Facebook Twitter RSS

Latest News

Sunday, March 04, 2012

பெங்களூரு நீதிமன்ற கலவரம்: 4 வழக்கறிஞர்கள் கைது



பெங்களூரு நீதிமன்ற கலவரம்: 4 வழக்கறிஞர்கள் கைதுநேற்று நடந்த பெங்களூரு நீதிமன்ற கலவரம் தொடர்பாக இன்று 4 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சட்ட விரோத சுரங்க தொழில் காரணமாக கார்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெடி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
 
அப்போது, அவரை படம்பிடிக்க முயன்ற சில பத்திரிக்கையாளர்களை வழக்கறிஞர்கள் தாக்கினர். பின்னர், இது கலவரமாக மாறியது. மேலும், இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks to asiananban.blogspot.co

Saturday, March 03, 2012

இஸ்ரேலிய சிறையில் பலஸ்தீனப் பெண் உண்ணாவிரதம்

 
Quantcast
hana
30 வயதான ஹனா ஷலபி 12 நாட்களாக சாப்பிடுவதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். இஸ்ரேலிய சிறையில் தடுத்துவைக்கப்பட்டு உண்ணாவிரதம் இருக்கும் இரண்டாவது கைதி இவர் என அவரது சட்டத்தரணியும், பலஸ்தீன சிறைக் கைதிகளது அமைப்பும் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
ஹமாஸுடன் இஸ்ரேல் ஏற்படுத்திக் கொண்ட கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர், இஸ்ரேலினால் மீண்டும் இம்மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கெதிராக எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. அப் பெண் உண்ணாவிரதத்தை இவருக்கு முன்னர் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
66 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் காதர் அத்னானை, ஏப்ரல் மாதம் விடுவிக்க இஸ்ரேலிய அதிகாரிகள் இணங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய சிறைகளில் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் பல பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனை அந்நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன

ஹேமந்த் கர்கரே குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.

மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவாரத்தை சேர்ந்தவர்களை சிக்க வைக்க வேண்டும் என்று தனக்கு கூடுதல் அழுத்தம் தரப்படுவதாக ஹேமந்த் கார்கரே தன்னிடம் தெரிவித்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் வழக்கமாக சிறுபான்மையினர் கைது செய்யப்படும் நிலைக்கு மாற்றமாக முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்களை கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே ஆவார். இந்த ஹேமந்த் கர்கரே 2006 மற்றும் 2008ல் நடந்த மலேகான், 2007 ல் நடந்த சம்ஜ்ஹதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு மற்றும் 2007 ல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு விசாரணையில் ஆர்.எஸ்.எஸின் ஒத்துழைப்பை கோரி தன்னிடம் வந்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்.
அச்சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்களை சேர்ந்தவர்களை இவ்வழக்கில் குற்றவாளிகளாக்கி சிக்க வைக்க தனக்கு அழுத்தம் தரப்படுவதாக ஹேமந்த கர்கரே கூறியதாக மோகன் பகவத் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே சுவாமி அசிமானந்தா கைது செய்யப்பட்டதாக கருதும் மோகன் உபி தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டுகளை கைப்பற்ற காங்கிரஸ் செய்யும் தந்திரம் என்று கூறியதாக தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தில் மோகன் பகவத்தின் கருத்தை தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் சுட்டி காட்டிய போது நீதிமன்றத்தில் இவ்வழக்கு இருக்கும் போது அதிலும் குறிப்பாக இவ்வழக்கின் குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்துக்கள் தேவையற்றவை என்றும் அதிகப்பிரசங்கிதனம் என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது

IAS,IPS, IFS போன்ற 25 சிவில் சர்விஸ் பணிகளில் சேர ஒரு அரிய வாய்ப்பு .

மக்கள் பணத்தை சுரண்டும் ஓநாய்கள் !

 கேள்வி ஒன்று:
இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?
Game Show

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

சாம்பிள் இரண்டு:


ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை


-இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே இந்த வெட்கங்கெட்ட கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!

கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.

இந்த கேவலமான கேள்வி - பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடிரூபாய் மக்கள் பணம்.

வெறும் டிவி கேம்ஷோ மூலம் மட்டுமே இதுவரை ரூ 50 கோடி வரை நிகழ்ச்சி நடத்துபவர்கள் சம்பாதித்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?
thanks to asiananban.blogspot

Friday, March 02, 2012

எகிப்தில் மே 23,24ல் அதிபர் தேர்தல்: 32 ஆண்டு ராணுவ ஆட்சிக்குப்பின் முதல் தேர்தல் !



எகிப்தில் மே 23,24ல் அதிபர் தேர்தல்: 32 ஆண்டு ராணுவ ஆட்சிக்குப்பின் முதல் தேர்தல்
எகிப்தில் கடந்த 32 ஆண்டுகாலமாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. அதிபர் முபாரக்கின் சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சியாளர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால் புரட்சி தீவிரம் அடைந்தது. இதனால் அதிபர் முபாரக் தனது  பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதனால் 32 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்குப்பின் எகிப்தில் முதல்முறையாக அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. வரும் மே 23, 24 தேதிகளில் முதல்கட்ட தேர்தலும், அதனைத் தொடர்ந்து ஜூன் 16, 17ம் தேதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 21 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர், புதிய அதிபராக அறிவிக்கப்படுவார்.
 
ஜூன் மாத இறுதிக்குள் ஆட்சி பொறுப்புகள் புதிய அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என எகிப்தில் தற்போது தற்காலிக ஆட்சி நடத்திவரும் 90 பேர் கொண்ட ராணுவ ஆட்சிக்குழு அறிவித்துள்ளது.to asian nanban

முஹம்மத் நபியையும் , கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் !



Muslims fired dinamalar and dinathanthi in vellore
முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக முஹம்மது நபியை நினைத்து கொண்டு இருக்கையில்  முஹம்மது நபியையும்,  கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் வெளியானதை அடுத்து  வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் தினத்தந்தி நாளிதழை எரித்து முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதிமுக மேற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூரில் நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதற்காக மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கடேசன் விளம்பரம் கொடுத்திருந்தார். அதில், நபிகள் நாயகத்தையும் , கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிடும் விதமாக வாசகங்கள் இடம் பெற்றிருந்தது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் தொழுகை முடிந்து வெளியே வந்த ஆயிரகணக்கான  முஸ்லிம்கள் மேல்விஷாரம் பைபாஸ் சாலை சந்திப்பில் திரண்டு தினமலர், தினத்தந்தி நாளிதழ்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தாங்கள் கொண்டு வந்திருந்த தினத்தந்தி நாளிதழ்களை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால் ஏடிஎஸ்பி முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை !



மேற்கு வங்கத்தில் சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை
மேற்கு வங்க மாநிலம் பட்வான் மாவட்டத்தில் பள்ளி சிறுமியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 34 வயதான பினய் பக்தி என்னும் அந்த வாலிபர், கடந்த வருடம் ஏப்ரல் 21 அன்று டி.வி பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்த 14 வயது பள்ளி மாணவியை, சாக்லேட் கொடுத்து அழைத்து சென்று கற்பழித்துக் கொன்றுள்ளார்.
 
பின்னர் அந்த சிறுமியின் உடல் அழுகியநிலையில் மே 3 அன்று கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது சிறுமியுடன் கடைசியாக பினய் தான் பேசினார் என்பது தெரிய வந்ததும், பினய் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போது பினய், போலீசிடம் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

Blogger Wordpress Gadgets