கடந்த 350 ஆண்டுகளாக
தீர்வு காண முடியாமல் இருந்த எண் கணிதத்திற்கு, இங்கிலாந்தில் வசிக்கும்
இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் தீர்வு கண்டறிந்து சாதனை படைத்துள்ளான்
இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் சௌர்யா ரேய் என்ற அந்த
மாணவன், விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் வகுத்த எண் கணிதத்திற்கு,தீர்வு
கண்டுபிடித்துள்ளதாக லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் விஞ்ஞானிகள் சக்திவாய்ந்த கணிப்பொறி
மூலம் தீர்வுக்கு முயற்சித்த அடிப்படை துகள் இயக்கவியல் கொள்கை
தொடர்பானவற்றிற்கும் மாணவன் சௌர்யா ரேய் தீர்வு கண்டுபிடித்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பந்தை சுவற்றில் எரியும் போது பந்தின் திசை, சுவற்றில் பந்து
எவ்வாறு பட்டு திரும்பும் என்பதை உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆராய முடியும்
என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment