Facebook Twitter RSS

Saturday, September 29, 2012

Widgets

இந்து மதமும் இஸ்லாமும்


இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God's எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் 's ஆகும்.
இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான்.
ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் -s) -s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது. 
''(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்''. (3:64)

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்
பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.
உபநிஷங்கள்:
உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள்
1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.
''ஏகம் எவதித்யம்"
''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"
உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.
உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது
குர்ஆன் கூறுகிறது:
''(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே''. (குர்ஆன் 112:1) 
2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
 ''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)
குர்ஆன் கூறுகிறது:
''அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.'' (குர்ஆன் 112:3)
3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ் அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
குர்ஆன் கூறுகிறது:
''அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.'' (குர்ஆன் 112:4) 
''..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்''. (குர்ஆன் 42:11)
4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம் - அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை. ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி
அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
குர்ஆன் கூறுகிறது:
''பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்''.(குர்ஆன் 6:103)
  இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு 
வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.
யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன்''. (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
''தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்
குர்ஆன் கூறுகிறது:
''...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன்'' (13:9)
ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.
குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.
ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.
குறிப்பு:-யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.
ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
குர்ஆன் கூறுகிறது:
''(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது:
''(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்'' (1:2)
யஜூர் வேதத்தின் (40:160)
''எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)
குர்ஆன் கூறுகிறது:'
'நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல.'' (குர்ஆன் 1:5, 6&7)
ரிக் வேதம் (6:45:16)
''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.
இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.
  மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS) 
இஸ்லாத்தில் மலக்குகள்
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.
உதாரணம்:
ஜிப்ராயீல்(அலைஹிஸ்ஸலாம்)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்குமீக்காயீல்(அலைஹிஸ்ஸலாம்)-மழை கொண்டு வரும் மலக்கு
இந்து மதத்தில் மலக்குகள்
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.
இந்துவத்தில் புனித நூல்கள்
இந்துவத்தில் புனிதம் வாய்ந்த இருவகை நூல்கள் உள்ளன
1) ஸ்ருதி 2) ஸ்மிருதி.
ஸ்ருதி
ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான பிரசித்தி பெற்றது ஆகும். ஸ்ருதி இரு வகைப்படும் அவை:
1) வேதங்கள் 2) உபநிஷங்கள்.
ஸ்மிருதி
ஸ்ருதி போல் புனிதம் வாய்ந்ததல்ல இருப்பினும் இந்துக்களால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "ஸ்மிருதி" என்றால் ஞாபகங்கள் அல்லது நினைவூட்டல்கள். இந்து இலக்கியங்கள் புரிந்து கொள்ள மிக எளிதானது. ஏனெனில் அவை உலகின் உண்மைகளை குறிப்பால் உணர்த்துகிறது.

ஸ்மிருதி இறைவனிடம் இருந்து வந்த புனிதத் தன்மையின்றி இருந்தாலும் மனிதன் வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் கூறுகிறது. சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொரு செயலுக்கும் விதி முறைகளை கூறுகிறது. தர்மசாஸ்திரம் எனும் இதிகாச புராணங்கள் ஸ்மிருதியில் உள்ளன.

இந்து வேதங்களின் ஆய்வு

இந்துக்களின் புனித நூல்களாக வேதங்கள், உபநிஷங்கள், புராணங்கள் கருதப்படுகிறது
1. வேதங்கள்
அறிவு ஞானம் எனும் ''வித்" எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது.
முக்கிய வேதங்கள் 4. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும்.
முகாபாஷ்ய பாதாஞ்சலி கூற்றுப்படி ரிக்வேதத்தின் 21 கிளைகள், அதர்வனவேதத்தின் 9 கிளைகள், யஜுர் வேதத்தின் 101 கிளைகள், சாம வேதத்தின் 1000 கிளைகள் ஆக 1131 கிளைகள் உள்ளன.
ஆனால் இவற்றில் 12 கிளைகள் இப்பொழுது காணக் கிடைக்கிறது.
ரிக், யஜுர், சாம வேதங்கள் பழமையானது இதனை ''தரை வித்யா" என அழைப்பர். அதர்வண வேதம் இறுதியில் வந்தது.
ஆர்ய சமாஜ் என்ற இயக்கத்தின் நிறுவனரான ஸ்வாமி தயானந்தர் கூற்றுப்படி 4 வேதங்களைத் தொகுத்த நாளில் ஒத்த கருத்து இல்லை. தயானந்தர் 1310 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் அருளப்பட்டது எனக் கூறினார். சில அறிஞர்கள் 4000 ஆண்டுகள் முன்பு வேதங்கள் இறங்கின என்பர்.
வேதங்கள் இறங்கிய இடங்களிலும் ஒத்த கருத்து இல்லை. இறங்கிய வேதங்கள் ரிஷிகளிடம் வழங்கப்பட்டன என சிலர் கூறுகின்றனர். இந்த வேறுபட்ட கருத்துகள் இருந்த போதும் வேதங்கள் இந்து தர்மத்தின் ஆதாரப்பூர்வ நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்.
2. உப நிஷங்கள்
அருகில் இருந்து கற்றவை அறிந்தவை எனப் பொருள். அறியாமையை அகற்றக் கூடியது என மற்றொரு பொருளுமுண்டு.
இந்திய வரலாற்றுப் படி 200க்கும் அதிகமான உபநிஷங்கள் உண்டு. இருப்பினும் நடப்பில் உள்ளவை 10 அல்லது 18 ஆகும்.
உபநிஷங்களுக்கு வேதாந்தம் என்றும் பொருண்டு. தத்துவங்களைக் கூறும் உப நிஷங்களும் உள்ளன. வேதங்களுக்கு பின் தோன்றியவைகளே வேதாந்தம் எனும் இந்த உப நிஷங்கள்.
சிலபண்டிதர்கள் வேதங்களைக் காட்டிலும் உபநிஷங்கள் சிறந்தது எனக் கருதுகின்றனர்.
3. புராணங்கள்
வேத, உபநிஷங்களுக்குப் பின் இந்துக்ளின் புனிதமாக கருதப்படுவது புராணங்கள் ஆகும். உலகம் படைக்கப்பட்டது, முந்தய ஆரியர்களின் வரலாறு, தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் கூறுகின்றன. இவை நூல் வடிவில் அருளப்பட்டதாக கூறுவர். மகாரிஷி வியாசர் புராணங்களை 18 பாகங்களாய் பிரித்தார். அவற்றிக்கு பொருத்தமான தலைப்புகள் இட்டனர். பகவத் கீதை (மகாபாரதம்) இவரது எழுத்துத்திறனால் வெளிப்பட்ட புராணமே. புராணங்களில் முதன்மையானது பவிஷ்ய புராணம். எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனை இந்துக்கள் கடவுளின் வார்த்தை எனக் கூறுவர். மகாரிஷி வியாசர் இந்நூலை தொகுத்தவர் ஆவார்.
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பற்றிய
இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் கூற்று.
பவிஷ்ய புராணம்
ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்தியாயம் 3, சுலோகம் 5 முதல் 8 வரை ''ஒரு வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு மொழியினைச் சார்ந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவர் தோன்றுவார். அவருடன் தோழர்கள் இருப்பர் அவரின் பெயர் "முஹம்மது"
இந்த சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது.
1. நபியின் பெயர்
2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்)
3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு.
4. சமஸ்கிருத வார்த்தை ''பர்பதிஸ்நாத்" என்பதன் பொருள் அருட்கொடை
குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது.
''(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.''(அல்குர்ஆன்-68:4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதாரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
''(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.'' (அல்குர்ஆன் 21:107)
5. அவர் தீய செயல்களை விரட்டி (ஷைத்தானை) சிலை வணக்கம் அகற்றி ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவார்.
6. அந்த நபி இறைவன் புறமிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார். அந்த நபி பாவங்களற்றவர்.
பவிஷ்ய புராணம் ப்ரதி ஸாரக் பாகம் 3, காண்டம் 3, ஸ்லோகம் 10-27.
மகாரிஷி வியாசர் கூறுகிறார்:
''அத்தூதர் அரேபியாவில் நிலவும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பார். ஆர்ய தர்மத்தை அந்நாட்டிலிருந்து அகற்றுவார். நேர்வழி காட்டும் அத்தூதர் முஹம்மது ஆவார். அவருக்கு பிரம்மன் (கடவுள்) துணைபுரிவார். துஷ்டர்களை அவர் நல்வழிப்படுத்துவார். ஓ ராஜாவே நீர் கெட்டவர்களை (ஷைத்தானைப்) பின்பற்றாதீர். ஆத்தூதரினைப் பின்பற்றுவோர் மாமிசம் உண்பர். விருத்தசேதனம் செய்வர். தாடியுடன் இருப்பர். பாங்கோசை ஒலித்து வழிபாட்டில் ஈடுபடுவர். அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்பர். பன்றி இறைச்சியைத் தவிர்ப்பர். அவர்களுக்கு போர் வெற்றிப்பொருட்கள் ஆகுமானது. அவர்களுக்கு "முஸல்மான்" எனப்பெயர்."
இந்த சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்
1. ஷைத்தான்கள் அரேபியாவை அசுத்தப்படுத்தியிருந்தனர்.
2. ஆர்ய தர்மம் அரேபியாவில் காணப்படவில்லை.
3. சத்திய மார்க்கத்தை அழிக்கப் புறப்பட்ட பெரும் மன்னர்கள் அழிந்தனர் (உதாரணம்) அப்ரஹா
குர்ஆன் கூறுகிறது:
''
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?'' (105:1)
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்க விடவில்லையா? (105:2)
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3)
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4)
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5)
4. நபிக்கு அல்லாஹ் (பிரம்மா) எதிரிகளை நேர்வழிப்படுத்த துணைபுரிகிறான்.
5. இந்தியன் ராஜா அரேபியா செல்லவில்லை. மாறாக முஸ்லீம்கள் இந்தியா வந்தடைந்தனர். 
6. இறைத்தூதர் ஏகத்துவத்தை போதிப்பவர் நேர்வழிப் படுத்துபவர்.7. இறைத்தூதர் விருத்த சேதனம் செய்தவர், தாடியை வைத்திருப்பவர்.
8. பாங்கு ஓசை எழுப்பி தொழுபவர்.  
9. அனுமதிக்ப்பட்ட உணவை உண்பார், பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது.
குர்ஆன் கூறுகிறது,
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவை) ஆக்கிருக்கிறான் ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.(2:173)
''(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் அம்புகள் மூலம் நீங்கள குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) (5:3)
''(நபியே!) நீர் கூறும் ''தானாக இறந்தவைகளையும், வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை"...(6:145)
''நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும்...(16:115)
10. அநியாயத்தை எதிர்த்து மாற்றாருடன் போரிட தயங்க மாட்டார்கள். 
11. அவர்கள் முஸ்லீம்கள் ஆவர்.
12. அவர்கள் இறைச்சி உண்பர்
குர்ஆன் கூறுகிறது,
''..உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன... (5:1) 
''நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம் இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன் அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். (23:21)
பவிஷ்ய புராணம் பாகம் 3, காண்டம் 1, அத்தியாயம் 3 ஸ்லோகம் 21-23
அக்கிரமும் அநீதியும் ஏழு புனித நகரங்களில் தலைவிரித்தாடும் (காசி உள்ளிட்ட) இந்தியாவில் ரச்சாஸ், ஸாபர், பிஹ்ல் போன்ற மூடர்களின் பழக்க வழங்கங்களை மக்கள் பின்பற்றுவர். முஹம்மதுவைப் பின்பற்றும் முஸ்லீம்கள் மிகச் சிறந்த தைரியசாலிகள். முஸல்மான்களிடம் நல்ல குணநலன்கள் காணப்படும். கெட்ட தீய செயல்கள் ஆரியர்களின் பூமியில் ஒன்று திரட்டப்படும். இஸ்லாம் இந்தியாவையும் அதன் தீவுகளையும் ஆட்சி செய்யும். இவ்வுண்மைகளை அறிந்து கொண்ட ஓ முனியே! உமது இரட்சகனைப் புகழ்ந்து துதிப்பாயாக!
குர்ஆன் கூறுகிறது,
''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்).'' (9:33)
முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (61:9)
''அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.'' (48:28)
பவிஷ்ய புராண 20-ம் நூல், அதர்வண வேதத்தில் 127வது காண்டம் இன்னும் சில அத்தியாயங்கள் குண்டப் அத்தியாயம் என அழைக்கப்படுகின்றன. குண்டப் என்றால் வறுமையில், துன்பத்தில், சுழல்பவனை நீக்குவது என பொருள் கொள்ளலாம். உலகின் மையப்பகுதியில் உள்ள ஒரு இடத்துடன் இச்செய்தி தொடர்பு உடையது. உம்முல் குர்ஆன் என அழைக்கப்பட்ட மக்காவை இது குறிக்கிறது.
(இதை) குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது,
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான் அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.(3:96)  மக்காவின் மற்றொரு பெயர் பக்கா.
அநேக மொழி பெயர்ப்பாளர்கள் குண்டப் அத்தியாயத்தை மொழிபெயர்த்தனர். குறிப்பாக எம். ப்ளாம் பீல்டு, ரால்ப் க்ரிப்ட், பண்டிட் ராஜாராம், பண்டிட் கேம் கரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13.
சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).
அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.
சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"
சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.
சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.
சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.
சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.
சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.
சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.
சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.
சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.
சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.
சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.
சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.
சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்ப கோரினர்.
இந்து சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்
அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை விளக்ககங்கள்
1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ''கௌரமா" சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர். 
2. இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத் தூதர்களைக் குறிப்பிடவில்லை. எவரும் இந்தியாவில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதில்லை. பிராமணர்கள் ஒட்டகச் சவாரி செய்யத் தடை உள்ளது. (மனுஸ்மிருதி பாகம் 25, பக்கம் 472).
மனுஸ்மிருதி அத்தியாயம் 2, சுலோகம் 202 கூறுகிறது. ''ஒரு பிராமணன் ஒட்டகக் கழுதைச் சவாரி செய்வது தடை செய்யப்பட்டது. நிர்வாணமாய் குளிப்பதும் தடையாகும். அவனுடைய மூச்சால் அவனை சுத்தப்படுத்திக் கொள்ளவும்"
3. முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் மஹ்மத் என்பது கெட்ட வார்த்தையாகும். ஆகவே மம்ஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.4. அவருக்கு வழங்கப்பட்ட நூறு தங்க நாணயங்கள் அவரின் சிறந்த தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்கள் மக்கத்து இணைவைப்போரால் துன்புறுத்தப்பட்டு அபீஷினியா, மதீனா இடம் பெயர்ந்தனர். பின்னர் மதீனாவில் ஒன்று கூடினர். அவருக்கு வழங்கப்பட்ட 10 கழுத்து அணிகலன்கள் இஸ்லாம் கூறும் ''அஸ்ரத்துல் முபஷ்ஷரா" ஆகும். சுவனத்திற்கு இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட பத்துபேர் (நபித்தோழர்கள்). அவர்களாவன அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹுஉஸ்மான்ரளியல்லாஹு அன்ஹுஅலி ரளியல்லாஹு அன்ஹுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹுஜுபைர்ரளியல்லாஹு அன்ஹுஅப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹுஸஆத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹுஸஆத் பின் ஜைது ரளியல்லாஹு அன்ஹுஅபூ உபைதாரளியல்லாஹு அன்ஹு.
தூதருக்கு வழங்கப்பட்ட 300 குதிரைகள் பத்ருப்போரில் போரிட்டு வெற்றி ஈட்டித்தந்த நபித்தோழர்களைக் குறிக்கும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்ளப் போரிட்ட இந்நபித்தோழர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக இஸ்லாம் கூறுகிறது. 10000 பசுகள் என்பது இறைத்தூதருடன் மக்கா வெற்றியின் பொது வந்த நபித்தோழர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்தமான, போராடக் கூடிய தீரர்கள் என்பதை அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது.
''முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.'' (48:29)
''ரெப்ஹ்" என்னும் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் அரபியில் அஹ்மத் ஆகும். இது இறைத்தூதரின் மற்றொருபெயர். 
5. இறைத்தூதரும் அவரின் தோழர்களும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர். அது போர்களமாக இருந்தாலும் சரியே.

இன்ஷா அல்லாஹ்தொடரும்....
source islamkalvi

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets