Facebook Twitter RSS

Latest News

Sunday, July 01, 2012

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 1

media
முஸ்லிம் தொழிலதிபர்கள் வியாபாரத்திலோ, இன்னபிற தொழில்துறைகளிலோ மட்டும் கவனம் செலுத்தி வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று சமுதாயத்தில் மிகப் பலமுள்ள மீடியாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லோரையும் எளிதில் சென்றடையக்கூடிய தொலைக்காட்சி ஊடகத்தில் அவர்கள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
தொழில்துறைகளில் உடனே ஈட்டும் லாபம் மாதிரி மீடியா உலகில் ஈட்ட முடியாது என்றறிந்திருந்தும், அது பிரபலமாகி சூடுபிடிக்கும் வரை காத்திருக்கவேண்டும் என்றறிந்திருந்தும் காலத்தின் தேவையறிந்து பெரும் மூலதனத்தை இதில் கொட்டியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இது முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலத்தில் எற்படவிருக்கம் பிரகாசத்தை இப்போதே காட்டுகிறது.

அபூ ஜிண்டால் ஐ.பி உளவாளி?

Abu Jindal
மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் டெல்லி போலீஸ் கஸ்டடியில் உள்ள அபூஜிண்டால் என்ற ஸஈத் ஸபீஉத்தீன் அன்ஸாரி முன்னர் இந்தியாவின் இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) உளவாளியாக செயல்பட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையைத் தொடர்ந்து சிமி உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் நகர்வுகள் குறித்து ஐ.பி மற்றும் உள்ளூர் போலீசாருக்கு அபூ ஜிண்டால் தகவல் அளித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவில் இருந்து விமானத்தில் அனுப்பட்ட அபூ ஜிண்டாலை டெல்லி விமானநிலையத்தில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்ததாக கூறப்படுகிறது. இவர் மீது மும்பை தாக்குதல் மற்றும் 2006 அவுரங்காபாத் ஆயுதக்கடத்தல் வழக்கு ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.

ருஷ்டிக்கு எதிராக கம்ப்யூட்டர் கேமை தயாரித்துள்ள ஈரான்!

Iran's new video game- Verdict on Salman Rushdie
                                                                                                                                                                            டெஹ்ரான்:இமாம் கொமைனியின் மரணத்தண்டனை ஃபத்வாவில் இருந்து சல்மான் ருஷ்டி தப்பினாலும் ஈரான் ருஷ்டியை சும்மா விட தயாரில்லை.
சாத்தானிய வசனங்கள்’ என்ற பெயரால் எழுதப்பட்ட நூலில் முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைவைனின் இறுதித்தூதரை அவமதித்த ருஷ்டிக்கு ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் இமாம் கொமைனி 23 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த ஃபத்வாவை(மார்க்க தீர்ப்பு) புதிய தலைமுறைக்கும் கம்ப்யூட்டர் கேம் மூலமாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 10




அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 10
‏ حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرٍ النَّاقِدُ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ أَبُو النَّضْرِ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ نُهِينَا أَنْ نَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ فَكَانَ يُعْجِبُنَا أَنْ يَجِيءَ الرَّجُلُ مِنْ أَهْلِ الْبَادِيَةِ الْعَاقِلُ فَيَسْأَلَهُ وَنَحْنُ نَسْمَعُ فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ فَقَالَ يَا مُحَمَّدُ أَتَانَا رَسُولُكَ فَزَعَمَ لَنَا أَنَّكَ تَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَكَ قَالَ صَدَقَ قَالَ فَمَنْ خَلَقَ السَّمَاءَ قَالَ اللَّهُ قَالَ فَمَنْ خَلَقَ الأرْضَ قَالَ اللَّهُ قَالَ فَمَنْ نَصَبَ هَذِهِ الْجِبَالَ وَجَعَلَ فِيهَا مَا جَعَلَ قَالَ اللَّهُ قَالَ فَبِالَّذِي خَلَقَ السَّمَاءَ وَخَلَقَ الأرْضَ وَنَصَبَ هَذِهِ الْجِبَالَ آللَّهُ أَرْسَلَكَ قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِنَا وَلَيْلَتِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا زَكَاةً فِي أَمْوَالِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا صَوْمَ شَهْرِ رَمَضَانَ فِي سَنَتِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا حَجَّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلا قَالَ صَدَقَ قَالَ ثُمَّ وَلَّى قَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لا أَزِيدُ عَلَيْهِنَّ وَلا أَنْقُصُ مِنْهُنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَئِنْ صَدَقَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தேவையில்லாக் கேள்விகள் கேட்கத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) விபரமான கிராமத்தார் யாரேனும் ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்களின் உள்ளக் கிடக்கையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, "முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து அல்லாஹ் உங்களை(த் தூதராக) அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் "உண்மைதான்" என்று கூறினார்கள்.

சிறப்பு பயான்

சகொதரர் மௌலவி   உமர் அலி ஃபிர்த்வ்ஸ்ஸி

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்...} மஞக்கொல்லை தொவ்ஹித் பள்ளீவாசலில் இன்றூ {01.07.2012} மஹரிப்க்கு பிறகு சகொதரர் மௌலவி   உமர் அலி ஃபிர்த்வ்ஸ்ஸி {முதல்வர் ,ரியாலுஸ் இஸ்ஸாமிய மகளிர் கலலூரி ,கோவை }தலைப்பு {படைத்தவனை வணங்குவோம்}  என்ற த்லைப்பில் சிறப்பு பயான் நடைபெற்றது.

Friday, June 29, 2012

தோழர்கள் - 6 - ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ - حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ வரலாறு - தோழர்கள்

0வெட்ட ... வெட்ட
ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ
حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ
யத்ரிப் நகரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு குழுவுடன் மக்காவிற்கு யாத்திரை சென்றது. மொத்தம் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட குழு அது.

மக்காவிற்குச் சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அதன் முடிவில் நபியவர்களுக்கும் அந்த யத்ரிப் குழுவினருக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. தங்களது "உயிர், பொருள், செல்வம்" அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக் கொள்வதாகவும், காப்பாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.
அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டனர். ஸைத் இப்னு ஆஸிம், அவரின் மனைவி உம்மு உமாரா (أُمّ عُمَارَةَ)எனும் நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, அவர்களின் இரு மகன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் மற்றும் ஹபீப் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹும்). அப்பொழுது ஹபீப் இப்னு ஸைத் இளவயதுச் சிறுவர்.

Tuesday, June 26, 2012

பள்ளீவாசல் வரண்ம் புசபடுகிரது

இது மினரா சாரம்

வரணம் புசபடுகிரது


இது பலைய  வற்ண்ம்
அஸ்ஸாலாமு அலைக்கும்
மஞச்க்கொல்லை பள்ள்வாசலில்   வருடம் வருடம் வற்ண்ம்  புசபடும் அதைப்போல் இந்த ஆண்டும்  வற்ண்ம் புசபடுகிரது   

Monday, June 25, 2012

இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலம் கேரளா-தேசிய குற்றவியல் பதிவுத்துறை அறிக்கை!


Kerala is country's most crime-prone state, NCRB statistics show
புதுடெல்லி:மக்கள் தொகைக்கு ஏற்ப இந்தியாவிலேயே அதிகமான குற்றங்கள்  ’தெய்வத்தின் சொந்த நாடாக’ பெருமைப் பேசப்படும் கேரளா மாநிலத்தில் நடைபெறுவதாக தேசிய குற்றவியல் பதிவு துறை(NCRB) அறிக்கை கூறுகிறது.
கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறந்து விளங்கும் மாநிலமாக கருதப்படும் கேரளாவில் தான் இந்தியாவிலேயே அதிக ஆபத்து நிறைந்த நகரமான கொச்சி அமைந்துள்ளது.
2010-ஆம் ஆண்டு தகவல்களின் அடிப்படையில் என்.சி.ஆர்.பி இவ்வறிக்கையை தயார் செய்துள்ளது. லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப குற்றச்செயல்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கேரளாவில் நடைபெறும் குற்றங்களின் சராசரி தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் குற்றங்களின் சராசரி 187.6 சதவீதமாகும். ஆனால் கேரளாவில் 424.1 சதவீதம் ஆகும். 2009-ஆம் ஆண்டைத் தவிர கேரள மாநிலத்தின் முக்கிய நகரமான கொச்சியில் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் பல்கிப் பெருகியதாக என்.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. முந்தைய ஆண்டுகளை விட கொச்சியில் 193 சதவீத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
குற்றச்செயல்களில் 2-வது இடத்தை வகிக்கும் மத்தியபிரதேச மாநிலத்தில் கேரளாவை விட மிக குறைந்த அளவிலேயே குற்றங்கள் நடைபெற்றுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தின் குற்றங்களின் சராசரி 297.2 சதவீதம் ஆகும். 279.8 சதவீத குற்றங்களின் சராசரியைப் பெற்று இந்தியாவின் தலைநகரமான டெல்லி 3-வது இடத்தை வகிக்கிறது.
கலவரங்கள், தீவைப்பு சம்பவங்களின் எண்ணிக்கையிலும் கேரளா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவற்றில் இந்தியாவின் மொத்த சராசரி 6.4 சதவீதம் என்றால் கேரளாவின் சராசரி 26 ஆகும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளிலும் கேரளாவே முதலிடத்தைப் பெற்றுள்ளது. கேரளாவின் சராசரி 27 ஆகும். டெல்லிக்கு 24.6 சதவீதம் ஆகும்.
உயர்கல்வி, சிறந்த சுகாதாரம், நீண்ட ஆயுள் என பெருமைப் பேசப்படும் கேரளா மாநிலம், டெல்லி, உ.பி மாநிலங்களை கூட தோற்கடிக்கும் வகையில் குற்றச்செயல்களில் முன்னணி வகிப்பதாக என்.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது.

Blogger Wordpress Gadgets