மாஸ்கோ:ஈரானுக்கு எதிராக ஒருதலைபட்சமாக அறிவிக்கும் தடைகளை ஆதரிக்கமாட்டோம் என்று சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கட்டமைப்பிற்கு வெளியே இருந்துகொண்டு ஏதேனும் நாடு அல்லது கூட்டணி அறிவிக்கும் தடைகளை ஆதரிக்க கூடாது என்பதே தங்களின் முடிவு என்று சுவிட்சர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிடியர் பூல்கார்டர் மாஸ்கோவில் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அந்நாட்டின் மீதான தடையை வலுப்படுத்த சில தினங்களுக்கு முன்பு தீர்மானித்தன. ஈரானுக்கு எதிரான தடையை அங்கீகரிக்க இயலாது என்று சுவிஸ் நாட்டின் அதிபர் எவிலைன் விட்மெர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஈரானுடனான வர்த்தக உறவு தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் முக்கிய எண்ணெய் வர்த்தக மையமாக திகழும் சுவிட்சர்லாந்தில் நேசனல் ஈரான் ஆயில் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது.
No comments:
Post a Comment