Facebook Twitter RSS

Friday, June 01, 2012

Widgets

ரோமிங் கட்டணம் ரத்து: புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

       Cabinet approves roaming-free telecom policy
புதுடெல்லி இந்தியா முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் வழிமுறைகளைக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இனி ரோமிங் கட்டணம் கிடையாது. வேறு மாநிலத்திற்கு சென்றாலும் அதே செல்போன் எண்ணை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
தேசிய தொலைதொடர்பு கொள்கை 2012 என்ற இப்புதிய கொள்கைக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. செல்போன் சேவைகளை எளிமைப் படுத்தும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற்போல தரமான சேவைகளை வழங்குவதையும் இப்புதிய கொள்கை உறுதி செய்கிறது என்று அமைச்சர் கபில் சிபல் ஒருவர் கூறினார்.
தற்போதுள்ள நிலவரப்படி தமிழகத்தை சேர்ந்த செல்போன் சந்தாதாரர் பிற மாநிலங்களுக்கு செல்லும் போது வரும் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு மாநிலத்திற்கு சென்றால், அங்கு ‘மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி’ எனப்படும் ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் போது அதே செல்போன் எண்ணை தரமாட்டார்கள். இந்த நிலை, புதிய தொலை தொடர்புக் கொள்கையின் மூலம் மாற இருக்கிறது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets