Facebook Twitter RSS

Tuesday, May 08, 2012

Widgets

மதுரை சைக்கிள் குண்டுவெடிப்பு: காவல்துறையின் ஒருதலைப்பட்ச விசாரணை – முஸ்லிம் அமைப்புகள் ஆட்சியரிடம் மனு!

மதுரை சைக்கிள் குண்டு
மதுரை:கடந்த வாரம் மதுரையில் சைக்கிள் குண்டு வெடித்ததையடுத்து குற்றவாளிகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தங்கள் பகுதிக்கு வந்து விசாரணை என்ற பெயரில் போலீஸார் அத்துமீறுகின்றனர் என்றும், இதனால் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் தங்களைத் தவறாக நினைப்பதாகவும், போலீஸார் ஊடகங்களுக்கு தேவையற்ற செய்திகளைப் பரப்புவதாகவும் கூறி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா தலைமையிலான முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றனர். அங்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலி அக்பரிடம் தங்கள் மனுவைக் கொடுத்தனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரம் ஆகியவற்றில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களின் சதி திட்டங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற இக்குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் சதிச்செயல் உள்ளதா என்பதை காவல்துறை தனது ஒருதலைப்பட்ச விசாரணையிலிருந்து வெளிவந்து நேர்மையான விசாரணை செய்தால் மட்டுமே கண்டறிய இயலும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets