சீனாவின் தென்கடல்
பகுதி விவகாரத்தில் மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பேச்சு
வார்த்தையுடன் முடித்துக் கொள்வோமென சீனாவிற்கு இந்தியா அழைப்பு
விடுத்துள்ளது.
வியட்நாமுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக சீனாவின் தென்கடல் பகுதியில் இந்தியா கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் தென்கடல்
பகுதியானது பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான், மலேஷியா, புருனே ஆகிய
நாடுகளின் சர்வதேச எல்லைப்பகுதிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி
தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறுகையில், சீனாவின் தென்கடல் பகுதி
விவகாரத்தில் இந்தியா பிரச்சினையை ஏற்படுத்த விரும்பவில்லை.
அதற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு சீனா வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment