ஜேர்மனியில் தீவிர வலது சாரி சிந்தனையுடன் கூடிய Pro NRW என்ற கட்சி உதயமானது, இக்கட்சியின் முக்கிய நோக்கம் புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களை எதிர்ப்பது தான்.
கட்சி தொடங்கிய உடனேயே முஸ்லிம்கள் மீது அச்சமும், வெறுப்பும் தோன்றும் வகையில், தன் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
மேலும் மசூதிகளின் வாசலில் முகம்மது நபி பற்றிய கேலிச்சித்திரங்களை வரையுமாறு ஊர்தோறும் பிரச்சாரம் செய்கின்றது.
ஏற்கெனவே எஸ்ஸென் மற்றும் கெல்சென்கிர்ச்சென் பகுதிகளில் இஸ்லாம் பற்றிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டுப் போராட்டம் நடத்த இக்கட்சி முயன்றது. அப்போது காவல்துறையினர் தலையிட்டு போராட்டம் எதுவும் மசூதி முன்பு நடைபெறாமல் தடுத்துவிட்டனர்.
கடந்த 2005ஆம் ஆண்டில் டென்மார்க்கை சேர்ந்த ஓவியர் குந்த் வெஸ்டர்கார்டு என்பவர், முகம்மது நபி குறித்து வரைந்த கேலிச்சித்திரத்துக்காக முஸ்லிம்களின் கடும் கண்டணத்திற்கு ஆளானார்.
தற்போது இந்தக்கட்சி அவரது பெயரால் ஓர் பரிசை அறிவித்துள்ளது. சிறந்த முஸ்லிம் கேலிச்சித்திரத்திற்கு இப்பரிசு வழங்கப்படும் என்று Pro NRW கட்சி பெருமையுடன் அறிவித்துள்ளது.
இதற்கும், தனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும், தன்பெயரை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் வெஸ்டர்கார்டு தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுக்க இருக்கும் 25 மசூதிகளிலும் இக்கட்சி கேலிச்சித்திரங்களை வரையவும் 100 சுவரொட்டிகளை ஒட்டவும் தன் தொண்டர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment