ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து, நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது. ரஷ்யாவில், கடந்த 4ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அதில், பிரதமர் விளாடிமிர் புடினின் ஆளும் கட்சி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது. பிரதமர் புடின் முறைகேடுகள் குறித்து, வாய் திறக்கவில்லை.
ஆனால், அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், அரசியலில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அறிவித்தார். ஆனால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளனர். இதனால், கடந்த வாரங்களில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பேரணிகளை நடத்தின. இந்நிலையில், நேற்று, இதுவரை ரஷ்யா எதிர்பாராத அளவிற்கு, தலைநகர் மாஸ்கோவில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, பிரமாண்ட பேரணி நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அலக்சி நவான்லி பேசுகையில், "இனி, ரஷ்யா ஊழலைப் பொறுத்துக் கொள்ளாது. இந்தக் கூட்டம், பார்லிமென்டைக் கைப்பற்ற போதுமானது தான். ஆனால், நாம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விளாடிவோஸ்டோக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தன.
No comments:
Post a Comment