எகிப்திய இஹ்வான்களது அரசியல் கட்சியான எப்.ஜே.பி.யின் உபதலைவர் டொக்டர் இஸாம் அல் இர்யான், அறப் லீக்கின் கீழ் இயங்கும் அறபு பாராளுமன்றத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு 63 வாக்குகளில் 48 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் முபாறக்கின் தேசிய அபிவிருத்திக் கட்சி எம்.பி.யான முஸ்தபா அல் பிக்கி இப்பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸாம் அல் இர்யான் இஹ்வான்களது உயர்பீட அங்கத்தவராக இருந்தவர். தற்போது எகிப்திய பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுத் தலைவராக உள்ளார்.
No comments:
Post a Comment