Facebook Twitter RSS

Thursday, March 15, 2012

Widgets

ஹதீஸ்


சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி,

படுக்கைக்குச் செல்லும்போது, ஒருக்களித்து படுத்து ,கீழ்
கண்ட துஆ வை ஓதவும் !

எளிதில் மனனம் ஆகும் இந்த துஆக்களை அன்றாடம் நாம் ஒதுவதுடன்... இதை அன்றாடம் கடைபிடித்து அல்லாஹ்வின் அருளை பெறுவோமாக!

இன்ஷா அல்லாஹ் .......அல்லாஹ் வழங்கும் சொர்க்கத்தைப் பெறுவோமாக!
அந்த பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் கிடைக்கச் செய்வானாக!
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு ...

நம் மனதில் பதிய வைக்க வேண்டிய அவசிய துஆக்களை, நாம் பார்த்து வருகிறோம்...

இந்த துஆவும் அவசியமானதே ...அனைவரும் மனனம் செய்து ,நம் வாழ்வில் கடைபிடிப்போமாக!!



****இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை*****


ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 1154

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ للهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ اَللّهُمَّ اغْفِرْ لِيْ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து,வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்(B]ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(B]ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B]ல்லாஹி, அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets