Facebook Twitter RSS

Saturday, December 24, 2011

Widgets

ஓ.பி.சி. ஒதுக்கீட்டினுள் முஸ்லிம்களுக்கு 4.5% இடஒதுக்கீடு

ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் 22.12.2011 அன்று நடந்த கேபினட் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவில் 4.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத மற்றும் மொழி ரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசியஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் தெரிவித்தார். அதே வேளையில் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இது ஒன்று மட்டுமே தீர்வாக அமைந்து விடாது. நிலவில் உள்ள அரசாணைப்படி ஓ.பி.சி பிரிவினருக்கு அதாவது சில மாநிலங்களிலுள்ள ஒரு சில முஸ்லிம் பிரிவு உட்பட பல்வேறு ஓ.பி.சியினருக்கு 27% ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதில் சில பிரிவினருகளுக்கென்று தனி உள் ஒதுக்கீடு எதுவும் இல்லை. ஓ.பி.சி யில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இதனால் எந்தப்பயனும் இல்லை. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் வரும் பெரும்பாலான இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள உயர் வகுப்பினருக்கே போய் சென்றடைகிறது. இந்த வகையில் நிலவில் உள்ள 50% ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 13.7% ஒதுக்கீடும் அதில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் பரிந்துரை செய்தது போன்று முஸ்லிம்களுக்கு 10% ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒ.பி.சி ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். ஏனென்றால் சர்ச்சார் கமிட்டி தனது அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தற்போது இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் அனைத்து பிரிவு இந்து ஒ.பி.சி யினரைவிட மிகவும் பிற்படுத்தப்பட்டநிலையில் தான் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளதாக கூறினார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில். மேலும் ஜனவரி 1-2012ல் இருந்து அமலுக்கு வர இருக்கும் இந்த ஒதுக்கீட்டை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets