புகைப்பழக்கத்தால்
புற்றுநோய், காசநோய் ஏற்பட்டு உலகம் முழுவதிலும் ஏராளமான பேர்
மரணமடைகின்றனர், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பல நாடுகள் தீவிரமாக
இறங்கி உள்ளன.
கல்லூரி வளாகங்கள், பூங்கா, பேருந்து மற்றும் ரெயில் நிலையம் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
நியூசிலாந்து நாடு இதற்கு மேலும் ஒரு படியாக சிகரெட்டுக்கு 40 சதவீதம்
வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்ந்து வரும் 4 ஆண்டுகள் அமலுக்கு
வரும்.
இதனால் 2016ஆம் ஆண்டில் சிகரெட் பாக்கெட்டின் விலை சுமார் ரூ.750
அதிகரிக்கும் என கருதப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் எடுத்த
புள்ளிவிவரத்தின்படி சுமார் 20 சதவீதம் பேர் புகைப்பழக்கத்தை கைவிட்டு
இருக்கிறார்கள்.
தற்போதைய இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் மேலும் 44 லட்சம் பேர்
அளவிற்கு புகைப்பழக்கத்தை கைவிடலாம் என சுகாதார துறை அதிகாரிகள்
எதிர்பார்க்கிறார்கள்.
நியூசிலாந்து இதுவரையில் சிகரெட்டுக்கு 70 சதவீதம் வரி விதிக்கிறது. இது
சீனாவில் 41 சதவீதமாகவும், அமெரிக்காவில் 45 சதவீதமாகவும்,
அவுஸ்திரேலியாவில் 64 சதவீதமாகவும், பிரான்சில் 80 சதவீதமாகவும் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment