Facebook Twitter RSS

Latest News

Thursday, January 03, 2013

ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுப்பும் தமிழக ஊடக கூட்டங்களின் வயிற்றெரிச்சலும்!

மாலைமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட கள்ளநரி ஊடக கூட்டங்கள் முஸ்லிம்களை பற்றிய பொய்யான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள், அந்த வகையில் ஜெர்மனியில் உள்ள சகோதரர்கள் உண்மை நிலையை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்,
தாங்கள் உண்மை நிலையை விளக்கிய பிறகு தான் மாலைமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட குள்ளநரி கூட்டத்திற்கு மரண சாசனம் எழுத நீதிமன்ற படியை மிதிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை செய்து வருகிறோம்,
இறைவனின் மாபெரும் கிருபையினால் கிறித்தவ நாடான ஜெர்மனியில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதை நாம் கண்டு வருகிறோம், அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கிறித்தவ சகோதரர்கள் ஆண்களும், பெண்களும் இஸ்லாத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக வருகை தருகிறார்கள், அந்த வகையில் ஒரு சிலரின் பெயரை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...
1) கான்சர்ச்கி (Ganczarski)
2) குத்து சண்டை வீரர் பியர் வோகல் (Pierre Vogel a german Boxer)
3) யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes)
இப்படி பல சகோதரர்கள் கூட்டம் கூட்டமாக அலைகடலென சத்திய மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் 3000 க்கும் அதிகமான சகோதரர்கள் இஸ்லாத்தை நோக்கி வருகை தந்துள்ளார்கள்,
இவ்வாறு ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் காவிவெறி பிடித்த பத்திரிக்கையான மாலைமலர் ஜெர்மனியில் உள்ள ஒரு இந்தியர் ரோட்டில் நடந்து செல்லும்போது திடீரென இரண்டு தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு மாறுமாறு மிரட்டினார்களாம்,
அந்த இந்தியர் இஸ்லாத்திற்கு வரமருத்துவிட்டாராம், ஆகையால் அவருடைய நாக்கை தீவிரவாதிகள் அறுத்து விட்டார்கள் என பொய்யான செய்தியை வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்தை விதைத்துள்ளது மாலைமலர்,
மாலைமலர் எடுத்த அதே வாந்தியை ஒன் இந்தியா தளமும், விகடன் செய்திகள் தளமும் அதே செய்தியை வெளியிட்டு தானும் ஒரு காவிக்கூட்டம் என்பதை தெளிவாகவே நிரூபித்து இருந்தது,
இந்த செய்தியை முகநூலிலுள்ள சுவாமி வித்தியானந்தா என்பவர் வெளியிட்டு ஒன்றும் அறியாத மக்களுக்கு மேலும் விஷக்கருத்தை பாய்ச்சுகிறார்,
ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து வெளியிடும் காவிக்கூட்டங்களே....
1) இந்தியரின் நாக்கு துண்டிக்கப்பட்டது என்று கூறுகிறீர்களே, அந்த இந்தியரின் பெயர் என்ன? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
2) ஜெர்மனியில் ஒரு இந்தியருக்கு பாதிப்பு என்றால் இந்திய அரசு இதுவரை ஜெர்மனி அரசுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
3) பாதிக்கப்பட்ட இந்தியர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார், அவரை எந்த மருத்துவமனையில் வைத்து மருத்துவம் செய்யப்படுகிறது,
4) இந்தியரின் நாக்கை ஜெர்மனியில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் துண்டித்தார்கள் என பொய்யை விதைக்கிறாயேஸ. அந்த முஸ்லிம் இயக்கத்தின் பெயர் என்ன? அந்த இயக்கத்தினரை ஜெர்மனி காவல்துறை கைது செய்ததா?
5) மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற அந்த சம்பவம் BBC, Gulf News, Yahoo News உள்ளிட்ட உலகளாவிய ஊடகங்களில் வெளிவராத செய்தி எப்படி மாலைமலர், ஒன் இந்தியா, ஆனந்த விகடன் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களில் வந்தது எப்படி? உங்களுக்கு செய்தி சொன்ன செய்தியாளர் யார்?இப்படி எந்த கேள்வியை கேட்டாலும் உங்களால் பதில் சொல்லமுடியாது, ஏனென்றால் உன்னிடம் உண்மை இல்லை என்பது முஸ்லிம்களுக்கு எப்பொழுதோ தெரியும் ஆனால் உங்களையும் நல்லவர்களாக நினைத்து கொண்டிருக்கும் எங்களுடன் ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு உண்மை நிலையை புரியவைக்காமல் விடமாட்டோம்,
ஜெர்மனியில் இஸ்லாத்திற்கு வராவிட்டால் நாக்கை அறுப்பதாக இருந்தால் ஜெர்மனியில் யாராவது இஸ்லாத்திற்கு வருவார்களா? ஆனால் அங்கு உள்ள நிலை என்ன ? கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்,
இஸ்லாத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை என்பதை உலக மக்கள் நன்கு அறிந்துள்ள நிலையிலும் இப்படி பட்ட உன் நச்சுக்கருத்தை விதைத்தால் மக்களுக்கு எடுபடும் என நினைக்கிறாயோ?
இதிலிருந்தே மாலைமலர், ஒன் இந்தியா, விகடன் செய்திகள் உள்ளிட்ட குள்ளநரி கூட்டங்கள் உண்மைக்கு மாறான நச்சுக்கருத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளன என்பது திட்டவட்டமாக புரிகிறது,
அப்படி நீங்கள் சொல்வது போல் உண்மையாக இருந்தால்ஸ அதாவது ஒரு இந்தியர் இஸ்லாத்திற்கு மாறுமாறு வற்புருத்தப்பட்டு அவர் மாற மறுத்த காரணத்தினால் தீவிரவாத இயக்கத்தினர் அவருடைய நாக்கை துண்டித்து இருப்பார்களேயானால்,
அந்த கேவலத்தை நீ மக்களுக்கு கொண்டு சென்றதை விட நாங்கள் கொண்டு செல்கிறோம், நாங்களும் இந்தியர்கள் தான், எங்கள் சக இந்தியனுக்கு ஒரு பாதிப்பு என்றால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை,
இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு!   source nidur.info

ஹாரி ஒரு குள்ளநரி : தலிபான். . .

.

ஹாரி ஒரு குள்ளநரி, அவனால் கழுகுகளை கூட   வேட்டையாட இயலாது என்று தலிபான்  போராளி ஒருவர்  தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு நேட்டோ படைகள் முகாமிட்டு, அந்நாட்டு வளத்தையும் கொள்ளை அடித்து அந்நாட்டு மக்களையும் கொன்று குவித்து வருகிறது இதை எதிர்த்து போராடி வரும் தலிபான் போராளிகளை தீவிரவாதி என்று முத்திரை குத்தி வருகிறது  இங்குள்ள இங்கிலாந்து படையில் இளவரசர் ஹாரியும் இடம்பெற்றுள்ளான்   இவன் சமீபத்தில் தலிபான் போராளி ஒருவரை சுட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தலிபான் போராளி ஒருவர் கூறுகையில், எதிர்வரும் 2014ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து படையினர் தங்களது படைகளை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீத புனித போர் நடத்துவோம் என்றார். மேலும் கூறுகையில், ஹாரி ஒரு குள்ளநரி, அவனால் கழுகுகளை கூட  வேட்டையாட முடியாது. ஹாரியை தலிபான்கள் தேடி வருகின்றனர். இவன் குடித்துவிட்டு ஒன்றுமறியாத ஆப்கானிஸ்தானை மக்களை கொன்று வருகிறான் என்றும் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ -வாக இருக்கக்கூட தகுதியில்லாத மோடி எப்படி பிரதமர் ஆக முடியும் : மேதா பட்கர் !

மேதா பட்கர்... மங்கலான நிறத்தில் கந்தலான காட்டன் புடைவை, எப்போதோ சீவப்பட்ட‌ கூந்தல், களைப்பான முகம், தோளில் ஒன்று கையில் ஒன்று என இரண்டு ஜோல்னா பைகள், நிறைய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பேசும் காகிதக் கத்திக‌ளோடு நாடு முழுக்கச் சுற்றி வரும் நம் நூற்றாண்டின் போராளி. இவர் சமிபத்தில் ஒரு இதழ்க்கு அளித்த பேட்டி
 ''ஒரு பக்கம் சமூகத்தின் சகல தளங்களிலும் பெண்கள் முன்னேற்றம் காண்கிறார்கள். ஆனால், மறுபக்கம் நாட்டின் தலைநகரிலேயே ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி கொடூரமான பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அவலம் அரங்கேறுகிறதே?'
''டெல்லி கேங் ரேப்... மூன்று நாட்களாக எனக்குத்
தூக்கமே வரவில்லை. 'குற்றவாளிகளைக் கொடூரமாகக் கொல்ல வேண்டும். தூக்கில் போட வேண்டும்’ என்று நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அரசியலே அறியாமல் கூப்பாடு போடுப‌வர்கள்தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்குக் காரணம் என்பேன் நான். கொஞ்சமும் யதார்த்தம் புரிந்து கொள்ளாமல் இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் வீதிக்கு வந்து போராடும் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஒரு விதத்தில் காரணமானவர்களே. ஆட்சியாளர்களும், ஊடகமும், காவல் துறையும் மட்டுமே காரணம் அல்ல... கார்ப்பரேட் சூழல் அதர்மம், பணம் என மாறிவிட்டதால் பெண்களைப் போகப் பொருளாகவும், ஆபாசத்தை அள்ளித் தரும் விற்பனைச் சரக்காகவும் மட்டுமே பார்க்கிறார் கள். இன்று சினிமாவில் மட்டுமா, சமூகத்தின் அத்தனை தளங்களிலும் பெண்களைக் காம உணர்வுகளைத் தூண்டும் ஒரு பட்சியாகவே பாவிக்கிறார்கள். இந்த நிலை மாறும் வரை இதுபோன்ற கொடூரமான பாலியல் பலாத் காரங்களும், பெண்கள் மீதான வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.''
''நரேந்திர மோடி மீண்டும் குஜராத் முதல்வர். அவருக்கு எதிரான உங்கள் போராட்டங்கள் வீணாயிற்றே?''
''நாம் நமது தேர்தல் செயற்பாட்டு முறைகளையும் விதிகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என குஜராத் தேர்தல் முடிவுகள் மீண்டும் நமக்குச் சத்தமாகச் சொல்லி இருக்கின்றன. நர்மதா அணை விவகாரம், சிறுபான்மை இனத்தின் மீதான தாக்குதல், முதலாளித்துவப் போக்கு, மிரட்டல் யதேச்சதிகாரம் போன்ற ஏராள அடக்குமுறைகளுக்கு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும். மோடியின் வெற்றி அவருக்கு எதிரான எங்கள் பிரசாரப் பணிகளைப் பாதிக்காது!''
''ஆனால், 'நரேந்திர மோடியின் அடுத்த இலக்கு இந்தியப் பிரதமர் பதவி’ என்று அரசியல் அரங்கில் ஹேஷ்யங்கள் பரபரக்கின்றனவே?''
''அதெல்லாம் நாடக வசனங்கள். பொருட்படுத்தத் தேவை இல்லை. ஒரு எம்.எல்.ஏ-வாக இருக்கக்கூட தகுதி இல்லாதவர் மோடி. பிறகு எப்படி அவர் பிரதமர் ஆவார்? பி.ஜே.பி-யில் இருப்பவர்களே அவரை ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை. பிறகு, மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?''
''கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை மக்கள் ஓயாமல் விதவிதமாகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மத்திய, மாநில அரசுகள் அவர்களை ஒடுக்குவதிலேயே அக்கறை காட்டுகிறதே?'
''கூடங்குளம் மக்களின் தொடர் போராட்டம் நாடு முழுக்க ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது. என்னை இயக்கும் மாபெரும் உந்து சக்தியாக இருக்கிறது. அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு மக்கள் இன்னமும் களத்தில் நிற்பது ஆச்சர்யம் அளிக்கிறது. கூடங்குளம் மக்களின் போராட்டத்தை முதலில் ஆதரித் தும் பிறகு எதிர்த்தும் ஜெயலலிதா போட்ட அரசியல் நாடகம் பெரும் கண்டனத்துக்கு உரியது. தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களிடம் மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா பேசக்கூட இல்லை. நான் அங்கு சென்றிருந்தபோது, 'நாங்கள் இவ்வளவு போராடியும்... புரண்டு அழுதும்... அரசாங்கத்துக்கு எங்கள் குரல் கேட்கவே இல்லையே’ என நிறையப் பெண்கள் கண்ணீர்விட்டார்கள். நாட்டின் எந்த ஒரு பொருளாதார வளர்ச்சியும் நாட்டு மக்க ளின் நலனுக்காக, அவர்களுடைய தார்மீக விருப்பத்தின் பேரிலேயே நிறைவேற்றப்பட வேண்டும்!''
''தமிழகத்தில் தர்மபுரி அருகே தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எப்படிப் பார்க் கிறீர்கள்?''
''சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆதிவாசிகளின் வாழ்வும், தலித் மக்களின் வாழ்வும் இன்னும் மேன்மை அடையவில்லை. நாம் சர்வ சாதாரணமாக அனுபவிக்கும் எந்த வசதிகளும் உரிமைகளும்கூட அவர்களுக்குக் கிடையாது. ஆனால், சகல வசதிகளையும் அனுபவிக்கும் கார்ப்பரேட்களைவிட அந்த மக்களே இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். தர்ம‌புரி சம்பவத்தை நேரில் சென்று பார்க்க முடியாமல் போய்விட்டது. காதல், கல்யாணம் என்பதெல்லாம் சும்மா ஒரு காரணம். அடிமனதில் கனன்றுகொண்டு இருந்த வன்மம்தான் அந்த மக்களின் மீதான வன்முறைக்குக் காரணம். தமிழ்நாட்டில் இந்த விஷயத்தை யாரும் சரியாகக் கையாளவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் 'தமிழர்... தமிழர்...’ என்று பேசுகிற கட்சிகள், அமைப்புகள்கூட இந்த விவகாரத்தில் மௌனியாக இருக்கின்றன. இவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை விடவும் ஆபத்தானவர்கள். ஏன், தமிழ் நாட்டில் இருக்கும் தலித்துகள் யாரும் தமிழர்கள் இல்லையா?''

Tuesday, January 01, 2013

முதுமையை தடுக்கும் பலாப்பழம்

மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும்,அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.

நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.

அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்:

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன்

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

மழை காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது...

மழைக் காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது!

'மழை காலங்களில் சிறந்த உணவு எது?'னு பலருக்கு சந்தேகம் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாதுனு குழப்பமா இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்; சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும். இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ...

* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.

* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

* சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீ­ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்­ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.

* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.

மாவீரன் அலெக்சாண்டர் :

மாவீரன் அலெக்சாண்டர் கி.மு.356 முதல் 323 வரைமாமன்னன் அலெக்சாண்டர் மாசிடோனியா நாட்டின் தலைநகரான பெல்லா (pella) என்ற இடத்தில் 2 ஆம் பிலிப்ஸ் மன்னருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை மிகுந்த மதிநுட்பமும் வீரமும், முயற்சியும் மிக்கவர். எனவே, அவர் தனது மகனை அறிவிலும் _ ஆற்றலிலும், மெய் ஞானத்திலும், தன்னம்பிக்கையிலும் சிறந்த ஒரு துடிப்புள்ள இளைஞனாக்க விரும்பினார். அலெக்-சாண்டருக்குப் பதிமூன்று ஆண்டுகள் நிரம்பியதும் 2ஆம் பிலிப்ஸ் மன்னர் தன் மகனைத் தக்க ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அப்படி, இவருக்கு ஆசிரியராக அமைந்தவர்தான், மாபெரும் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். அரிஸ்டாட்டில் தம்மிடம் கல்வி கற்க விரும்பிய மாணவர்களுக்கு அறிவியல், அரசியல், தத்துவம், தர்க்கவியல், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளைக் கற்றுத் தந்தார். இளவயதிலேயே தந்தையின் குறிக்கோளையும், மாசிடோனிய அரசை உலகில் மிகப்பெரிய அரசாக மாற்ற எண்ணி அவர் பல வெற்றிகளை ஈட்டியதையும் கண்டு ஊக்கம் பெற்றார்.

அரிஸ்டாட்டிலிடம் பயின்ற அலெக்சாண்டர், பின்னர் மாசிடோனியாவை ஆண்டபோதும் சரி, அங்கிருந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் மலைப் பிரதேசங்கள், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக வென்று மாபெரும் பேரரசாகத் தன் நாட்டை மாற்றிய போதும் சரி, இவரது படைக்குத் தலைமை தாங்கியவர்களும், இவரைப் பின்தொடர்ந்தவர்களும் வேறுயாருமல்லர், அரிஸ்டாட்டிலின் கல்விக்கூடத்தில் இவருடன் உண்டு, உறைந்து கல்வி பயின்றவர்கள் - இவரது உயிர் நண்பர்கள்.

ஒத்த கருத்துடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து செயல்படும்போது அங்கு விளைவது வெற்றிக்கனி மட்டும்தான். ஆகவேதான், அலெக்சாண்டர் தன் வாழ்நாளில் ஒருமுறைகூடத் தோல்வியைத் தழுவியது இல்லை.

அடுத்து அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் இவர் கிரேக்க அறிஞர் ஹோமரின் புகழ் வாய்ந்த இதிகாசங்களான இலியட் (ILLIAD) மற்றும் ஒடிசி (ODYSSEY) ஆகிய நூல்களைக் கற்றுத் தெளிந்தார். இந்நூல்கள்தான் இவருக்கு உந்தாற்றலாக அமைந்து வாழ்க்கையில் வெற்றிக்கு மேல் வெற்றிபெற அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன என்பதை வரலாறு உணர்த்துகிறது. இவர் போரின் நிமித்தமாகவோ அல்லது அரசியல் அலுவல்கள் காரணமாகவோ அல்லது சேவை நோக்கத்துடனோ வெளியே செல்லும் போதெல்லாம் இந்த நூல்களை உடன் பயில எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் வரலாற்று முறையில் அறிகிறோம்.

அலெக்சாண்டரின் அவா

இவரிடம் நாடுகளை வெல்லும் எண்ணம் மட்டும் இருந்ததாக யாரும் நினைத்து விடக்கூடாது. உலக நாடுகள் அனைத்தையும் வென்று, தன் ஒரே குடைக்கீழ் அந்நாட்டு மக்களையெல்லாம் ஒருங்கிணைத்து, பின் தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் வழியில் தனி நாகரிகம் உடையவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், மிக்க ஞானம் பெற்றவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதே அவர் அவா.

நட்பின் இலக்கணம்

அலெக்சாண்டருடன் இளம் வயதிலிருந்தே பயின்றவரும் - அவருடன் எல்லாச் செயல்களிலும் பங்கு கொண்டவரும் - உயிர்த்தோழராக விளங்கியவரும் - சிறந்த சான்றோருடைய (Noble) மகனாய்த் தோன்றிய ஹெபாஸ்டியன் (HEPHAESTION) ஆவார். இவர் அலெக்சாண்டர் படை எடுத்துச் சென்ற நாடுகளிலெல்லாம் படைவீரர்களை முன்நடத்திச் சென்ற தளபதி. அலெக்சாண்டர் தன்னிடம் உள்ள இரகசியங்களை எல்லாம் இவரிடமே கூறுவது வழக்கம். இவ்விருவரும் ஓருயிர் ஈருடலுமாய் வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு முறை ஹெபாஸ்டியன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். செய்தி அலெக்சாண்டருக்கு எட்டியது. நண்பனைக் காண அவர் விரைந்து வந்தார். ஆனால், அவர் வருமுன்னரே ஆருயிர் நண்பன் தன் இன்னுயிர் துறந்தான். செய்தி அறிந்த அலெக்சாண்டர் துடிதுடித்தார். செய்வதறியாது திகைத்தார். இறுதியில் தன் நண்பனுக்கு 60 அடி நீளச் சிதையை மூட்டி அடக்கம் செய்தார். அச்சிதை 7 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு தனித்தன்மை மிளிர்ந்தது. எண்ணற்ற பொருட்செலவில் தன் நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உண்மை நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தியவர் அலெக்சாண்டர். இதுவரை இவ்வளவு பொருட்செலவில் ஒரு நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர் வேறு எவரும் இல்லை எனலாம். இனிய நண்பரை இழந்த பின்னர் அலெக்சாண்டர் சிறிது காலம் மட்டுமே உயிர்வாழ்ந்து தமது 33 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் போல இவரும் 80 ஆண்டு காலம் வாழ்ந்திருந்தால் இன்று உலகம் துண்டுபட்டுப் போயிருக்காது. பாரதிதாசன் பாடலுக்கு ஏற்ப உலகம் முழுதையும் ஒன்றெனக் கூட்டி - அதில் மானிட சமுதாயம் நன்றெனக் காட்டியிருப்பார். ஆனால், இயற்கை யாரைத்-தான் விட்டுவைத்தது?

மன்னிக்கும் மாண்பு

ஒரு முறை அலெக்சாண்டர் டியோன்டஸ் என்ற கடற்கொள்ளைக்காரன் ஒருவனைச் சிறைப் பிடித்தார். தண்டிக்க நினைத்தார். அவனைப் பார்த்து, நீ எதை நினைத்துக் கொண்டு மக்களுக்கெல்லாம் பெருந்தொல்லைகளை விளைவிக்கிறாய்? என்று வினவினான். அதற்கு டியோன்டஸ் சற்றும் அஞ்சாது, அலெக்சாண்டரைப் பார்த்து, நான் ஒரே ஒரு கப்பலை வைத்திருப்பதால்தானே, நீ என்னைச் சாதாரணமானவன் என்று நினைத்து இவ்வாறெல்லாம் பேசுகிறாய். நீ, பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன். ஆகையால், நீ எதை நினைத்துக் கொண்டு இவ்வுலக நாடுகளை எல்லாம் உன்வசம் கொண்டு வருகிறாய்? என்று எதிர்வினா எழுப்பினான். அதற்கு அலெக்சாண்டர் பதிலேதும் பேசாமல் அவனை மன்னித்து அனுப்பியதாக வரலாறு கூறுகிறது.

உயர்ந்த குறிக்கோளும் - ஓயாத உழைப்பும், தேர்ந்த மதி நுட்பமும், சிறந்த தத்துவ ஞானமும் வாய்க்கப் பெற்றவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். போர்க்களத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்தவர் அல்லர் மாவீரர் என்பவர். தன்னொத்த மக்களை அன்பால், பண்பால் அணைத்துச் செல்பவரே மாவீரர். தனது மனித நேயத்தால் மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தவர்தான் மாவீரன் அலெக்சாண்டர். அவர் வாழ்ந்து காட்டிய எளிய வழிமுறைகள் இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன. பிஞ்சுகளே! படித்து மகிழுங்கள் - அலெக்-சாண்டருக்கு நிகராக வாழ்ந்து காட்டுங்கள்!

பொன் வேண்டுமா?

ஒருமுறை அலெக்சாண்டர் தாம் செல்லும் வழியில் வறியவன் ஒருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் - தன்னைக் கண்டு எவ்விதச் சலனமும் இல்லாமல் இருப்பதையும் கண்டு வியப்புற்றார். தனது பெருமைகளை எல்லாம் பலவாறு எடுத்துச் சொல்லியும் அவன் தனக்கு எவ்விதத்திலும் அடிபணியவில்லை. இதனை அறிந்த அலெக்சாண்டர் அவனிடம், அய்யனே! உனக்கு என்ன வேண்டும்? சொல்! பொருள் வேண்டுமா? பொன் வேண்டுமா? பதவி வேண்டுமா? இல்லை.... எனக்குச் சொந்தமான நாடுகள் அனைத்தும் வேண்டுமா? அத்தனையும் உனக்கு ஒட்டுமொத்தமாகத் தருகிறேன், யாதுவேண்டும்? என்று வினவினான். அதற்கு அவ்வறியவன், எனக்கு இவற்றில் எதுவும் வேண்டாம்...கொஞ்சம் நகர்ந்து செல்லுங்கள், குளிரில் நடுங்கும் என்மீது வெதுவெதுப்பான சூரிய ஒளி படும் அளவுக்கு வழிவிட்டு நில்லுங்கள் என்று பதிலளித்தான். பொன்னையும், பொருளையும், சாம்ராஜ்யங்-களையும் ஒரு பொருட்டாக மதிக்காத அந்த வறியவன் செயல் - மாவீரன் அலெக்சாண்டரின் உள்ளத்தைத் தொட்டது. உள்ளத்தில் புதிய எண்ணம் உதித்தது - நிலையாமையை உணர்ந்தார். அதன் பின்னர் அவருடைய இறுதிக் காலத்தில் ஒருவர் எத்தகைய பெருமை-களைப் பெற்றிருந்தாலும், எத்தனை நாடுகளைத் தன்வசம் கொண்டு மாபெரும் மன்னனாக வாழ்ந்து, ஒரு போதும் யாருக்கும் அடிபணியாத தளபதியாக வாழ்ந்தவராயினும் அவர் இறக்கும்போது எதையும் கொண்டு செல்-வதில்லை என்பதை இவ்வுலக மக்களுக்கு உணர்த்த நினைத்தார். அதற்கேற்ப அலெக்-சாண்டர் தான் இறந்தபின்னர் தனது உடலை ஒரு பேழைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளும் திறந்த வண்ணம் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இங்ஙனம் தமது இறப்பிலும் ஒரு புதுமையைப் புகுத்தி அழியாப் புகழ் பெற்றார்.

முடிவுரை

எத்தகைய புகழும், பொருளும் சில நேரங்களில் பயனற்றுப் போகும் என்பதை அலெக்சாண்டர், தம் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்தார். அப்பட்டறிவுதான், அவரைப் பிற்காலத்தில் மெய்யறிவு வழியில் செலுத்தியது. மண்ணாசை துறந்தார்! மனித நேயம் பூண்டார். இவர்தான் பிற்காலத்தில் மாவீரர் எனப் போற்றப்பட்ட நெப்போலியன் ஜூலியஸ் சீசர், மற்றும் அகஸ்டஸ் சீசர் போன்ற பலருக்கும் வழிகாட்டியாகவும், உந்தாற்றலாகவும் விளங்கினார். அதனால்தான் வரலாறு அவரை மாவீரர் அலெக்சாண்டர் (Alexzander the Great) என்று அழைத்துப் பெருமை கொண்டது.

Blogger Wordpress Gadgets