
கெய்ரோ:எகிப்திய
குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட்
ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக
எகிப்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில்
இன்று மதியம் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல் கமிஷனின் தலைமையகத்தில்
எகிப்து அதிபர் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது.
முஹம்மது முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளையும், அவரை எதிர்த்துப்
போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் 12.3 மில்லியன் வாக்குகளையும்
பெற்றுள்ளனர். இதன் மூலம் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக
அறிவிக்கப்பட்டார். 8 லட்சம் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
6 தினங்களாக அதிபர் தேர்தலின் முடிவை அறிய காத்து தஹ்ரீர் சதுக்கத்தில்
திரண்டிருந்த மக்கள் இம்முடிவை ‘அல்லாஹ் அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்)
என்ற தக்பீர் முழக்கத்துடன் வரவேற்றனர்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து!
டாக்டர் முஹம்மது முர்ஸி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து எகிப்து முழுவதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை காத்திருந்த எகிப்து மக்கள், முடிவு
வெளியானதும் மகிழ்ச்சி தாங்கமுடியாமல் வீதிகளில் இறங்கி பட்டாசுகளை
கொளுத்தியும், வாகனங்களை ஓட்டியும் நள்ளிரவு வரை கொண்டாட்டங்களில்
ஈடுபட்டனர்.
source by thoothuonline.com
No comments:
Post a Comment