அகமதாபாத்/புதுடெல்லி:
2002 குஜராத் கலவரத்திற்காக முதலமைச்சர் நரேந்திர மோடி மீது வழக்கு தொடர
முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
2002 ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர்
நிகழ்ந்த குஜராத் கலவரத்தில்,நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதா என்பது
குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி ராஜு ராமச்சந்திரன் என்பவரை
உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது.
இந்நிலையில் அவர் இன்று இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ள அறிக்கையில்,குஜராத் கலவரம் தொடர்பாக மோடி விசாரிக்கப்பட
வேண்டும் என்றும்,அவருக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு
பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment