Facebook Twitter RSS

Saturday, September 29, 2012

வெற்றிக்குப் பத்து வழிகள்!


நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்
உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?
உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?
உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?
ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!
மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.
இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் H.L. Dattu, C.K. Prasad - அதிரடி தீர்ப்பில் நெத்தியடி கருத்து!


இந்து மதமும் இஸ்லாமும்


இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God's எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் 's ஆகும்.
இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான்.
ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் -s) -s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது. 
''(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்''. (3:64)

Wednesday, September 26, 2012

மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்?

 
[ இஸ்லாத்தைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளைச் செய்யும் அமெரிக்காவுக்கோ, ஐரொப்பாவுக்கோ தெரியாததல்ல. அப்படி அமெரிக்கா அறியாமலிருந்தாலும் அதற்குப் புரியும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துச் சொல்லியே இருக்கின்றார்கள். ஒவ்வொரு நிகழ்வின் போதும் தெளிவுபடுத்தியே வருகின்றார்கள்.
இத்தனையும் அறிந்தும் தெரிந்தும் அமெரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தோடு இணைக்கின்றனவே ஏன்?
காரணமிருக்கின்றது! அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி அச்சம் அறவே இல்லை என்பது உண்மை தான். ஆனால் அது நிச்சயமாக இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றது. காரணம், அதன் மடியில் - இன்னுஞ் சொன்னால் அதன் அடிவயிற்றில் அது கட்டிக் கொண்டிருக்கும பிரச்னைகள். 
இஸ்லாமியப் பிரச்சாரம், அதன் வெற்றி இவர்கள் நுழையவே முடியாது என்று கட்டி வைத்திருக்கும் கோட்டைகளுக்குள் எல்லாம் இன்று இஸ்லாமியப் பிரச்சாரம் புகுந்திருக்கின்றது. இந்த இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் அமெரிக்காவில் ஓர் இஸ்லாமிய அலையை உருவாக்கி இருக்கின்றது. எழுந்து வரும் இந்த அலையை எப்படியேனும் முடக்கிப் போட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.]
அமெரிக்க நாடு உருவானதிலிருந்து அது பீதிவயப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் உலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவில் புகுந்த மக்கள் ஐரோப்பியர்கள் அங்குள்ள செவ்விந்தியர்களைப் படுகொலை செய்தார்கள். அந்த மக்களைக் கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தினார்கள். குறைந்த அளவே கூலி கொடுத்தார்கள். அந்த மக்களைச் சுரண்டி, சுட்டுக் கொன்று அச்சுறுத்தித்தான் அங்கே தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள்.
தங்கள் ஆதிக்கத்தை அங்கே நிலைநாட்டினாலும் ஒரு பெரும் பீதியுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காரணம் அந்த அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் எப்போதும் தாக்கலாம் அன்ற அபாயம் இருந்து கொண்டே இருந்தது.

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்




சேரமா பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. 

சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். 

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது.இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி,மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது.(ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது)

தமீம் அன்சாரி: ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி!

 
ஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (34) கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில்  கைது செய்யப்படுகிறார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்த முயன்றபோது அவரை கைது செய்ததாக‌ க்யூ பிரிவு போலீசார் செய்தி பரப்பினர். ஆதாரம் அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி மற்றும் அணுமின் நிலையங்களின் புகைப்படங்கள். இணையத்தை திறந்தால் எளிதாக கிடைக்கும் இப்படங்களை ஒரு ஆள் வைத்து புகைப்படம் எடுக்குமளவுக்கு ஐஎஸ்ஐ என்னமோ  அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் வரும் காமடி பீசாக காட்டுகின்றனர் தமிழக போலீசார்.

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!



குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.

மாரடைப்பை குணப்படுத்தும் வெந்தயக் கீரை............!



வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பாதாம் பருப்பு பற்றிய தகவல் !!!




இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

விஞ்ஞான முறையில் விஷமாகும் பழங்கள்


 

உணவு வகைகளிலேயே பழங்கள்தான் மிகமிக எளிமையாக ஜீரணமாகக் கூடியவை. பழங்களை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு பழமும் இது ஒத்துக்கொள்ளுமா? ஒத்துக்கொள்ளாதா? என்ற பேச்சுக்கே இடமில்லை. அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தாத, மேலும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யக்கூடியவை பழங்களாகும்.
படுத்தப் படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்குக் கூட பழங்களைக் கொடுத்தால் நல்ல சக்தியும் புத்துணர்வும் கிடைக்கும். நோய் தீர்க்கும் அருமருந்து. இறைவனால் நமக்கு இயற்கையாக வழங்கப்பட்ட அருட்கொடையாகும்.
பழங்களால் கிடைக்கக்கூடிய நோய் நிவாரண சக்தி எப்படிப்பட்டதென்றால் நம் வயிற்றையும் நுரையீரைலையும் கல்லீரலையும் சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலுறுப்புக்கள் செல் அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவிப் பாய்ந்து அவற்றில் கலந்துள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் நீக்கி நம் உறுப்புக்களைப் புதுமைப்படுத்தி சிறு சிறு பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் சக்திகொண்டவை.
முக்கியமாக நம் 3 வேளை உணவில் இரவில் பழவகைகளைக் கொண்ட உணவாக நாம் மாற்றி கொண்டால் மேற்சொன்ன உறுப்புக்களான வயிறு நுரையீரல் கல்லீரல் ரத்தஓட்டமும் இன்னும் பிற உறுப்புக்களும் நம் உடலில் ஒவ்வொரு செல் அணுவும் மறுநாள் காலையில் புத்தம்புது பொலிவுடன் துலங்கும்.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல்
ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி,
மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் இதுபோன்ற கொடுமைகள் ஒழிய வேண்டும்..



படித்து பாருங்கள் ...மனது வலிக்கும்

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.

இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
Blogger Wordpress Gadgets