Monday, December 26, 2011
இனிய மார்க்கத்தை தழுவிய- Actress Queenie Padilla (ஹதிஜா)
மானிடனுக்கு அவனது உள்ளத்தில் நேர்வழியை காட்டிட கால அவகாசம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. சமீபத்தில் பிலிப்பைன்ஸில் பிரபலமாகஅறியப்பட்ட குயினி படில்லா என்ற தாரகை தற்போது ஹதிஜாவாக தனது பெயரோடுதன்னையும் மாற்றிக் கொண்டு இனிய மார்க்கமான இஸ்லாத்திற்குள் ஐக்கியமாகியிருக்கிரார் - அல்ஹம்துலில்லாஹ்.
கோடிக்கணக்கான வருமானமும் உச்சம் போற்றும் புகழும் இவரைச் சுற்றி வந்து கொண்டிருக்கும்போதே அவைகளனைத்தையும் உதறிவிட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற மன நிம்மதி தரும் முடிவுக்கு வந்துள்ளது அவரை உற்று நோக்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜித்தா வந்திருந்த அவரிடம் காணொளிப் பேட்டியினை எடுத்திருக்கின்றனர். தனது கடந்த காலவாழ்வில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்து எறியப்பட்டு விட்டதாகவும், இனி வரும்காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்தப் பெண் சொல்லும் கட்சியைப் பாருங்கள்.
தன்னுடைய முடிவால் எதிர்ப்புகளும் பண இழப்பும் ஏற்படும் என்று நன்றாகத்தெரிந்தே இம்முடிவை எடுத்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய நாடு கிடையாது. கிறிஸ்த்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் குர்ஆனை விளங்கி அல்லாஹ்வின் தூதரின் போதனைகளை விளங்கியே இவர் தனது மார்க்கத்தை தேர்ந்தெடுத்தள்ளதை அறியலாம்.
இதோ சகோதரியின் பேட்டியை காணுங்கள், இறுகிய மனதையும் கலங்க வைக்கும் உணர்ச்சிபூர்வமான காணொளிகள். இளகிடும் நம் உள்ளம் இதனை முழுமையாக பார்த்து படிப்பினைபெற வேண்டிய காணொளிகள், குறிப்பாக தாய்மார்கள் பார்க்க வேண்டிய காணொளிகள்
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! குர்ஆன் 13:28
எழுத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment