Facebook Twitter RSS

Friday, December 30, 2011

"தானே' புயல் தமிழகத்தை நெருங்குகிறது : இன்றும், நாளையும் பலத்த மழை எச்சரிக்கை

"தானே' புயல் தமிழகத்தை நெருங்குகிறது : இன்றும், நாளையும் பலத்த மழை எச்சரிக்கை சென்னை: வங்கக் கடலில், கிழக்கு மற்றும் தென்கிழக்கே, 268.817 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், நாளை (30ம் தேதி), நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என்றும், 24 மணி நேரத்தில், அது கரையை நெருங்கும் போது, வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20ம் தேதி துவங்கியது. வங்கக் கடலில்பல முறை உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, சீசனில் கிடைக்க வேண்டிய மழையை விட, தமிழகத்தில் கூடுதலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், இயல்பை விட அதிக மழை கிடைத்தது. வழக்கமாக, மார்கழி மாதத்தில் தான் பனிப்பொழிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு தட்பவெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், முன்னதாகவே பனி பொழியத்துவங்கியது. இதன் காரணமாக, தமிழகத்தில் இரவு நேரத்தில், 19 டிகிரி செல்சியசை ஒட்டியே, வெப்பளவு இருந்தது. இதனால், அதிகமான பனிப்பொழிவு உணரப்பட்டது. சில வாரங்கள் ஓய்வுக்குப் பின், தென்கிழக்கு வங்கக் கடலில், கடந்த 24ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுப் பெற்று, கடந்த 26ம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடலில், சென்னையிலிருந்து தென்கிழக்கே, 456.989 கடல் மைல் தூரத்தில், புயலாக உருவெடுத்தது. இதற்கு, "தானே' என, பெயர் சூட்டப்பட்டது. இதன் காரணமாக, கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கிராமங்களில், தண்ணீர் புகுந்துள்ளது. கரையோரம் நிறுத்திய படகுகள், கடலில் அடித்துச் செல்லப்பட்டன; பல படகுகள் சேதமடைந்தன. நேற்று காலை 5:30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தென்கிழக்கே, 322.580 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டுடிருந்த "தானே' புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. நேற்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தென்கிழக்கே, 268.817 கடல் மைல் தூரத்தில், மையம் கொண்டுள்ளது. நாளை (30ம் தேதி) காலை நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே தானே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் எச்சரிக்கை கூண்டு புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு, 90 முதல் 140 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால், கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும். இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். சூறைக்காற்றில், மரங்கள் வேரோடு சாயலாம். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது; பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடல் சீற்றம் காரணமாக, அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்புகின்றன. நேற்று மாலை முதல், பலத்த சூறைக்காற்றும் வீசத் துவங்கியது. தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகத்திற்கும், புயல் எச்சரிக்கை குறித்து, அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் பகுதியில் பாதிப்பு அதிகமிருக்கும் இடங்களில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆறுதல் : இவ்வளவு எச்சரிக்கைகளுக்கும் இடையே, புயல் தரையை நெருங்கும் போது, சற்றே வலுவிழக்கும் வாய்ப்புள்ளது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது, சற்று ஆறுதலான செய்தி. கடலூர் துறைமுகத்தில் 8ம் எண் கொடியேற்றம் : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், கடலூர் துறைமுகத்தில் 8ம் எண் எச்சரிக்கைக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நேற்று முன்தினம் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மேலும், தீவிரமடைந்து புயலாக மாறி கடலூருக்கும், நெல்லூருக்குமிடையே கரையை கடக்கும் என, வானிலை மையம் நேற்று அறிவித்தது. தற்போது அந்த புயலுக்கு, "தானே' என பெயரிடப்பட்டுள்ளது. "தானே' புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், சென்னைக்கு தென் கிழக்கே 400 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல், கடலூர்-நாகப்பட்டினமிடையே நாளை (30ம் தேதி) கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக,கனமழையுடன் 60 முதல் 65 கி.மீ., வரை பலத்த சூறைக் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் எச்சரிக்கைக் கொடி எண்.8 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்

Wednesday, December 28, 2011

டெல்லி:பிசுபிசுத்துப் போன ஹஸாரேயின் போராட்டம்

புதுடெல்லி:வலுவான லோக்பால் மசோதாவை கோரி மும்பையில் ஹஸாரே நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தலைநகரான டெல்லியில் ஹஸாரேயின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் பிசுபிசுத்துப் போனது. டெல்லியில் நிலவும் கடுமையான குளிரும், ஹஸாரே பங்கேற்காததும் போராட்டத்தின் மவுசை குறைத்துவிட்டது. மக்களின் பங்களிப்பு மிக குறைவாகவே காணப்பட்டது. ஹஸாரே போராட்டத்தை டெல்லியில் இருந்து மாற்றி மும்பைக்கு சென்றதும் இதுதான் காரணம் என கூறப்படுகிறது. சரியாக 10 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே துவங்கியது. ஹஸாரே குழுவைச் சார்ந்தமுக்கிய நபரான சாந்திபூஷண் கூட அரை மணிநேரம் தாமதமாகவே போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு வருகை தந்தார். மக்களின் பங்களிப்புகுறைய மோசமான காலநிலைதான் காரணம் எனஅவர் தனது உரையில் தெரிவித்தார். மோசமான காலநிலையும், ஹஸாரே கலந்துகொள்ளாததும் மக்கள் வருகை குறைய காரணம் என சமூக ஆர்வலர் கோபால்ராஜு கூறினார். சமூக இணையதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் நடத்தப்பட்ட பிறகும் அதுவெல்லாம் ராம்லீலா மைதானத்தில் பிரதிபலிக்கவில்லை. ராம்லீலா மைதானத்தில் மட்டுமல்ல, சமூக இணையதளங்களிலும் ஹஸாரேக்கு முன்னர் கிடைத்த ஆதரவு குறைந்துள்ளது. முன்பு ராம்லீலா மைதானத்தில் ஹஸாரே நடத்திய போராட்டத்தை நாட்டின் பெரும்பாலான செய்தி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பியபோதும் நேற்று நேரடி ஒளிபரப்பிற்கான ஒ.பி வேன்கள் விரல்விட்டு எண்ணும் வகையிலேயே வருகை தந்திருந்தன

Tuesday, December 27, 2011

்: பிரான்ஸூக்கு எதிரான துருக்கியின் நிலைப்பாட்டுக்கு ...

Manjakkollaireview.blogspot.com பிரான்ஸூக்கு எதிரான துருக்கியின் நிலைப்பாட்டுக்கு ...: ஆர்மேனியாவில் 1915ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலைக்கு,துருக்கியை போர் குற்றவாளியாக்குவதற்காக பிரான்ஸினால் கொண்டுவரப்பட்ட தீர...

அன்னா ஹசாரேயின் வேஷம் கலைந்தது!

DEC 27: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது. 1) ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் என்பவரின் செயலராக பணியாற்றி உள்ளார் அன்னா ஹஸாரே 2) 1983-ல் உத்தரப் பிரதேச மாநிலம்,கோண்டாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்மூன்று நாள் பயிற்சி பாசறையில் பங்கு கொண்டுள்ளார். 3) 1965 ல் இந்தியா, பாகிஸ்தான் யுத்தம் நடக்கும் போது அதில் பங்கெடுக்காமல் இந்திய ராணுவத்தில்இருந்து ஓடி ஒளிந்து கொண்டார். 4) நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில் பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் அன்னா ஹஸாரே. அன்னா ஹஸாரேவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். இயக்கதான் என்ற திக்விஜய்சிங்கின் குற்றச்சாட்டை இவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த செய்தி களை பார்பன தினமணி, தினமலர் போன்றவை இருட்டடிப்பு செய்கின்றன. " தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்" என்பதை மறைக்க ஆயிரம் பொய் சொல்கிறார் அன்னா ஹஸாரே. இதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பது தான் என்ன? இப்படி பட்ட ஒரு பெய்யரை நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். அன்னா ஹஸாரே தனதுவேஷத்தை கலைத்து வெளியே வருவாரா! தன்னை யாரென்று அறிவிப்பாரா!

Monday, December 26, 2011

இனிய மார்க்கத்தை தழுவிய- Actress Queenie Padilla (ஹதிஜா)

மானிடனுக்கு அவனது உள்ளத்தில் நேர்வழியை காட்டிட கால அவகாசம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. சமீபத்தில் பிலிப்பைன்ஸில் பிரபலமாகஅறியப்பட்ட குயினி படில்லா என்ற தாரகை தற்போது ஹதிஜாவாக தனது பெயரோடுதன்னையும் மாற்றிக் கொண்டு இனிய மார்க்கமான இஸ்லாத்திற்குள் ஐக்கியமாகியிருக்கிரார் - அல்ஹம்துலில்லாஹ். கோடிக்கணக்கான வருமானமும் உச்சம் போற்றும் புகழும் இவரைச் சுற்றி வந்து கொண்டிருக்கும்போதே அவைகளனைத்தையும் உதறிவிட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற மன நிம்மதி தரும் முடிவுக்கு வந்துள்ளது அவரை உற்று நோக்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜித்தா வந்திருந்த அவரிடம் காணொளிப் பேட்டியினை எடுத்திருக்கின்றனர். தனது கடந்த காலவாழ்வில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்து எறியப்பட்டு விட்டதாகவும், இனி வரும்காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்தப் பெண் சொல்லும் கட்சியைப் பாருங்கள். தன்னுடைய முடிவால் எதிர்ப்புகளும் பண இழப்பும் ஏற்படும் என்று நன்றாகத்தெரிந்தே இம்முடிவை எடுத்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய நாடு கிடையாது. கிறிஸ்த்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் குர்ஆனை விளங்கி அல்லாஹ்வின் தூதரின் போதனைகளை விளங்கியே இவர் தனது மார்க்கத்தை தேர்ந்தெடுத்தள்ளதை அறியலாம். இதோ சகோதரியின் பேட்டியை காணுங்கள், இறுகிய மனதையும் கலங்க வைக்கும் உணர்ச்சிபூர்வமான காணொளிகள். இளகிடும் நம் உள்ளம் இதனை முழுமையாக பார்த்து படிப்பினைபெற வேண்டிய காணொளிகள், குறிப்பாக தாய்மார்கள் பார்க்க வேண்டிய காணொளிகள் (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! குர்ஆன் 13:28 எழுத்து

2012 புத்தாண்டு சிந்தனைகள்.

சிந்திக்கவும்: புத்தாண்டு கொண்டாட்டம் என்றபெயரில் உலகம் முழுவதும் வெடிக்கப்படும் வெடிகள் எத்தனையோ கோடி ரூபாய்களை தாண்டும். எத்தனையோ நாடுகளில் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். ஒருவேளை உணவு இல்லாமல் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்த சூழலில் இது போன்று பணத்தை கொண்டாட்டங்கள் என்ற பெயரில் வீணடிக்காமல் இந்த புத்தாண்டில் அது போன்ற மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த பணங்களை அனுப்பி கொடுத்தால் அதில் கொஞ்ச மக்களை காபாற்ற உதவும். இது ஒவ்வொரு மனித நேயம் உள்ள மனிதனின் கடமையாகும். இந்த புத்தாண்டில் இது போன்ற கொண்டாட்டங்களை தவிர்த்து. தினம்தினம் மருத்துவ மற்றும் உணவு வசதி இல்லாமல் சாகும் மக்களை பற்றி சிந்திப்போமாக, அவர்களது நல்வாழ்வுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் என்று உறுதி எடுப்போம். அன்புடன் ஆசிரியர

Sunday, December 25, 2011

http://www.adiraithunder.blogspot.com/2011/12/blog-post_25.html




ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து, நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது. ரஷ்யாவில், கடந்த 4ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அதில், பிரதமர் விளாடிமிர் புடினின் ஆளும் கட்சி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது. பிரதமர் புடின் முறைகேடுகள் குறித்து, வாய் திறக்கவில்லை.

ஆனால், அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், அரசியலில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அறிவித்தார். ஆனால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளனர். இதனால், கடந்த வாரங்களில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பேரணிகளை நடத்தின. இந்நிலையில், நேற்று, இதுவரை ரஷ்யா எதிர்பாராத அளவிற்கு, தலைநகர் மாஸ்கோவில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, பிரமாண்ட பேரணி நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அலக்சி நவான்லி பேசுகையில், "இனி, ரஷ்யா ஊழலைப் பொறுத்துக் கொள்ளாது. இந்தக் கூட்டம், பார்லிமென்டைக் கைப்பற்ற போதுமானது தான். ஆனால், நாம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விளாடிவோஸ்டோக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தன.

ஹமாஸ் - பதாஹ் சந்தித்துப் பேச்சு - இணங்கிச் செயற்படவும் முக்கிய தீர்மானம்



இஸ்ரேலின் மிரட்டலுக்கு இடையே ஃபலஸ்தீனில் ஐக்கிய அரசை உருவாக்க ஹமாஸும், ஃபத்ஹும் சம்மதம் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பதவி பிரமாணம் மேற்கொண்டு ஆட்சியில் அமரும் வகையில் அரசை உருவாக்க எகிப்து தலைநகரமான கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும், ஃபத்ஹ் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரு தலைவர்களும், ஃபலஸ்தீன் தேசிய பாராளுமன்ற சட்டமியற்றும் கவுன்சிலில் கலந்துகொள்ள ஒப்புதல் தெரிவித்தனர். ஐக்கிய அரசை உருவாக்குவதுடன் ஃபதஹிற்கு செல்வாக்கு உள்ள ஃபலஸ்தீன் விடுதலை இயக்கத்தை(பி.எல்.ஒ) புனரமைப்பதற்கான பரிசோதனை குழுவில் ஹமாஸின் பிரதிநிதிகளை சேர்க்கவும் இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால்,பி.எல்.ஓவில் சேருவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி பர்ஹூம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே,ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய நடவடிக்கையின் மூலமாக ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு சமாதான பேச்சுவார்த்தையில் விருப்பமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் அரசியல் இயக்கம் இல்லை எனவும், தீவிரவாத இயக்கம் எனவும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
thanks to yarlmuslim

விஷ செடியில் பூத்த விஷ மலர் ( தினமலர்)!



DEC 18: தினமலர் (மலம்) செய்தி: 1. கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு பணம் வருவதற்கான ஆதாரம் சிக்கியது: விசாரணை துரிதம்.

2. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, போராட்டத்திற்கு ஆள் சேர்க்கவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும், பணம் தேவைப்படுகிறது.

3. இதனால்  பணம் வரும் பின்னணி குறித்து விளக்கம் அளிக்கும்படி, போராட்டத்தை முன்னின்று நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

4. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.அறவழிப் போராட்டம் என்ற பெயரில், வன்முறை போராட்டம் நடக்கிறது.

5. நாராயணசாமி புகார்: உதயகுமார் படபடப்பு. உதயகுமாருக்கு, வெளிநாடுகளில் இருந்து, தொண்டு நிறுவன நிதி வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது மிகவும் பதட்டமாகிவிட்டார். வழக்கமாக போராட்டங்கள் குறித்து நிறுத்தி, நிதானமாக பேசும் வழக்கமுடைய உதயகுமார்.

தினமலருக்கு பதில்:  கூடங்குளம் அணு அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தினமலம் நாளிதழ் கொச்சைபடுத்தி வருகிறது. ஹிந்துத்துவா இயக்கங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று கொக்கரிகின்றன. அவர்களுக்கு ஆதரவாக ஹிந்துத்துவா பயங்கரவாத நாளேடான தினமலம் தினமும் தனது பத்திரிகையில் வாந்தி எடுத்து வருகின்றது.

வழக்கமாக உதயகுமார் நிதானமாக பேசுவாராம் தினமலர் நிருபர் இப்படி கேட்டது பதட்டம் ஆகிவிட்டாராம் தினமலத்தின் திரிபு வாதங்களை பாருங்கள். இப்படி கேவலமாக கேள்வி கேட்டவர்களுக்கு அவர் கோபமாக பதில் சொன்னதை தினமலம் திரித்து பதட்டம் என்று எழுதுகிறது.தமிழக அரசு முழு ஒத்துழைப்பு, அறவழி போராட்டம் என்கிற பெயரில் வன்முறை போராட்டம் இப்படி பத்திரிகை முழுவதும் மலம் கழித்து வைத்துள்ளது தினமலம்.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதை ஒடுக்க மத்திய அரசு போராட்ட குழு தலைவர்களை பின்வாங்க செய்ய வெளிநாட்டில் இருந்து பணம் வருகின்றது என்று சொல்லி பூச்சாண்டி காட்டி மக்கள் எழுச்சியை அடக்கி விடலாம் என்று திட்டமிடுகிறது.

பார்பன தினமலமும் அதன் ஹிந்துத்துவா கோட்டான்களும்  எப்படியாவது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விடவேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகின்றன.  அதேநேரம் பாதுகாப்பான, தமிழகத்திற்கு அதிக வருமானத்தை கொடுக்கும் சேது சமுத்திர திட்டத்தை "ராமர் பாலம்" என்று சொல்லி தடுத்தவர்கள்தான் இந்த இராமாயண வானர கூட்டங்கள்.

ஜப்பானை நேரில் பார்த்த பிறகும் இந்த நாசகார திட்டத்தை தமிழன் தலையில் தள்ளி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழனை மீண்டும் ஒரு இன அழிப்புக்கு உள்ளாக்கும் திட்டமே கூடங்குளம் அணு நாசகார திட்டம். தமிழர்கள் ஓர் அணியில் நின்று இதை எதிர்க்க வேண்டும். விஷ செடியில் பூத்த விஷ மலராகிய தினமலரை அழித்து ஒழிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகமும் தமிழர்களும் நிம்மதியாக இருக்க முடியும்.

பொறியியல் கலந்தாய்வு, அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் – ஓர் ஆய்வு!

ப்ளஸ்2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன், பல மாணவர்களுக்கு நினைவில் வருவது பொறியியல், மருத்துவ கவுன்சிலிங்தான். மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: இந்தாண்டு, ப்ளஸ்2 பொதுத்தேர்வு, மார்ச் 8ம் தேதி துவங்குவதையடுத்து,மாணவர்கள் முழுமூச்சுடன் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்வை ஒப்பிடும்போது, 2011ம் ஆண்டு நிறையபேர் அதிக மதிப்பெண் பெற்றனர்.உதாரணமாக, 2010ம் ஆண்டு கணிதப் பாடத்தில் 200/200 பெற்றவர்கள் 1756 பேர், ஆனால் 2011ம் ஆண்டு கணிதத்தில் சதமடித்தவர்கள் 2697 பேர். எனவே, 2012ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 3000-ஐ தாண்டினால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. இயற்பியல் பாடத்தில் 2010ம் ஆண்டு 231பேர் 200 மதிப்பெண்கள். 2011ம் ஆண்டில் 246 பேர் முழு மதிப்பெண்கள். வேதியியல் பாடத்தில, 2010ம் ஆண்டு 741பேர் முழு மதிப்பெண்கள் பெற்ற அதேநேரத்தில், 2011ல் 1243பேர் முழு மதிப்பெண்கள். 2012ல் இன்னும் அதிகளவிலான மாணவர்கள் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில், தற்போதைய நிலையில் 525 பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், மேலும் சில புதிய கல்லூரிகள் கணக்கில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மொத்தமாக, சுமார் 540 பொறியியல் கல்லூரிகள் அடுத்த ஆண்டில் இருக்கும் என்று கொள்ளலாம். ஏனெனில்,இந்த 2011ம் ஆண்டில் புதிதாக 37 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சேர்ந்தன. அடுத்த ஆண்டில் கூடுதலாக 15 கல்லூரிகள் கணக்கில் சேரும் என்று கொள்ளலாம். காலியிடங்கள் இந்த 2011ம் ஆண்டில், கவுன்சிலிங் மூலமாக பெறக்கூடிய பொறியியல் இடங்களாக 1,54,305 இருந்தன. அவற்றில் 1,06,182 இடங்கள் அகடமிக்பிரிவிலும், 3984 இடங்கள் தொழில் பிரிவிலும் நிரம்பின. காலியாக மிஞ்சிய இடங்களின் எண்ணிக்கை 44,139. மேனேஜ்மென்ட் கோட்டாவிலும்நிரம்பாமல் போன இடங்களை சேர்த்துக் கணக்கிட்டால், மொத்த காலியிடங்கள் 60,000க்கும் மேல். புதிய கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால், 2012ம் ஆண்டு அரசு பொறியியல் கவுன்சிலிங்கில் இருக்கக்கூடிய மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,75,000 என்ற அளவினைத் தாண்டிவிடும். அதேசமயம், தற்போது தமிழகத்தில், பொறியியல் படிப்பைப் பற்றிய மோகம் குறைந்துகொண்டே வருவதால், 2012ம் ஆண்டில் பொறியியல் காலியிடங்களின் எண்ணிக்கை 75,000க்கும் மேலே சென்றுவிடும்(மேனேஜ்மென்ட் இடங்களையும் சேர்த்து) என்று கூறப்படுகிறது. அனைவருக்கும் இடம் உண்டு!! இந்த சூழலில், மாணவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நமக்குப் பொறியியல் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று யாரும் நினைக்கவோ, குழம்வோ தேவையில்லை. AICTE விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச தகுதி உங்களுக்கு இருந்தாலே போதும், கவுன்சிலிங் மூலம் உங்களுக்கு பொறியில் இடம் கட்டாயம் கிடைக்கும். ஆனால், சிறந்த மற்றும் பெயர்பெற்ற கல்லூரிகளுக்குபோட்டி எப்போதும் உண்டு. அந்த சமயத்தில் மட்டுமே உங்களின் மதிப்பெண்களும், இதர தகுதிகளும் முக்கியப் பங்காற்றும். பாடப்பிரிவகளை விட சிறந்த கல்லூரிக்கே முக்கியத்துவம் கொண்டுங்க வரும் 2012ம் ஆண்டில், பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவிருக்கும் பெற்றோர்-மாணவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், குறிப்பிட்ட படிப்பைவிட, குறிப்பிட்ட கல்லூரிக்கே முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில், பல பெரிய மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்கள், சிறந்த மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகளிலேயே கேம்பஸ் இன்டர்வியூநடத்தும். உதாரணமாக, முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில், பாடப்பிரிவுகள் என்ற எல்லையைத் தாண்டி, 85% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, நல்ல வேலை வாய்ப்பு வேண்டுமென்றால்,குறிப்பிட்ட பிரிவைவிட, கல்லூரிக்கே

இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?

எனதருமை இஸ்லாமிய சமுதாயமே! தஃவாபணியின் முக்கியம் பற்றி இந்த சமுதாயம் இனியாவது சிந்நிக்குமா? இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ந நபி (ஸல்) அவர்கள் ஒன்றுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தும் 40 ஆண்டு காலம் உண்மையாளன் என்ற பெயர் பெற்றனர். அதன் பின் மனித சமுதாயத்திற்கு ஒருவழிகாட்டியாக இறைவனால் அனுப்பப்பட்ட இனிய தூதர் ஆனார்கள். இந்த மனிதசமுதாயத்திற்கு அனைத்துத்துறைகளிலும் வழிகாட்டியதோடு மனித நேயத்தை கற்றுக்கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் உண்ணுவது முறையல்ல என்ற உன்னத மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்தனர். மனித நேயமிக்க இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஒரு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதை எண்ணி வேதனைப்படுகின்றேன். இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். இந்தியாவில் முதன் முதலில் வியாபாரமாகத்தான் இஸ்லாம் பரவியது. அவர்கள் செய்த வியாபாரத்தில் நேர்மை இருந்தது. இறையச்சம் மிக்கவர்களாக ஒழுக்க சீலர்களாகதாங்கள் செய்கின்ற அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை பெறவேண்டும் என எண்ணிச் செய்தார்கள். அதன் காரணமாக இஸ்லாம் இந்திய மண்ணில் பரவியது. இதன் பிறகு இந்திய மண்ணில் 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா? குர்ஆன், ஹதீஸ்படி ஆட்சி நடத்தினார்கள்? அரபி மொழியில் உள்ள குர்ஆனை தமிழ் நாட்டில் தமிழிலும், மகாராஷ்டிராவில் மராத்தியிலும், இந்தியாவில் அந்தந்த மாநில மொழிக்கொப்ப இந்த குர்ஆன் அன்று மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டு, அவற்றை மக்கள் மத்தியில் எடுத்து வைத்திருந்தால், தாங்கள் இந்த நாட்டை ஆண்டபோது ஒரு இஸ்லாமிய ஆட்சிசெய்திருப்பார்களேயானால் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்ட இந்த பூமியில் ஒரு பாபரி மஸ்ஜித் இன்று இடிக்கப்படுமா? இந்த இழி நிலை ஏற்படுமா? இது இஸ்லாமிய நாடாக அல்லவா மாறி இருக்க வேண்டும்.என்ன செய்தார்கள் இந்த முஸ்லிம் மன்னர்கள்? நபி பட்டம் கிடைத்து 23 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் தியாகம், உழைப்புக் காரணமாக உலகில்இன்று மூன்றில் ஒரு பங்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. (குர்ஆன், ஹதீஸ்படி நடக்கவில்லை என்றாலும்) அப்படி அவை தோன்றின. இங்கே என்ன செய்தார்கள் இவர்கள்? கொஞ்சம் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட சமூகக் காவலர்கள் எனக் கூறிக்கொண்டு ஏகப்பட்ட பட்டம் பெற்றுள்ள இந்த கண்ணியம் மிக்கவர்கள் என்ன செய்தார்கள்? இஸ்லாத்தின் மனிதப் பண்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களா? இல்லை! மேடை கிடைத்தால் போதும் என மக்களை மூடர்களாக்கி இவர்கள் அரசியலில் அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் பிழைப்பு நடத்தினார்கள். இவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்களா? ஆண்டுக்கு ஒரு முறை நபிக்கு விழா எடுக்கும் இவர்கள் அன்றைக்காவது தஃவா பணி செய்கிறார்களா? இல்லை! இல்லை! நாங்கள்தான் ரசூலுல்லாஹ்வின் போதனைகளைப் பின்பற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டுமுஸ்லிம் அல்லாத மக்களிடம் பணிசெய்கிறோம் எனக் கூறும் இவர்கள் தாங்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என எண்ணி தமக்கு என ஒரு சட்டத்தைப் போட்டு கொண்டு இந்த வரையறைக்குள்ளேதான் எங்கள் ஜமாஅத்தில் இணையலாம் எனக் கூறுகின்றார்கள். எந்த நிலையிலாவது இஸ்லாத்தை அதன் முழுவடிவத்தை செயல் படுத்தவேண்டும்என நினைத்தார்களா? அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள முஸ்லிம்களில் 46% வறுமைக் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே! முஸ்லிம்களில் எத்தனை பெரிய பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஜகாத் ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள்? இன்றும் எத்தனை முஸ்லிம்கள் வீட்டில் வேலை செய்யும் அரிஜன இன மக்கள் இருக்கின்றார்கள். ஜாதி இஸ்லாத்தில்இல்லை எனவே இந்த நிலையோடு ஏன் வாழ்கின்றீர்கள்? எனக் கேட்டு இஸ்லாத்தில் இணைந்த அரிஜன்கள் எத்தனை? அடிமைத் தொழிலை தவிர வேறு ஒன்றும் தொழில் செய்ய முடியாத ஒரு அடிமை சமுதாயத்திடமாவது இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டதா? இனியாவது முஸ்லிம் சமுதாயம் தஃவாபணியின் (அழைப்பு) முக்கியம் பற்றி சிந்தித்து இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும். அப்படி இந்த இஸ்லாம் பரப்பப்படுமானால் எந்த பாபர் மஸ்ஜிதும் இடிக்கப்படுகின்ற சூழ்நிலையை காணமுடியாது. -

Saturday, December 24, 2011

ஓ.பி.சி. ஒதுக்கீட்டினுள் முஸ்லிம்களுக்கு 4.5% இடஒதுக்கீடு

ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் 22.12.2011 அன்று நடந்த கேபினட் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவில் 4.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத மற்றும் மொழி ரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசியஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை வரவேற்பதாக தெரிவித்தார். அதே வேளையில் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இது ஒன்று மட்டுமே தீர்வாக அமைந்து விடாது. நிலவில் உள்ள அரசாணைப்படி ஓ.பி.சி பிரிவினருக்கு அதாவது சில மாநிலங்களிலுள்ள ஒரு சில முஸ்லிம் பிரிவு உட்பட பல்வேறு ஓ.பி.சியினருக்கு 27% ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதில் சில பிரிவினருகளுக்கென்று தனி உள் ஒதுக்கீடு எதுவும் இல்லை. ஓ.பி.சி யில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இதனால் எந்தப்பயனும் இல்லை. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் வரும் பெரும்பாலான இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள உயர் வகுப்பினருக்கே போய் சென்றடைகிறது. இந்த வகையில் நிலவில் உள்ள 50% ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 13.7% ஒதுக்கீடும் அதில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் பரிந்துரை செய்தது போன்று முஸ்லிம்களுக்கு 10% ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒ.பி.சி ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். ஏனென்றால் சர்ச்சார் கமிட்டி தனது அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தற்போது இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் அனைத்து பிரிவு இந்து ஒ.பி.சி யினரைவிட மிகவும் பிற்படுத்தப்பட்டநிலையில் தான் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளதாக கூறினார். மேலும் ஜனவரி 1-2012ல் இருந்து அமலுக்கு வர இருக்கும் இந்த ஒதுக்கீட்டை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும

ஓ.பி.சி. ஒதுக்கீட்டினுள் முஸ்லிம்களுக்கு 4.5% இடஒதுக்கீடு

ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் 22.12.2011 அன்று நடந்த கேபினட் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவில் 4.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத மற்றும் மொழி ரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசியஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் தெரிவித்தார். அதே வேளையில் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இது ஒன்று மட்டுமே தீர்வாக அமைந்து விடாது. நிலவில் உள்ள அரசாணைப்படி ஓ.பி.சி பிரிவினருக்கு அதாவது சில மாநிலங்களிலுள்ள ஒரு சில முஸ்லிம் பிரிவு உட்பட பல்வேறு ஓ.பி.சியினருக்கு 27% ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதில் சில பிரிவினருகளுக்கென்று தனி உள் ஒதுக்கீடு எதுவும் இல்லை. ஓ.பி.சி யில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இதனால் எந்தப்பயனும் இல்லை. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் வரும் பெரும்பாலான இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள உயர் வகுப்பினருக்கே போய் சென்றடைகிறது. இந்த வகையில் நிலவில் உள்ள 50% ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 13.7% ஒதுக்கீடும் அதில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் பரிந்துரை செய்தது போன்று முஸ்லிம்களுக்கு 10% ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒ.பி.சி ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். ஏனென்றால் சர்ச்சார் கமிட்டி தனது அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தற்போது இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் அனைத்து பிரிவு இந்து ஒ.பி.சி யினரைவிட மிகவும் பிற்படுத்தப்பட்டநிலையில் தான் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளதாக கூறினார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில். மேலும் ஜனவரி 1-2012ல் இருந்து அமலுக்கு வர இருக்கும் இந்த ஒதுக்கீட்டை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும

உலகின் மிகமுக்கிய நவீன நகராக புனிதமக்கா நகரம் மாறிவருகின்றது.

உலகின் மிகமுக்கிய நவீன நகராக புனித மக்கா நகரம் மாறிவருகின்றது, இதன்விளைவாக புனித மக்கா நகரில் பல பாரிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக புனித மக்கா நகரின் ஆளுநர் கலாநிதி உஸமா அல்-பஆர் தெரிவித்துள்ளார்.மக்கா நகரின்புனித ஹரம் பள்ளிவாசலின் மேலதிக வேலைத்திட்டங்கள் மற்றும் அல்-ஹூஜூனிலிருந்து புனித ஹரம் பள்ளிவாசல்வரையான இரு சுரங்க நடைபாதைகள் உட்பட வேலைத்திட்டங்களின் பெரும்பகுதி நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மக்கா நகரின் ஆளுநர் தெரிவித்தார்.யாத்திரீகர்களுக்கு புனித ஹரம் ஷரீபுக்கு அருகே தங்குமிடங்களை அமைக்கும் ஜமல் உமர் வேலைத்திட்டம் சிறிது காலத்தில் முடிவடைவடையவுள்ளது.தற்போது புனித ஹரம்ஷரீபிலிருந்து தூரத்திலேயே யாத்தீரீகர்களின் தங்குமிடங்கள் காணப்படுவதுடன்,ஜமல் உமர் வேலைத்திட்டம் முடிவடைந்தால் யாத்திரீகர்களுக்கு ஹரம்ஷரீபுக்கு மிக அருகேயே தங்குமிடங்களை வழங்கமுடியுமாயிருக்கும் எனவும், மக்கா நகரினுள் புகையிர சேவையை வழங்கும் 23பில்லியன் சவூதிரியால்கள் செலவான பாரிய திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும் கலாநிதி அல்-பஆர் மேலும் தெரிவித்துள்ளார். மக்கா நகரில் இரண்டு,மூன்று மற்றும் நான்கு வட்டப்பதைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதுடன் இதற்காக 200மில்லிய சவூதிரியால்கள் செலவிடப்பட்டுள்ளன. உம் ஜூத் பகுதியில் வசிக்கும் மக்கா நகரவாசிகளுக்கு 4000வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிக்கு மொத்தமாக 800மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்பட்டுள்ளன. ஸபாவிலிருந்து மர்வாவிக்கு யாத்திரீகர்கள் வசதியாகச் செல்லும்பொருட்டு இரண்டு மாடிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்காவின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Wednesday, December 21, 2011

அயோத்தியில் 2014 இல் இராமர் கோயில் எழும்பியிருக்குமாம்

மத கலவரத்தை தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா ஹிந்துக்களுக்கு எதிரானது என சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர் அசோக்சிங்கால் கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் வி.ஹெச்.பியின் தேசிய மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வருகை தந்த அசோக்சிங்கால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, கலவர தடுப்பு மசோதாவின்படி வன்முறை சம்பவங்கள் நடந்தால் ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமே வழக்கு பதிவுச்செய்யப்படும். மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் துவக்கப்படும்.2014-ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர்கோயில் எழும்பியிருக்கும். இதற்காக பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கவேண்டிய சூழல் ஏற்படும். கோயிலின் 60 சதவீத பணிகளும் முடிவடைந்துவிட்டன. முல்லைப் பெரியாறில் புதிய அணையை கட்டவேண்டும். இப்பிரச்சனையில் பிரதமர் தலையிடவேண்டும். ஹிந்துக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை மத மாற்றமாகும். இதற்காக 42 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. நாடு சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஊழலாகும். இதற்கு எதிராக போராட எவரையும் அனுமதிப்பதில்லை. சபரிமலையை தேசிய புண்ணியஸ்தலமாக அறிவிக்கவேண்டும். இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்

ஈரானை தக்கினால் இஸ்ரேலை தகர்க்க ஹிஸ்புல்லா தயார்

“ஹிஸ்புல்லாவை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” “தென் லெபனானை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” “லெபனானை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” “சிரியாவை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” “ஈரானை தாக்கினால் ஹிஸ்புல்லா திருப்பி தாக்கும்” இது தான் இந்த அமைப்பின் படிமுறை வளற்ச்சி. ஷியாக்களின் பலம் பொருந்திய மரபு யுத்தம் செய்யக்கூடிய போராட்ட இயக்கம். பெய்ரூட்டில் சுன்னி முஸ்லிம்களுடன் போராட களமிறங்கி, தென் லெபனானின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறி, முழு லெபனானிலும்அரசியல் இராணுவ போக்கை தீர்மானிக்கும் சக்தியாக தளமமைத்து,அயல் நாடான சிரியா, பலஸ்தீன் விவகாரங்களில் ஆதரவு தளமாக செயற்பட்டு இப்போது ஈரானிற்காக களமிறங்க காத்திருக்கிறது ஹிஸ்புல்லா. ஹிஸ்புல்லாக்களின் திறமை பற்றியோ அல்லது அவர்களது தாக்குதல் திறன் பற்றியோ ஆராய்வதல்ல இங்கே நோக்கம். இந்த அமைப்பானது ஈானின் மிக முக்கியஆயுதம். மத்திய கிழக்கிற்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்டது. இதை வடிவமைத்த விஞ்ஞானிகள் யார் தெரியுமா? கும்மில் இருக்கும் ஆயத்துல்லாக்கள். மிக கவனமாகவும், நுட்பமாகவும் வடிவமைக்கப்பட்ட அரசியல் ஆயும். பல வேளைகளில் இராணுவ ஆயுதமாகவும் தொழிற்படத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டது. டுவல் பேப்பஸ் டிசைனிங். மேட் இன் இரான். இந்த இயக்கத்தை ஒரு கட்டுக்கோப்பான மரபு மற்றும் கெரில்லா சமரணியாகவே நாம் இதுவரை கேள்விப்பட்டுள்ளோம். பார்த்துள்ளளோம். ஆனால் இந்த அமைப்பு இப்போது அல்-காயிதா போன்ற சர்வதேச வலைபின்னலை தன்னகத்தே கொண்டுள்ள அணியாக பரிணாமம் பெற்றுள்ளது. இதன் அதிமுக்கிய உறுப்பினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மன், பிரான்ஸ், ஆர்ஜன்டீனா, வெனிஸ்வெலா போன்ற பல நாடுகளிலும் இருக்கிறார்கள். இயங்குகிறார்கள். தட்டையாக முடி வெட்டி, ட்ரிம் செய்த தாடியுடன், அரபு எழுத்துக்ள் கொண்ட பச்சை துண்டினை தலையில் கட்டி நிற்கும் ஹிஸ்புல்லாக்களை தான் நாம் கண்டுள்ளோம். முடி வளர்த்த, மேற்கின் நாகரீகத்தின் இன்றை மோஸ்தரில் உடையணிந்து கபசினோக்களுடன் சட்டிங் செய்து கொண்டிருக்கும் ஹிஸ்புல்லாக்கள் இன்று நியூயோர்கிலும், லண்டன் நகர வீதிகளிலும் உலாவருகிறார்கள். தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், லெபனான், பலஸ்தீன் பாஸ்போர்ட்களுடன் மேற்கில் அரசியல்தஞ்சம் கோரியவர்களாக வாழ்கிறார்கள்.எதற்காக? ஈரானை தாக்கும் போது இதற்கான விடை கிடைக்கும். Argentine-Israel Association Bulding ஆர்ஜன்டீனாவில் தரைமட்டமாக்கப்பட்டதன் பின்னணியில்ஹிஸ்புல்லாக்களே தொழிற்பட்டனர். இதில் மட்டும் 85 இற்கும் மேற்பட்ட லத்தீன் அமெரிக்க ஸியோனிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். கனடாவில் லெபனானியர் அசோசியேசன் என்ற பெயரில் பல்லாயிரம் பேர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். 1981ல் சதாம் ஹீசைன் அதிபராக இருந்த போது இஸ்ரேலிய தாக்குதல் ஜெட்கள் ஈராக்கின் அனு உலைகளை ஒஸ்ட்ரிக் எனுமிடத்தில் தாக்கியழித்தன. அதே போல கடந்த செப்படம்பரில் சிரியாவிலும் தாக்குதலை மேற்கொண்டன. ஆனால் ஈரானில் செய்ய முடியாது. செய்தால் ஒரு சிக்கலான மத்திய கிழக்கு யுத்தத்திற்கே அது வழிகோலும்.

இஹ்வான்கள் எப்போது ஆட்சிக்கு விருவார்கள் - காத்திருக்கும் சிறைக்கைதிகள

கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் அரபு வசந்தத்தின் புரட்சி பூக்கள் விரிந்த வேளையில், இவையெல்லாம் அறியாமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அல் அஃஹ்ரப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புரட்சியின் அமளி துமளியில் இந்த அப்பாவிகளை ஆட்சியாளர்கள் மறந்து விடுவார்களோ என்ற கலக்கம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அல் அஃஹ்ரப் என்றால் கருந்தேள் எனபொருள். கெய்ரோவில் பிரசித்திப்பெற்ற லிமன்துரா சிறை கட்டிடத்திற்கு உள்ளே அமைந்துள்ள இன்னொரு தனிச்சிறைதான் அல் அஃஹ்ரப்.முன்பு பரோவா மன்னர் பரம்பரையைச் சார்ந்த அரசன் தங்கக் குவியலை புதைத்து வைத்த அதே பாலைவனத்தின் மீதுதான் எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் லிமன் துரா சிறையை கட்டினார். தற்பொழுது இச்சிறையில் பயங்கர ரகசியங்கள் நிறைந்துள்ளது. லிமன் துரா சிறைக்குள்ளே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அல் அஃஹ்ராப் சிறை அமைந்துள்ளது. அமெரிக்காவின் சித்திரவதை கூடமான கியூபாவில்அமைந்துள்ள குவாண்டனாமோ சிறை மாதிரியில் அல் அஃஹ்ராப் கட்டப்பட்டுள்ளது. ஹுஸ்னி முபாரக்கின் மகன்கள் லிமன் துரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் ராணுவத்தின் கருணையினால் ஓரளவு வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன. முபாரக் அரசை எதிர்ப்பவர்களுக்கு பரிசுதான் அல் அஃஹ்ராப் சிறை. அங்கே விசாரணை கைதிகளே உள்ளனர். ஆனால் விசாரணை நடைபெறாது. ஏழு மீட்டர் உயரம் கொண்ட சுவரும், இரும்பாலான கேட்டும் அமைந்துள்ள இச்சிறையின் உள்ளே நுழைய பார்வையாளர்களுக்கு சிரமமான காரியமாகும். அமெரிக்காவின் எஃப்.பி.ஐயின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள்தாம் அல்அஃஹ்ராப் சிறையைஉருவாக்கியதாக முஸ்லிம் சகோதரத்துவஇயக்கத்தின் தலைமை கூறுகிறது. 1993-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இச்சிறையில் ஒரு பொத்தானை அழுத்தினாலே போதும் சிறை வார்டன்களுக்கு எந்த அறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கும், மின்சாரத்தையும், தண்ணீரையும் தடைச்செய்யலாம். அல் அஃஹ்ராப் சிறையின் அமைப்புதான் குவாண்டானாமோவிலும் காணப்படுகிறது என முஅஸ்ஸம் பேக் கூறுகிறார். இவர் குவாண்டாமோவில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டனை சார்ந்தவர் ஆவார். விசாரணையோ,குற்றப்பத்திரிகையோ இன்றி ஒருகாலத்தில் 20 ஆயிரம் சிறைக்கைதிகள் லிமன் துராவில் அடைக்கப்பட்டிருந்தனர். அல் அஃஹ்ராபிலோ பெரும்பாலான சிறைவாசிகள் இஸ்லாமியாவதிகள் ஆவர். தலாஉல் ஃபதஹ், ஜிஹாத், ஜமாஅ வல் இஸ்லாமியா ஆகிய இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்கள்தாம் அவர்களில் பெரும்பாலோர். அவர்களில் பலரும் சித்திரவதையை தாங்க முடியாமல் செய்யாத தவறுகளை ஒப்புக்கொண்டு, ஆயுத போராட்டத்தை கண்டிக்கவும் செய்தனர். ஆனாலும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.அல் அஃஹ்ராபில் அடைக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேராவது சித்திரவதையால் கொல்லப்பட்டுள்ளார்கள் என கருதப்படுகிறது. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைமையிலான அரசு எகிப்தில் ஆட்சியில் அமரும் வேளையில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்புகிறார்கள் அல் அஃஹ்ரப்(கருந்தேள்)சிறைவாசிகள்.

பலஸ்தீன் கைதிகள் 550 பேரை விடுவித்தது இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் எஞ்சிய 550 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுவித்தது. இதனையொட்டி பலஸ்தீனின் மேற்குக்கரைபகுதியில் பிரமாண்ட வரவேற்பு வைபவம் இடம்பெற்றது. இதன்போது இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கு, பலஸ்தீனர்களுக்கும் இடையில் சிறு மோதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் செய்துகொள்ளப்பட்டது. இதன் 5 ஆண்டுகள் ஹமாஸ் சிறையில் இருந்த கிலாட் விடுவிக்கப்பட்டதோடு அதற்குபகரமாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 1027 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசுவிடுவிக்க ஒப்புக்கொண்டது. இதன் முதல் கட்டமாக 477 பலஸ்தீனி யர்கள் கடந்த ஒப்டோபர் மாதம் விடுவிக் கப் பட்டனர். இந்நிலையில் எஞ்சிய 550 பலஸ்தீனர் களும் நேற்றுமுன்தினம் விடுக்கப் பட்டனர். எனினும் விடுவிக் கப்பட்ட கைதிகளில் ஒருவர்கூட ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் இல்லை. யாரையெல்லாம் விடுவிப்பது என்பதை இஸ்ரேல் அரசுதான் தீர்மானித்தது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன்படி இஸ்ரேல் சிறைச்சாலையில் மேலும் 250 பலஸ்தீனகைதிகள் எஞ்சியுள்ளனர் என இஸ்ரேல் சிறைச்சேவை தெரிவித்துள்ளது

Tuesday, December 20, 2011

2011 ஆண்டின் அமெரிக்காவின் 12 பெரிய பொய்கள்.

2011ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் வெளியுலகுக்கு கூறிய பெரும் பொய்களை அமெரிக்காவின் பிரபல செய்திச்சஞ்சிகையான Foreign Policy வெளியிட்...

கிரேக்க சைப்ரஸ் பகுதியில் உள்ள வரலாற்றுப்புகழ்மிக்...

கிரேக்க சைப்ரஸ் பகுதியில் உள்ள வரலாற்றுப்புகழ்மிக்...: கிரேக்க சைப்ரஸின் லர்னகா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப்புகழ்மிக்க ஹலா ஸூல்தான் டெக்கே பள்ளிவாசலை முழுநேரத்தொழுகைகளுக்காகத் திறந்துவி...

முஸ்லிம் உலகம்: கிரேக்க சைப்ரஸ் பகுதியில் உள்ள வரலாற்றுப்புகழ்மிக்...

கிரேக்க சைப்ரஸ் பகுதியில் உள்ள வரலாற்றுப்புகழ்மிக்...: கிரேக்க சைப்ரஸின் லர்னகா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப்புகழ்மிக்க ஹலா ஸூல்தான் டெக்கே பள்ளிவாசலை முழுநேரத்தொழுகைகளுக்காகத் திறந்துவி...

ன்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்;

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்; புதிய நீதிபதிகள்: விமலா, தேவதாஸ், கருப்பையா, ரவிச்சந்திரபாபு; 4 புதிய நீதிபதிகளும் நாளை பதவியேற்கின்றனர் இடுக்கி மாவட்ட தமிழ் மக்களுக்கு முழு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது; தமிழ் மக்கள் வாழும் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து; தமிழ் மக்கள் எந்தவிதத்திலும் அச்சப்படவேண்டாம்; வன்முறைச் செயல்கள் தொடர்பாக 46 வழக்குகள் பதிவு; 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு: ஜார்ஜ் வர்கீஸ் இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 5 பேருக்கு காவல் நீட்டிப்பு; முன்னதாக மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்; மீனவர்களைவிசாரித்த நீதிபதி, ஜனவரி 2ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு; மீனவர்களின் உறவினர்களும், மீனவ அமைப்புகளும் போராட்டம் நடத்த முடிவு வி.கே.சசிகலா, எம்.நடராஜன் உள்ளிட்ட 14 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்; 14 பேரும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் நீக்கப்பட்டவர்கள்: வி.கே.சசிகலா, எம்.நடராஜன், திவாகரன், ராவணன் டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், எம்.ராமச்சந்திரன் வெங்கடேஷ், மோகன் (அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன் டி.வி.மகாதேவன், தங்கமணி அரசு விவகாரங்களில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு இருந்தது காவல்துறையில் ரூ.4 கோடி வரை நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக வழக்கு: பதிலளிக்கும் படி டிஜிபி, திருச்சி டிஐஜி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: 2008ம் ஆண்டு முதல் சிறப்பு ரகசிய தகவல் தொகையில் முறைகேடு நடந்ததாக புகார்: விழுப்புரம் உதவி ஆய்வாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தட்கல் முறை டிக்கெட் மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு: 3 வாரத்திற்குள் பதிலளிக்கும் படிரயில்வே வாரியத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்: தட்கல் டிக்கெட் மாற்றத்தால் பொதுமக்கள் அவதி என மனுத்தாரர் புகார் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை: 20 மற்றும் 21ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு அரசு மற்றும்தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இந்தோனேஷியாவில் சுலாவசி தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது: ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக பதிவு: அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

Monday, December 19, 2011

இலக்கை அடைவதற்கான வழிமுறைகள்... 1- ஆசை , ஆர்வம் 2- தன்னம்பிக்கை 3- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட இலட்சியங்களை அறிந்து அதனை எழுதிக்கொள்ளல். 4- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட பிரயோசனங் களையும் எழுதிக்கொள் ளல். 5- அந்த இலக்கு உனக்குப் பெற்றுத்தரப்போகும் தரத்தை அறிந்திருத்தல். (சுவனமா , நரகமா ?) 6- இலட்சியங்கள் நிறைவேறப்போகும் காலத்தை நிர்ணயம் செய்தல். 7- அதன் (ஈருலக) அங்கீகாரத்தைக் கருத்திற் கொள்ளல். 8- இலக்கை அடைவதைத் தடுக்கும் நெருக்கடிகளை அறிந்து கொள்ளல். 9- அந்த இலக்கு வேண்டிநிற்பவை பற்றிகரிசனை கொள்ளல். 10- திட்டமிடலுக்கேற்ப வேலை செய்தல். 11- இலக்கை (அடிக்கடி) யதார்த்தபூர்வமாகக் கற்பனை செய்துகொள்ளல். 12- இலக்கின் மூலம் உள்ளத்தை உற்சாகமூட்டல்.
அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல் ... அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல் இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ளஅன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று.முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள்,சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்... என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார். சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின் மனைவி... போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில்மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால்நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள். நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். (நூல்: தப்ரானீ) நிச்சயமாக இது கையின் விபச்சாரம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: இருகண்களும் விபச்சாரம் செய்கின்றன. இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன.இரு கால்களும் விபச்சாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபச்சாரம் செய்கிறது. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்) நபி(ஸல்)அவர்களை விட தூய உள்ளமுடையவர் இவ்வுலகில் யாரிருக்கமுடியும்? இவ்வாறிருக்க நபி(ஸல்)அவர்களே கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய -கைகுலுக்க- மாட்டேன். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகைகா(ரலி) நூல்: இப்னுமாஜா) நிச்சயமாக நான் பெண்களின் கைகளை தொடமாட்டேன். (நூல்: தப்ரானீ) ஆயிஷா(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி(ஸல்)அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்) நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிவேன்! என மிரட்டும் கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாஃபஹா செய்தாலும் சரியே...
இன்றே உழைப்போம் வாருங்கள்..... கிலாபத் ’ வீழ்த்தப்பட்டது , தாங்க முடியாத சோகத்தால் இதயம் நிறைந்தது . ‘ பலஸ்தீன் ’ ஆக்கிரமிக்கப்பட்டது , அங்கத்தைதுண்டாக்கியவேதனை உடலெங்கும் பரவியது ‘ ஆப்கான் ’ அழிக்கப்பட்டது , வார்த்தைக்குள் வராத துயரம் கண்களை ஆறாக்கியது . ‘ ஈராக் ’ இடிக்கப்பட்டது , கனவிலும் காணாத கவலை தூக்கத்தை அபகரித்தது . ‘ ஷரி அத் ’ தை சாடினார்கள் , முழு ‘ ஷரிஅத்தை ’ யும் அமுலாக்கும் ‘ கிலாபத்தே ’ இலக்கென்றோம் .. குர்ஆனை மிதித்தார்கள் , ஒருவருக்கும் தயங்காமல் குரல் கொடுத்தோம் . ஓதி செயற்பட்டோம் . தூதரை அவமதித்தார்கள் , ஒரு கணமும் ஓயாமல் பதில் கொடுத்தோம் . நபி வழியில் நாம் நடந்தோம் . ஈமானை மறுக்கலாம் , இஸ்லாத்தை மறைக்கலாம் , முஸ்லிமை வெறுக்கலாம் , பல போர்கள் தொடுக்கலாம் , எமது இறுதி மூச்சும் இஸ்லாத்துக் கென்றோம் நாம் . புனித பூமியை மீட்கவும் .. ஆக்கிரமிப்பை அகற்றவும் .. ஓன்று பட்டோம் நாம் . குர்ஆனாய் நடமாடி .. நபிவழியில் நாம் ஆள .. இன்றே உழைப்போம் வாருங்கள் .
பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி... "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி" என்று அன்று பாடிவைத்தான், பாரதி. நவீன உலகில் எத்தனையோ பெண்கள் பாரதிகண்ட புதுமைப் பெண்களாய், பல்துறை நிபுணிகளாய், சாதனையாளர்களாய்த் திகழ்ந்து வருகின்றனர். "இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கிஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்கம்என்ற பெயரால் பெண்களுக்கு இறைவன் கொடையாக அளித்துள்ள திறமைகளை வெளிப்படுத்த விடாமல் மூலையில் முடக்கிப் போடும் சுயநலவாதிகளான ஒருசில ஆண்களால் இந்தக் கோஷம் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதையும் நாம் மறுப்பதற்கில்லை. எனினும், இத்தகைய கோஷங்களைப் பொய்ப்பித்து, தாம் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையெல்லாம் வெற்றிகொண்டு சாதனைகளை நிலைநாட்டிவரும் முஸ்லிம் பெண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் என்ற வகையில், உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவியின் மகள் இல்ஹாம் அல் கர்ளாவியின் சாதனைகளைச் சுருக்கமாக நோக்குவோம். பொதுவாக இயற்பியல், அணுசக்தி, வானியல் முதலான துறைகள் பெண்களுக்குப் பொருத்தமானவை அல்ல; அத்துறைகளில் பெண்கள் நின்றுபிடிப்பதோ சாதனை படைப்பதோ சாத்தியம் இல்லை எனும் கருத்தியல்கள் நம் சமூகத்தில் காலங்காலமாய் நிலவி வருவதை நாமறிவோம். அத்தகைய கருத்தியல்களையெல்லாம் கட்டுடைப்புச் செய்தவர் என்ற பெருமையை அரபு முஸ்லிம் பெண்மணியான இல்ஹாம் அல் கர்ளாவி பெற்றுக் கொள்கின்றார். 1981 ஆம் ஆண்டு கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்ஸி பட்டம் பெற்ற இல்ஹாம், 1984 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலே பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறையில் எம்.எஸ்ஸி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு மின்னியல் துறையில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 1981 முதல் 1984 வரை கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய கல்விப் பணியைத் தொடங்கிய இவர், 1984-1991 காலப் பகுதியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1991 முதல் இன்று வரை கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இணைப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகின்றார். அதுமட்டுமன்றி, 1998-1999 ஆம் ஆண்டுகளில் லண்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறைகளில் இணை ஆய்வாளராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கல்வியியல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாகப் பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகம், திட்டமிடல் முதலானவற்றுக்குப் பங்களிப்புச் செய்யுமுகமாகப் பல்வேறு செயற்குழுக்கள், அமைப்புக்கள் என்பவற்றிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளார். சிலவற்றில் செயற்குழுத் தலைவியாகவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில், 2007 முதல் கட்டார் பல்கலைக்கழக ஆய்வுக் கொள்கைகள் தொடர்பான செயற்குழு உறுப்பினராகவும், 2005 முதல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினராகவும், 2004 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆய்வுக் குழுத் தலைவியாகவும் இவர் சேவையாற்றியுள்ளார். மேலும், 2006-2007 ஆம் ஆண்டுகளில்கணித மற்றும் இயற்பியல் துறை வரவுசெலவுத் திட்டக்குழுத் தலைவியாகவும், 2005-2006 ஆம் ஆண்டுகளில் அதே துறையின் வெளியுறவுக் குழுத் தலைவியாகவும் இருந்து இவர் தன்னுடைய பொறுப்புக்களை மிகத் திறம்பட நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புக்களில்செயற்குழு உறுப்பினராகவும் செயற்திட்ட ஆலோசகராகவும் இவர் பங்களிப்பு வழங்கி வருகின்றார். பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி துடிப்பும் செயற் திறனும் கொண்ட கல்வியியலாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தமைக்கு இவர் பெற்றுக் கொண்டுள்ள ஏராளமான பரிசுகளும் விருதுகளும் சான்றாக அமையும். அந்த வகையில், இவர் 2007 ஆம் ஆண்டு உலக அணுசக்திப் பல்கலைக்கழகம், பரிஸில் உள்ள அரபுலக நிறுவனம், கட்டார் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சரவதேச அமைப்புக்கள் முதலானவற்றினால் பரிசுகளும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய துறை சார்ந்து ஏராளமான ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர்,அரபு முஸ்லிம் பெண் சாதனையாளர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்பட்டு வருகின்றார். அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி, சுனாமி மற்றும் அணு ஆலைகள் வெடிப்பு என்பன தொடர்பில் அல் ஜெஸீரா ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு இவர் அளித்துள்ள பேட்டி இத்துறையில் அவருக்கிருக்கும் புலமையை உணர்த்தும். இவருடைய இணையதளம்: http://www.ilhamalqaradawi.com

Sunday, December 18, 2011

்: புனித அல்-அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க முன்வருமாறு உ...

புனித அல்-அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க முன்வருமாறு உ...: பலஸ்தீனின் புனித அல்-அக்ஸா பள்ளிவாசலில் தமது மேலாதிக்கத்தை விரிவுபடுத்த ஸியோனிச அரச அதிகாரிகள் முயற்சி செய்துவருவதால் அல்-அக்ஸா பள்ளிவ...

வீரன் மருத நாயகம்....

மாவீரன் மருத நாயகம்....: வ ரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்...

Saturday, December 17, 2011

manjakkollaireview.blogspot.com புனித அல்-அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க முன்வருமாறு உ...

புனித அல்-அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க முன்வருமாறு உ...: பலஸ்தீனின் புனித அல்-அக்ஸா பள்ளிவாசலில் தமது மேலாதிக்கத்தை விரிவுபடுத்த ஸியோனிச அரச அதிகாரிகள் முயற்சி செய்துவருவதால் அல்-அக்ஸா பள்ளிவ...

Thursday, December 15, 2011

: சீனாவின் 400க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் வாசிகசால...

சீனாவின் 400க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் வாசிகசால...: சீனாவின் வடமேற்குப்பகுதியின் 'இங்குசேடியா' பிரதேசத்தில் 400க்கும் அதிகமானபள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக சீனாவின் செ...

்: யுனெஸ்கோ அமைப்பில் பலஸ்தீனுக்கு உறுப்புரிமை.

முஸ்லிம் உலகம்: யுனெஸ்கோ அமைப்பில் பலஸ்தீனுக்கு உறுப்புரிமை.: பலஸ்தீனுக்கு ஐக்கியநாடுகள் சபையின் விஞ்ஞான கல்வி கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) முழுமையான அங்கத்துவம் கிடைக்கப் பெற்றுள்ளது. திங்கட்கிழம...

Wednesday, December 14, 2011

முஸ்லிம் உலகம்: அறிவியல்

முஸ்லிம் உலகம்: நபி(ஸல்) அவர்களை களங்கப்படுத்தும் முயற்சி- கேலிச்ச...

முஸ்லிம் உலகம்: நபி(ஸல்) அவர்களை களங்கப்படுத்தும் முயற்சி- கேலிச்ச...: நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாக வரைந்து அடுத்தபதிப்பில் வெளியிட திட்டமிட்டிருந்த சார்லிஹப்டோ எனும் சஞ்சிகையின் தலமையகம் மீது தாக்குதல...

முஸ்லிம் உலகம்: அமெரிக்காவின் உளவுவிமானம் ஈரான் இராணுவத்தால் தரையி...

முஸ்லிம் உலகம்: அமெரிக்காவின் உளவுவிமானம் ஈரான் இராணுவத்தால் தரையி...: அமெரிக்காவின் உயர்ரக உளவுவிமானமொன்று ஈரானின் கிழக்குப் பகுதியில் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈரானிய இராணுவத்தால் தரையிற...

முஸ்லிம் உலகம்: புதிய அரசாங்கத்துக்கு சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு ஆ...

முஸ்லிம் உலகம்: புதிய அரசாங்கத்துக்கு சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு ஆ...: எகிப்தின் முன்னால் பிரதமர் கமால் எல் கன்ஸூரி தலைமையிலான அரசாங்கத்துக்கு,பொருளாதாரத்தேவைகளைக் கருத்திற்கொண்டு ஆட்சியமைக்கசந்தர்ப்பம் வழ...

Sunday, December 11, 2011

manjakollai review

லிபியா மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் வெற்றி பெறுமா?
காலணித்துவ நாடாக மாற்றியமைக்கும் முயற்சியில் நேட்டோ நாடுகள் தமது தாக்குதல்களை முன்னெடுப்பதாக லிபியத் தலைவர் முஅம்மர் கத்தாபி தெரிவித்துள்ளார்.
இவரின் இந்தக் கூற்றில் உள்ள நியாயங்களை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாநாயக அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு அப்பால் செயற்படும் எந்த சக்தியினதும் நடவடிக்கைகள் ; அந்த நாட்டினாலேயே கையாளப்பட வேண்டும். இதுதான் அந்த நாட்டின் இறைமைக்கு சர்வதேச நாடுகள் வழங்கும் சுதந்திரம். மற்றுமொரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தில் தலையிடுவதை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(4) உறுப்புரை கூட அனுமதிப்பதில்லை.
இவ்வாறிருக்க இறைமையுள்ள அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் கிளர்ச்சியாளர்கள் தரப்பிற்கு சர்வதேச நாடுகள் பல்வேறு வகையிலும் உதவி செய்து வருகின்றன.
பிரான்ஸ் அரசாங்கம் இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு அணுவாயுதங்கள் , ரொக்கட் ஏவு தளங்கள் , துப்பாக்கிககள் , தாங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் உட்பட பல்வேறுபட்ட ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் த நியு யோர்க் டைம்ஸ்பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படி , பெங்காசியை தளமாகக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை பெற்றிருப்பதாக தெரிவித்தது. ஆனால் , அந்த நாடுகளின் பெயர் விபரங்களை அந்த செய்திப் பத்திரிகை வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விசேட படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சியளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே , லிபியா மீதான குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியளிக்கும் நடவடிக்கை ஆரம்பித்து விட்டது. லிபியாவுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்வதென பல மாதங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூட ஒரு ஏகாதிபத்தியவாதிகளின் சாதமாகத்தான் இயங்குகின்றது. அது சட்டரீதியான நீதிமன்றமாக இயங்கவில்லை என்பதை லிபியா மீதான முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நீதிமன்றத்தின் தலைவர் ஜோஸ் லூயிஸ் மொரன் ஒகம்போ உண்மையில் பாதிக்கப்பட்ட லிபியாவுக்காக குரல் கொடுக்கவில்லை. அடுக்கடுக்காக குற்றமிழைத்து வரும் அமெரிக்கா , பிரித்தானியா , பிரான்ஸ் ஆகிய சதிகார நாடுகளுக்கு சார்பாகவே தனது தீர்ப்பை வழங்குகின்றார்.
கடந்த மே மாதம் திரு. ஒகம்போ கத்தாபி மீதும் , அவரது மகன் ஷைப் அல் இஸ்லாம் மீதும் , மற்றுமொறு மைத்துனரான உளவுப்பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் சனூசிமீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இவர்கள்மூவரும் மனிதநேயத்துக்கு எதிராக பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதே அவரின் குற்றச்சாட்டு. எனினும் , இதற்கான எந்த சான்றுகளும் நிறூபிக்கப்படவில்லை.
அதன் பின்னர் , கடந்த 27 ( ஜூன்) ஆம் திகதி இவர்கள் மூவரையும் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைவர் திரு. ஒகம்பே உத்தரவிட்டார். மனிதநேயத்திற்கு எதிராக இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களுடன் இவர்களுக்கு மறைமுகத்தொடர்பு உள்ளதற்கான நியாயமான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும். எதுவிதஉறுதியான ஆதாரங்களையோ , அதிகாரங்களையோ அவர் சுட்டிக்காட்டவில்லை. உண்மையில் லிபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உறுப்பினர் அல்ல. அதேபோல் , அமெரிக்கா , சீனா , ரஷ்யா , இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதன் உறுப்புரிமையை பெறவில்லை.
அதேநேரம் , சர்வதேச சட்டம் என்பது சிவில் சட்டத்தைப் போன்று விரும்பியோ விரும்பாமலோ கடைபிடிக்க வேண்டியதொன்றல்ல. அது இணக்கத்தின் அடிப்படையில் அடிபணிவதாகும். இவ்வாறிருக்க , லிபியத் தலைவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல

முஸ்லிம் உலகம்: ஜெர்மனியபாடசாலைகளில் தொழுவதற்கு அந்நாட்டு நீதிமன்ற...

முஸ்லிம் உலகம்: ஜெர்மனியபாடசாலைகளில் தொழுவதற்கு அந்நாட்டு நீதிமன்ற...: ஜெர்மனியப் பாடசாலைகளில் இஸ்லாமியமுறைப்படி மாணவர்களுக்கு தொழுவதற்கான உரிமையை அந்நாட்டின் சமஷ்டிநீதிமன்றமொன்று வழங்கியுள்ளது.இரண்டுவருடங்...

முஸ்லிம் உலகம்: டியூனிசியா தேர்தல் முடிவுகளின்படி அந்நஹ்ழா இஸ்லாமி...

முஸ்லிம் உலகம்: டியூனிசியா தேர்தல் முடிவுகளின்படி அந்நஹ்ழா இஸ்லாமி...: டியூனிசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் தற்போதைய நிலவரங்களின்படி அந்நஹ்ழா இஸ்லாமியக் கட்சியானது முன்னனியில் உள்ளதாக செ...

முஸ்லிம் உலகம்: ரமழான்காலங்களில் குவைட்டில் ஆயிரத்திக்கும்அதிகமானவ...

முஸ்லிம் உலகம்: ரமழான்காலங்களில் குவைட்டில் ஆயிரத்திக்கும்அதிகமானவ...: புனிதரமழான் மாதத்தின் ஆரம்பம்முதல் தற்போதுவரை குவைட்டில் ஆண்,பெண்கள் அடங்களாக ஆயிரத்திக்கும் அதிகமானவர்கள் புனிததாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட...

முஸ்லிம் உலகம்: பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாட...

முஸ்லிம் உலகம்: பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாட...: பலஸ்தீனை சுதந்திரநாடாகப் பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பலஸ்தீனின் ராஜதந்திரியொருவர் ஐக்கியநாடுகள் சபையின் கூட...

germany universityl toluvaderku annatu suppremecourt anumadethadu

ஜெர்மனியப் பாடசாலைகளில் இஸ்லாமியமுறைப்படி மாணவர்களுக்கு தொழுவதற்கான உரிமையை அந்நாட்டின் சமஷ்டிநீதிமன்றமொன்று வழங்கியுள்ளது.இரண்டுவருடங்களக்கு மேலாக நீடித்திருந்த சட்டரீதியான பிரச்சினைகளுக்குப் பின்னரே இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.ஜெர்மனியில் 4மில்லியனுக்கும் அதிகமானமுஸ்லிம்கள் வாழ்கின்றனர். இஸ்லாத்தைத் தழுவிய பெற்றோர்களின் 16வயதுக்குமேற்பட்ட பிள்ளைகள் தமது இடைவே ளை நேரத்தில் அவர்களின் மேலங்கியைக் கழற்றி அவற்றின் மீது அவற்றின் மீது பாடசாலை மண்டபத்தில் தொழுதுள்ளனர்.இதன் போது பாடசாலை அதிபர் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும்
பெர்லின் உயர்பாடசாலைகளின் மைதானங்களில் தொழுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்து தொழுவதற்கான அனுமதியை மறுத்தார்.இதன்பின்னரேபிரச்சினை ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஜெர்மனியின் சமஷ்டிநீதிமன்றமொன்று பாடசாலைகளில் முஸ்லிம்மாணவர்களுக்கு
தொழுவதற்கான அனுமதியை வழங்கியது.

al-zaytuna mosque in africa

அல் ஸைதூனா பள்ளிவாசல்
Al-Zaytuna Mosque
பிராந்தியம் வட ஆபிரிக்கா
நாடு தூனிஸியா
அமைவிடம் தூனிஸ்
நிர்மாணம் ஹஜ்ரி 731
ஆட்சியாளர் ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்
பரப்பளவு ஐயாயிரம் சதுர மீட்டர்
இணை பல்கலைக்கழகம் ஸைதூனா பல்கலைக்கழகம்
சிறப்பம்சம் மினாரா 43 மீட்டர்
அல் ஸைதூனா தூனிசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலாகும் . ஸைதூன் ( ஒலிவ் ) பள்ளிவாசல் என்று பொருள்படுகிறது . தூனிஸ் நகரில் அமைந்துள் ஸைதூனா பள்ளிவாசல் வட ஆபிரிக்காவில் உள்ள பழைமை வாய்ந்த பள்ளிவாசல்களின் பட்டியிலில் ஸைதூனாவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும் . இஸ்லாமிய ஆட்சியின் தரிதமான வளர்ச்சி ஸைதூனா போன்ற உலகப் புகழ்பெற்ற பள்ளிவாசல்களை அமைக்க வழியமைத்தது . வடஆபிரிக்காவில் இரண்டாவது அமைக்கப்பட்ட பள்ளிவாவல் என்ற பெருமையும் ஸைதூனாவைச் சாரும் . இப்பள்ளிவாசல் , அமைக்கப்பட்ட காலப்பகுதி , இதனை நிர்மாணித்தவர் என்பன தொடர்பில் வரலாற்றாசிரியர்களுக்கு மத்தியில் மாறுபட்ட கருத்துக்களே நிலவுகின்றன . இப்னு கல்தூன் , அல்பக்ரி போன்ற வரலாற்றாசிரியர்கள் ஸைதூனா ஹிஜ்ரி 116( கி . பி 731) ல் அமைக்கப்பட்டது என்று கூறுகின்றனர் .
அமைப்பு
ஐயாயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட பள்ளிவாசல் ஒன்பது நுழைவாயில்களைக் கொண்டதாகும் . சிறந்த கட்டடக்கலை அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் பள்ளிவாசல் உக்பா , குர்தூபா மஸ்ஜித்களின் சாயலைக்கொண்டதாகும் . ஸைதூனா பள்ளிவாசலன் மினாரா 43 மீட்டர் அல்லது 141 அடி உயரமுடையதாகும் .
ஸைதூனா பல்கலைக்கழகம்
University Of Al-Zaytuna
இஸ்லாத்திற்கும் கல்விக்கும் இடையிலான தொடர்பு மிக நெருங்கியதாகும் . ஆத்மீ P கத்தை அடிப்படையாக வைத்த கல்வியே மத்திய காலத்தில் முஸ்லிங்கள் அறிவியலில் உச்சத்தை தொடுவதற்கு வழிவகுத்தது . பள்ளிவாசல்களைத் தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்விக்கூடங்கள் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களாக மாற்றம் கண்டன . ஸைதூனா பள்ளிவாசலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிலையம் இன்று ஸைதூனா பல்கலைக்கழகமாக விளங்குகிறது . முஸ்லிம் உலகில் ஆரம்பிக்கப்பட்ட முதலில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் ஸைதூனாவும் இடம்பிடித்துள்ளது . 12 நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றங்கள் ஸைதூனாவை மேலும் பிரபல்யமடையச் செய்ததுடன் இஸ்லாமிய அறிவின் கேந்திர நிலையமாகவும் அது மாற்றமடைந்தது .
அல்குர்ஆன் , சட்டம் , இறையியல் , இலக்கணம் , மருத்துவம் , விஞ்ஞானம் போன்ற துறைகள் இங்கு கற்பிக்கப்பட்டன . ஸைதூனா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியமாகும் . ஸைதூனா நூலகம் அக்காலத்தில் வடஆபிரிக்காவில் அமைக்கப்பட்டிருந்த ஏனைய நூலகங்களை விட பெரியதாக காணப்பட்டது . ஸைதூனாவின் இணைநுலகமாக விளங்கிய அல் - அப்தலிய்யாவில் ஒப்பற்ற , அரிய நூல்களும் , கையெழுத்துப்பிரதிகளும் காணப்படதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர் .
இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பெற்ற அறிஞர்களை உருவாக்கித்தந்த பெருமையும் ஸைதூனா பல்கலைக்கழகத்தைச்சாரும் . வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன் அவர்களும் ஸைதூனவின் பட்டதாரியாவார் . இப்னு அரபா , இமாம் மஸ்ரி போன்றவர்களும் ஸைதூனாவின் பாசறையில் வளர்ந்தவர்களாவர் இதேவேளை அமெரிக்காவில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனத்திற்கும் “ ஸைதூனா ” என்றே பெயரிடப்பட்டுள்ளது .

Monday, December 05, 2011

islatirku adraga munadukapadum pracharangaluku turkey president adirpu

இஸ்லாத்திக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு துருக்கிபிரதமர் கண்டனம் தெரிவிப்பு... இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் துருக்கி எதிர்ப்புத்தெரிவித்துள்ளதுடன், மேற்குநாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தின் மீதான அச்சத்தை இல்லாதொழிப்பதற்காக முஸ்லிம்கள் ஒன்றுபடுமாறும் அந்நாட்டுப் பிரதமர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.சில மேற்கத்தைய சக்திகளினால் இஸ்லாத்திக்கு எதரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் முஸ்லிம்களை பயங்கரவாதம்,மற்றும் மோதல்கள் போன்றவைகளுடன் அவைகள் தொடர்புபடுத்தி வருதாகவும் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஆபிரிக்க நாடுமற்றும் முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய தலைவர்களின் மகாநாட்டில் இரண்டாவது நாளன்று உரைநிகழ்த்தும்போது அவர் தெரிவித்தார்.

Sunday, December 04, 2011

tamil buhari

·                     ஈமான் எனும் இறைநம்பிக்கை
·                     8. 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     9. 'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     10. 'பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     11. 'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
Volume :1 Book :2
·                     12. 'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     13. 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
Volume :1 Book :2
·                     14. 'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     15. 'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     16. 'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     17. 'ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     18. 'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம் விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.
Volume :1 Book :2
·                     19. 'ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     20. 'நல்லவற்றை(ச் செய்யுமாறு) நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அத்தோழர்களால் இயன்ற செயல்களையே ஏவுவார்கள். இதனை அறிந்த நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். ஆனால், எங்கள் நிலையோ தங்களின் நிலையைப் போன்றதன்று' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரியும் அளவு கோபப்பட்டார்கள். பின்னா, 'நிச்சயமாக உங்கள் அனைவரையும் விட நான் அல்லாஹ்வை நன்கு அறிந்தவனும் அவனை அதிகம் அஞ்சுபவனுமாவேன்" என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     21. 'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியராவது; ஒருவர் மற்றொரு வரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது; குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுத்த பின், நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     22. (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
(
குறிப்பு:) இதே ஹதீஸை உஹைப் அறிவிக்கும்போது (ஹயா அல்லது ஹயாத் என்று) சந்தேகத்தோடு அறிவிக்காமல் 'ஹயாத்' என்னும் ஆறு என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை என்பதற்குப் பதிலாகக் கடுகளவேனும் நன்மை என்ற வார்த்தையையும் குறிப்பிடுகிறார்.
Volume :1 Book :2
·                     23. 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டாப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன் இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு 'மார்க்கம்' ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     24. 'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     25. 'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     26. 'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                     27. 'நபி(ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி(ஸல்) ஒரு குழுவினருக்குக் கொடுத்தார்கள். ஒருவரைவிட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் இறைநம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்' என கேட்டதற்கு, 'அவரை முஸ்லிம் என்றும் சொல்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்." சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, 'ஸஅதே! நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம், ஏதும் கொடுக்காதிருந்தால் (குற்றம் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ என்ற அச்சம் தான்' என்றார்கள்" என ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
·                      
Blogger Wordpress Gadgets