஆனால் , அந்த நாடுகளின் பெயர் விபரங்களை அந்த செய்திப் பத்திரிகை வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விசேட படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சியளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே , லிபியா மீதான குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியளிக்கும் நடவடிக்கை ஆரம்பித்து விட்டது. லிபியாவுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்வதென பல மாதங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூட ஒரு ஏகாதிபத்தியவாதிகளின் சாதமாகத்தான் இயங்குகின்றது. அது சட்டரீதியான நீதிமன்றமாக இயங்கவில்லை என்பதை லிபியா மீதான முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நீதிமன்றத்தின் தலைவர் ஜோஸ் லூயிஸ் மொரன் ஒகம்போ உண்மையில் பாதிக்கப்பட்ட லிபியாவுக்காக குரல் கொடுக்கவில்லை. அடுக்கடுக்காக குற்றமிழைத்து வரும் அமெரிக்கா , பிரித்தானியா , பிரான்ஸ் ஆகிய சதிகார நாடுகளுக்கு சார்பாகவே தனது தீர்ப்பை வழங்குகின்றார்.
கடந்த மே மாதம் திரு. ஒகம்போ கத்தாபி மீதும் , அவரது மகன் ஷைப் அல் இஸ்லாம் மீதும் , மற்றுமொறு மைத்துனரான உளவுப்பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் சனூசிமீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இவர்கள்மூவரும் மனிதநேயத்துக்கு எதிராக பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதே அவரின் குற்றச்சாட்டு. எனினும் , இதற்கான எந்த சான்றுகளும் நிறூபிக்கப்படவில்லை.
அதன் பின்னர் , கடந்த 27 ( ஜூன்) ஆம் திகதி இவர்கள் மூவரையும் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைவர் திரு. ஒகம்பே உத்தரவிட்டார். மனிதநேயத்திற்கு எதிராக இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களுடன் இவர்களுக்கு மறைமுகத்தொடர்பு உள்ளதற்கான நியாயமான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும். எதுவிதஉறுதியான ஆதாரங்களையோ , அதிகாரங்களையோ அவர் சுட்டிக்காட்டவில்லை. உண்மையில் லிபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உறுப்பினர் அல்ல. அதேபோல் , அமெரிக்கா , சீனா , ரஷ்யா , இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதன் உறுப்புரிமையை பெறவில்லை.
அதேநேரம் , சர்வதேச சட்டம் என்பது சிவில் சட்டத்தைப் போன்று விரும்பியோ விரும்பாமலோ கடைபிடிக்க வேண்டியதொன்றல்ல. அது இணக்கத்தின் அடிப்படையில் அடிபணிவதாகும். இவ்வாறிருக்க , லிபியத் தலைவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets