Facebook Twitter RSS

Friday, May 11, 2012

Widgets

வக்புகளை கட்டாயமாக பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை


தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு இந்த அரசு ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கியதற்காக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள், புதிய வக்ப் வாரியம் விரைவிலே அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்கள். புதிய வக்ப் வாரியம், அதனுடைய தலைவர், உறுப்பினர்கள் உடனடியாக நியமிக்கப்படுவது மிக அவசியமாக இருக்கின்றது. ஏனென்றால், வக்ப் வாரியம் என்பது ஏறத்தாழ நீதிமன்றம் போன்றது. அங்கே வரக்கூடிய வழக்குகளைஎல்லாம் விசாரித்து, தீர்ப்பு வழங்கக்கூடிய நீதிமன்றத்திற்கு இணையான ஒரு வாரியமாக இருப்பதன் காரணமாக அந்த வாரியத்தை விரைவிலே அமைப்பதற்கு இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கக்கூடிய வக்ப் சொத்துக்களை மீட்பதற்கு இந்த அரசு நல்ல முயற்சிகளை எடுத்து வருகின்றது. Tamil Nadu Private Premises Act வக்ப் வாரியத்திற்கும் பொருந்தும் என்ற நடைமுறை, வக்ப் வாரியத்தினுடைய முதன்மைசெயல் அலுவலர் C.E.O வே ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களையெல்லாம் மீட்கக்கூடிய அதிகாரம் இருக்கின்றது. அவருக்கு காவல்துறையும் உறுதுணையாக இருந்து அந்தச் சட்டத்தின்படி இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய நடவடிக்கைகளை விரைவாக இந்த அரசு மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் அவர்களுடைய இந்த அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றும் தமிழகத்தில் பதிவு செய்யாத வக்புகள் இருக்கின்றன. அந்தப் பதிவு செய்யாத வக்புகளில் ஏராளமான வருவாய் வருகின்றது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இராமநாதபுரம் ஏர்வாடியில் இருக்கக்கூடிய பிரபல தர்கா ஒன்று பதிவு செய்யாத வக்பு, அது பதிவு செய்த வக்புவாக இருந்தால் அதனுடைய உண்டியலிலிருந்து ஒரு பகுதி வக்பு வாரியத்திற்கு வரும். அரசாங்கம் தரக்கூடிய மானியத்தை கூட குறைப்பதற்கு வசதி ஏற்படும். உதாரணத்திற்கு எடுத்துக்காட்டாக சொன்னேன். இதுபோன்ற பதிவு செய்யாத வக்புகளை எல்லாம் கட்டாயமாக பதிவு செய்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets