Facebook Twitter RSS

Saturday, May 05, 2012

Widgets

ஆயுதங்களை வாங்கி குவித்த ஈரான்






பல்வேறு தடைகளையும் மீறி 550 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை ஈரான் வாங்கி குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை ஈரான் கடந்த 3 ஆண்டு காலப்பகுதியில் இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஆயுத சப்ளை குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐ.நா தனது உறுப்பு நாடுகளை எச்சரித்திருந்தது.
எனினும் 2007 முதல் 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தடைகளை மீறி ஈரான் சுமார் 560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை வாங்க முடிந்துள்ளதாக ஒக்ஸ்பம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யா மற்றும் சீனா கொடுத்த அழுத்தத்தினாலேயே ஐ.நா.வினால் முழுமையான தடையை விதிக்க முடியாமல் போனதாகவும், அவ்விரு நாடுகளுமே ஈரானுக்கான பிரதான ஆயுத விநியோகஸ்தர்களாக இருப்பதாகவும் குற்றச்சாற்று எழுந்துள்ளது.
இதேவேளையில் அசர்பைஜான் குடியரசானது 2000 - 2010 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் சுமார் 450 மில்லியன் பவுண்டுகள் பெறுமான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets