Facebook Twitter RSS

Tuesday, April 02, 2013

Widgets

தாலிபானை ஒடுக்க இந்தியாவும் சீனாவும் ஓரே அணியில்





என்ன தலைப்பே ஆச்சரியமாய் உள்ளதா?. ஆப்கானிலிருந்து அமெரிக்க 

படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாய் வெளியாகும் 

நெருங்கும் வேளையில் ஆப்கன் மக்களும் அரசும் அதை வரவேற்க, 

ஆப்கனின் அண்மை நாடுகளோ கவலையுடன் அதை பார்த்து 

கொண்டிருக்கின்றன. 

ஆப்கனின் அண்டை நாடுகள் அமெரிக்காவின் வெளியேற்றத்தால் கவலைப்படுவதற்கு காரணம் அமெரிக்காவின் வெளியேற்றம் தாலிபான்களின் எழுச்சிக்கு காரணமாகி விடும் எனும் அச்சமே. அதனாலேயே தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து விட்டு கூட்டணி வைத்து கொள்ள முயல்கின்றன.



அமெரிக்க வெளியேற்றத்திற்கு பின் தாலிபான்களை கட்டுப்படுத்த சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. மூவரின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது.

ரஷ்யா, பாகிஸ்தானுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க உள்ள சீனா அதற்கு முன்னதாகவே ரஷ்யா மற்றும் இந்தியாவுடன் இணைந்து முக்கோண கூட்டணி ஒன்றை ஆரம்பித்து மாஸ்கோவில் பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டது. இதன் மூலம் இந்தியாவுடன் பொது எதிரியை ஒழிக்க ஒன்று சேரும் அதே வேளையில் இந்தியாவிற்காக பாகிஸ்தானை பகைத்து கொள்ள தயாராக இல்லை என்றும் இந்தியாவிற்கு உணர்த்தவுமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது சீனா.

ஆப்கானிஸ்தான் பிரச்னையில் சீனாவும் இந்தியாவும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இந்தியாவும் சீனாவும் எல்லை பிரச்னையில் விட்டு கொடுக்காமல் இருக்கும் சூழலில் இக்கூட்டணி அமைந்ததற்கான காரணமாக இருவருக்கும் பொதுவான எதிரி தாலிபான் என்பதாலேயே என கூறுகின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.

பாகிஸ்தானுடன் நட்புறவு வைத்திருந்தாலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எப்போதும் தாலிபான்களை ஆதரிக்கும் என்பதாலேயே தாலிபான்களை ஒழிக்க இந்தியாவின் உதவியை நாடுகிறது சீனா. ஏனெனில் தன்னுடையை ஜின் ஜியாங் மாநிலத்தில் சீன அரசுக்கு எதிராக போராடும் இஸ்லாமிய போரளிகளுக்கு தாலிபானின் எழுச்சி ஊக்கமளிப்பதாக ஆகிவிடும் என்று பயப்படுகிறது சீன அரசு.

இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் தன்னுடைய முதலீடுகளுக்கு தாலிபானின் எழுச்சியால் பெரும் பாதிப்பு நேர கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளது. வரும் மே மாதம் முதல் சீனாவின் CNPC எண்ணைய் நிறுவனம் வட ஆப்கனின் எண்ணைய கிணறுகளிலிருந்து எண்ணைய் எடுக்க உள்ளது. அது போல் ஆப்கானின் ஹஜிகாக் சுரங்கத்தில் இந்தியா ஏராளமான முதலீடு செய்துள்ளது.

எனவே தான் தம்முடைய பகைமையெல்லாம் மறந்து ஆப்கன் மூலம் எண்ணெய் வளம் பெறவும் தம்முடைய கனிம வளத்துக்காகவும் எதிரிக்கு எதிரி நண்பன் எனும் அடிப்படையில் தாலிபானுக்கு எதிராக இந்தியாவும் சீனாவும் கைகோர்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


 at www.inneram.com

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets